Header Ads



நசீர் அஹ்மட்க்கு, ஒஸ்டின் பெர்னாண்டோ கண்டனம்


கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டின் நடவடிக்கைகளுக்கு ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் சம்பூரில் கடற்படை அதிகாரி ஒருவரை கடுமையான திட்டியமை குறித்து இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

பொது மக்கள் மத்தியில் முதலமச்சர் இவ்வாறு செயற்பட்டிருக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். திட்டப்பட்ட அதிகாரி பிரதேசத்திற்கு பாரியளவில் சேவையாற்றிய ஒருவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும், தாம் குறித்த சந்தர்ப்பத்தில் நிலைமையை சமாதானப்படுத்தவே முயற்சித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.