Header Ads



"விதிகளை கருத்திற்கொண்டு கருமமாற்றுவோம்"

ஹுஸ்னி ஹனீபா (ஜாமிஆ நளீமியா)

ஒவ்வொன்றுக்கும் விதிகள் இருக்கின்றன குறித்த அவ்விதிகள் கருத்திற் கொள்ளப்படாத போதே ஒவ்வொன்றினதும் சமனிலைத்தன்மை இழந்து குழப்பங்களும்  ஒழுங்கீனங்களும் தோன்றுகின்றன.

ஏன் இந்த பிரபஞ்ச இயக்கத்துக்கு பின்னாலும் அல்லாஹ் முக்கிய விதிகளை விதித்திருக்கின்றான். அதனை سنن الله என்போம். எந்த விதிகளை இயக்கிவிடும் பொறுப்பை மனிதனிடம் ஒப்படைத்துள்ளான். எனவே அது மீறப்படும் பொழுதே உலகத்தில், பிரபஞ்ச ஒழுங்கில் ஒழுங்கீனம் ஏற்படுகிறது.  இயற்கை அழிவுகள் என அதற்கு பெயர் கொடுக்கிறது விஞ்ஞானம் ஆனால் மனித சம்பாரிப்பின் வெளிப்பாடுகள்தான் அவை என்கிறது இஸ்லாம்,
" بما كسبت ايدي الناس" 

எப்படி அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் விதிகளை இட்டுள்ளானோ அது போன்றே அவனது தூய மார்கத்தை வாழவைப்பதற்கும் , ஸ்தீரப்படுத்துவதற்கும் , நிலைநாட்டுவதற்கும் சில விதிகளை இட்டுள்ளான் . அவைகள் மீறப்படும் பொழுதே மார்க்கத்தின் பெயரால் சீர்கேடுகளும் ஒழுங்கீனங்களும் தோன்றி தூய்மையான மார்க்கம் பற்றிய ஒரு பிழையான விம்பம் உருவகிக்கப்படுகிறது. 
இங்கு புரிதலுக்காக அல்லாஹ் விதித்திருக்கும் ஏரலமான விதிகளில் முக்கியமான ஒரு விதியை நோக்குவோம் 

" எமது இலக்குகள் தூய்மையாக இருப்பதைப் போல அதனை அடைந்து கொள்ளும் வழிமுறையும் தூய்மையாக இருக்க வேண்டும் "" இதனை அறபு மொழியில் " الغايات لا تبرر الوسيلات" என்பார்கள் 

எமது மொழி வழக்கில் இதனை விளங்கப்படுத்துவதாக இருந்தால்
""" பக்கத்து வீட்டு கோழியை களவாடி பள்ளிக்கு குர்பான் கொடுப்பதைப் போல """ 
என சுருக்கமாக சொல்லலாம் அதாவது இலக்குகள் , நோக்குகள் மாத்திரம் தூய்மையாக இருந்து போதாது அதனை அடைந்து கொள்வதற்காக நாம் உபயோகிக்கும் முறைமைகளும் தூய்மையானதாக பிறருக்கு நன்மை பயக்க கூடியதாக பிறரது உரிமையிலும் உடமையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத அல்லாஹ்வும் , தூதரும் அடையாளப்படுத்தியுள்ள வழிமுறைமகளும் தூய்மையான வடிவில் பின்பற்றப்பட வேண்டும் என்பதனையே இஸ்லாம் விதியாக விதித்துள்ளது

அண்மைக்கால எமது இலங்கை நாட்டின் இலக்கு தூய்மையாக அமைந்து வழிமுறைமையில் தூய்மைத்தன்மை பேனப்படாத தஃவா முறைமையிலிருந்து இதற்கான ஒரு உதாரணத்தை குறிப்பிடலாம் 

அல்லாஹ்வின் மார்க்கத்தை எத்திவைத்தல் , நன்மைகளை வாழ வைத்தல் மார்க்கத்தில் , மார்க்கத்தில் நூதனங்களை அழித்தல் என்ற தூய இலக்குகளை சாத்தியப்படுத்த பிறரது மானங்களில் கைவைத்து , திட்டி , வழிகேடு , நிராகரிப்பு பட்டம் கொடுத்து பாவத்தோடு , நூதனத்தோடு சம்பந்தப்பட்ட தரப்பை நரகவாதி என முத்திரை குத்தி மேடை போட்டு பகிரங்க விவாதத்துக்கு அழைத்து பகிரங்கமாகவே மானத்தை விற்று கடும் போக்குத்தனமாக பிறரது முள்ளம் தண்டில்  ஏறி நின்று தூய்மை அற்ற வழிமுறைமைகளுக்கூடாக அந்த தூய்மையான இலக்குகளை அடைய முற்படும் பொழுதே மார்கத்தின் பெயராலையே பிரச்சினைகளும் சிக்கல்களும் தோன்றி சமூக ஒருமைப்பாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுவதை அவதானிக்கின்றோம்.

இதற்கு மாற்றமாக குறித்த அந்த தூய்மையான இவ்விலக்குகளை அடைய இஸ்லாம் தூய்மையான பண்பாட்டு வழிமுறைகள் என்ற ஒன்றை நிர்ணயித்துள்ளது . உதாரணமாக பாவத்தில் ஈடுபடுகின்ற அல்லது தவறிலைத்த  ஒரு மனிதனை பாவி என முகத்தில் பாய்ந்து இன்னும் அவனுக்கும் பாவத்தை சுட்டிக் காட்டுபவனுக்கும் இடையில் உள்ள இடைவெளியை கூட்டிக் கொள்ளாமலும் இருக்க தவறு செய்பவனின் உள்ளத்தை வென்றெடுத்து அவனது தவறு பிழை என அவன் உள்ளத்தால் உணர்வதற்குமாக பாவியை முன்னிலையில் விழித்து பேசாமல் படர்கையில் பாவத்தை சுட்டிக்காட்டும் நபி வழியை உதாரணமாக குறிப்பிடலாம் அதாவது நபியின் அவைக்கு ஒரு மனிதன் பாவம் செய்து விட்டு வந்தால்  அல்லாஹ்வின் தூதர் குறித்த அந்த மனிதரின் பெயரை சொல்லி அவர் செய்த பாவத்தையும் சொல்லி நீ ஏன் இப்படி செய்தாய்? எனக் கேட்டு நீ செய்த இப்பாவத்துக்கான கூலி நரகம் தான் எனக் கூறி தீர்ப்பு சொல்ல மாட்டார் மாற்றமாக " ما بال أقوام يفعلون كذا......""" """ இப்படி செய்கின்ற கூட்டம் சம்பந்தமாக என்ன நிணைக்கின்றீர்கள் ?"""" என பன்மையில் படர்க்கையாகவே குறித்த அந்த விடயத்தை சுட்டிக்காட்டுவார்!!!!!!!!

எனவே குறித்த இவ்விதியை கவனத்திற் கொண்டு கருமமாற்றும் போது பல நேர் விளைவுகளை கண்டு கொள்ளலாம்.

No comments

Powered by Blogger.