95 வயது தாய், கூட்டில் அடைபட்டிருந்த நிலையில் மீட்பு - வவுனியாவில் பரிதாபம்
-Tm-
வவுனியா சாந்தசோலை கிராமத்தில் பெற்ற தாயை (வயது 95) கூட்டில் அடைத்து வைத்துள்ளதாக சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது.
வவுனியா சந்தசோலைக் கிராமத்தில் வசித்துவரும் நபரொருவர் தனது தயை 5 வருடங்களாக கூட்டில் அடைத்து வைத்துள்ளதாக பொதுமகன் ஒருவரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார், தாயை மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதேவேளை, குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, தாயை கொடுமைப்படுத்தவில்லை எனவும் அவரை நல்லமுறையில் பராமரித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், தன் மீது தவறான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment