Jaffna Muslim இணையத்தை தடைசெய்த மஹிந்த, இன்று ஊடகச் சுதந்திரத்தை மதிக்கனும் என்கிறார்
ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் ஊடகச் சுதந்திரத்தை மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெலியத்தையில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் யுத்தம் ஒன்று நடந்ததையே சிலர் மறந்து விட்டார்கள் என்று மேலும் கூறினார்.
யுத்தத்துடன் தொடர்புடைய தகவல்களை வெளியிடுவதற்கு எதிராக ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்த அதிகார தரப்பினர் முயற்சித்தார்கள் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தன்னோடு இருந்து விட்டு தற்போது முன்னைய அரசாங்கத்தை பற்றி கூறி கட்சி தாவும்சிலரின் கருத்துக்களை தொலைக்காட்சி மூலம் பார்க்கும் போது தனக்கு சிரிப்புவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் தற்போது இவர்கள் தன்னை ஒருகாலும் சந்தித்ததில்லை என்றும்,தன்னிடம் எந்த உதவியையும் கோரவில்லை என்றும் சொல்லி திரிவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பு . மஹியங்கனை பள்ளிவாசலுக்குள் பன்றித் தலை வீசப்பட்டமை, அந்த பள்ளிவாசல் தலைவர் மிரட்டப்பட்டமை, அதில் முஸ்லிம் அரசியல்வாதிக்கிருந்த தொடர்பு, தமிழ் ஊடகவியலாளருக்கு இருந்த தொடர்புகள் குறித்து jaffna muslim இணையம் ஆதாரங்களுடன் செய்திகளை பிரசுரித்தது. இதையடுத்து உடனடியாக மஹிந்த அரசாங்கத்தினால் jaffna muslim தடை செய்யப்பட்டது. இந்த தடைக்கு எதிராக சகல முஸ்லிம் அரசியல்வாதிகளும் மௌனம் காத்துநின்ற போது, jaffna muslim இணையத்தின் தடையை நீக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் முதன்முதலாக துணிச்சலாக குரல்கொடுத்தது மங்கள சமரவீர என்பது குறிப்பிடத்தக்கது.
மைத்திரி _ ரணில் அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் jaffna muslim இணையம் மீதான தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு எல்லாம் மறந்து போயிட்டு. இப்ப விசர் பிடிச்சிட்டு. அதனால்தான் உளறித் திரிகிறாரு. பாவம்.
ReplyDelete