"இப்ப ஒங்களுக்கு, சரிப் பெய்த்து எனா..."
-எம்.ரிஸான் ஸெய்ன்-
"இன்டக்கா நெனவு வந்த"
"போதும் நெனவு வந்தது"
"இப்ப ஒங்களுக்கு சரிப் பெய்த்து எனா"
"நீங்க இப்ப பெரியாளே"
"ஒங்களுக்கென்ன"
"வாசிபட்டவுடன் சத்தமே இல்ல"
"Job கிடச்சொன்னே மறந்துட்டிங்க"
"கலியாணம் முடிச்சொன்னே ஆள் மாறிட்டீங்க" இப்படி..இப்படியாக..
பரிகாசத் தோரணையிலோ..
சும்மா சொன்னேன் என்றோ...
நாசுக்கான கிண்டலை உள்வைத்தோ...
மொழிச் சாடல்களோடு..
உள் குத்தல்களோடு..
"இன்டக்கா நெனவு வந்த"
"போதும் நெனவு வந்தது"
"இப்ப ஒங்களுக்கு சரிப் பெய்த்து எனா"
"நீங்க இப்ப பெரியாளே"
"ஒங்களுக்கென்ன"
"வாசிபட்டவுடன் சத்தமே இல்ல"
"Job கிடச்சொன்னே மறந்துட்டிங்க"
"கலியாணம் முடிச்சொன்னே ஆள் மாறிட்டீங்க" இப்படி..இப்படியாக..
பரிகாசத் தோரணையிலோ..
சும்மா சொன்னேன் என்றோ...
நாசுக்கான கிண்டலை உள்வைத்தோ...
மொழிச் சாடல்களோடு..
உள் குத்தல்களோடு..
நீண்ட நாட்களுக்குப் பின்னர் எமக்கு நெருங்கிய உறவுகளை சந்திக்கும் போது எமது சம்பாஷணை அல்லது உரையாடல் மேற்சொன்னவாறு தொடங்குவதை அவதானிக்கின்றோம்.
இவ்வாறான மொழிப் பிரயோகம் "கற்றல்" ( learning) ஆகிவிட்டது மட்டுமல்ல அது வழக்காறாகிவிடுமளவிற்கு ( becomes a habit) உருவெடுத்ததுள்ளது.
இவ்வகையான உரையாடல் தொடக்கம் ஆரோக்கியமானதொன்றா ..?
ஒருவரை சந்திக்கின்ற போது முற் தீர்ப்புகளோடு ( pre judgmental)அணுகுதல் இடம்பெறும் போது உறவின் பாலம் உடைந்து போகின்றது. குறிப்பிட்டவரை பற்றி அவர் இப்படி அப்படி என்று நாங்கள் தீர்மானித்துக் கொண்டு சந்திக்கும் போது எப்படி அது தூய்மையான தோற்றத்தைத் தரும். ஒருவரை ஏற்பது( Acceptance)முறையாக இருத்தல் வேண்டும். நம்பிக்கையும் நல்லெண்ணமும் கட்டியெழுப்பப்படாமல் உறவை கட்டிபெழுப்புதல் ( Rapport building)நடைபெறாது. அங்கே புரிந்துணர்வு இருக்காது. உரையாடல் தொடங்கும்போது சந்திக்கின்றவர்களை சௌகரியப்படுத்தல்(comfortable) வேண்டும்.
"ஒங்கல மிச்ச நாளக்குப் பொறகு சந்திச்சது மிச்சம் சந்தோஷத்த தார" என்ற வகையில் தொனியிலும் பேச்சிலும் முக பாவனையிலும் அங்க அசைவுகளிலும் மற்றவர் உண்மைத்தன்மையை உணரும் வகையிலும் எமது நடத்தை அமைவது முக்கியமாகும்.நேர்மறையான எண்ணங்களோடும் முகமலர்ச்சியோடும் சந்திக்கும் போது அந்த இடம் மற்றும் சூழல் நேர்மறையான வலயமாக
(positive zone)மாறுகின்றது.
சந்திக்கின்ற போது அல்லது தொலைபேசி அழைப்புகளின் போது தொடர்பு கொள்ளாதது ஏன் என்பது பற்றி காரணங்கள் அனைத்தையும் கூற வேண்டிய நிர்ப்பந்த நிலையுள்ளது.எமது சமூகச் சூழலிலுள்ள அனைத்திற்கும் காரணம், விளக்கம் கூற வேண்டிய நிர்ப்பந்தம் புரிதலில் வேட்டுவைக்கும் நிலையாகும்.எல்லோரையும் please பண்ணிச் செல்வது ,திருப்திப்படுத்த நினைப்பது எமக்குள்ள சுதந்திரத்தையும் உரிமையும் கேவலப்படுத்துவதாக அமையும்.
ஒவ்வொருவருக்கும் பல காரணங்கள் இருக்கலாம். பகிரங்க்ப்படுத்த முடியாத சில அசெளகரியங்கள் இருக்கலாம்.அனைத்திற்கும் விளக்கம் வேண்டுவது( explanation )அடுத்தவர்கள் மீது அத்துமீறும் நடவடிக்கையாகும்.
அரபிகள் சந்திக்கும் போது நிறைய பிரார்திப் பார்கள் (பாரகல்லாஹ்,ஹையா கல்லாஹ் மற்றும் கைலாகு, முஸாபஹா) வெளிநாட்டவர்களோடு வாழும் போதும் அவர்களை நீண்ட நாட்கள் சந்திக்கக் கிடைக்காத வேளையில் சந்தித்தால் "காரணம் சொல்லுதல் பண்பு" அவர்களுக்கு அவசியப்படுவதில்லை.
வாழ்வில் இலகு தன்மையை ஏற்படுத்திக் கொள்வதோடு மற்றவர்களை கெளரவப்படுத்தும் முறைகளை சந்திப்பு மொழிகளுடாக மாற்றி அமைத்தால் உறவுகள் அறுபடாமல் தொடர்வதற்கும் விரிசலின்றி அது விளங்குவதற்கும் ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தலாம்.
Very Nice
ReplyDeleteMr.Risan really very good article i was very much impressed
ReplyDeletecurrent generation is practicing above method we should change our attitude like you have suggested method but it is not easy for all but we should try.Thanks Subair Mohammed-KSA
Mr.Risan really very good article i was very much impressed
ReplyDeletecurrent generation is practicing above method we should change our attitude like you have suggested method but it is not easy for all but we should try.Thanks Subair Mohammed-KSA
Mr sein நீங்கள் ஆரம்பத்தில் எழுதிய வசனம் ஒவ்வொரு ஊரின் பேச்சு வழக்கம். அரபிகள் சந்தித்ததும் பேசிக்கொள்வது இஸ்லாமிய பழக்க வழக்கம் அப்பழக்கம் எம்மைப்போன்ற அஜமிகளிடத்திலும் பரவ வேண்டும் இதற்காக முடியுமானவரை எழுதுங்கள்
ReplyDelete