Header Ads



2866 குடும்பங்கள் மீள்குடியேற முடியாது - கட்டட ஆராய்ச்சி நிறுவனம் திட்டவட்டம்

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களில் ஏற்கனவே குடியிருந்த 2866 குடும்பங்கள் எச்சரிக்கை விடுத்துள்ள பகுதிகளில் மீள்குடியேற முடியாது என கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கட்டட ஆரயாச்சி நிறுவனத்தின் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார மேலும் குறிப்பிடுகையில்,

மண்சரிவு அனர்த்தங்களின் காரணமாக பல உயிரிழப்புகளை இலங்கைக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த வருடம்

மீரியபெத்தை மண்சரிவினால் பலர் உயிரிழந்தனர். அதேபோன்று கடந்த 17 ஆம் திகதி அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் மூன்று கிராமங்கள் முழுமையாக புதையுண்டன. இதன்காரமாக இதுவரைக்கும் 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் காணமால் போயுள்ளனர். புளத்கொஹ_ப்பிட்டியவிலும் மண்சரிவு ஏற்பட்டு 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. அத்துடன் கடுகண்ணாவ இலுக்குவத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 6 பேர் புதையுண்டு உயிரிழந்தனர்.

மேற்குறிப்பிட்ட மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்ட இடங்கள் அனைத்தும் ஏற்கனவே கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிரதேசமாகும். மக்கள் வெளியேற மறுத்ததன் விளைவாகவே இவ்வாறான அனர்த்தம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களில் இனிமேல் மக்களை மீள்குடியேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் கேகாலை மாவட்டத்தில் 1762 குடும்பங்களும், கண்டியில் 652 குடும்பங்களும், இரத்தினபுரியில் 230 உம், நுவரேலியாவில் 114 உம்,மாத்தளையில் 42 உம், குருநாகலையில் 31 உம், காலியில் 15 குடும்பங்களும்  கொழும்பு மற்றும் கம்பஹாவில் 15 குடும்பங்கள் தற்போதைக்கு எச்சிரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் பதுளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படும் 661 இடங்கள் கண்டறியப்பட்டு இது தொடர்பிலான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் தற்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி ,கொலன்னாவை, கடுவலை மற்றும் அவிசாவளை உள்ளிட்ட பிரசேதங்களில் துப்பரவு செய்யும் வேலைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்காக அயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரா்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்றார்.

(எம்.எம்.மின்ஹாஜ்)

No comments

Powered by Blogger.