Header Ads



UNP யின் பலத்தை காட்டவேண்டும் - ரணில் கட்டளை

கொழும்பு மாவட்டத்தில் நடைபெறும் மிகப் பெரிய மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

புத்தாண்டுக்காக வாழ்த்து தெரிவிப்பதற்காக நேற்று -20- அலரி மாளிகைக்குச் சென்றிருந்த அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் அனைவரும் ஒன்றிணைந்து இம்முறை மே தினக் கூட்டத்தை வெற்றிகரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மே தினத்துடன் அரசாங்கத்தின் பலத்தை நிருபிக்க வேண்டும எனவும் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பிலும் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.

“அர்ப்பணிப்புடன் செயற்படும் மக்களுக்கு புதிய நாடு” என்ற தொனிப் பொருளில் இம்முறை மே தினக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

மே தினக் கூட்டத்தை சிறந்த முறையில் நடாத்த அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. He has no empathy for suffering people in this country. This so-called good-governance is a good governance only by name. Insha Allah people will teach a good lesson to this draconian government in forthcoming election.

    ReplyDelete

Powered by Blogger.