Header Ads



இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா நோயாளி, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்

இலங்கையில் மலேரியா நோய் முற்றாக ஒழிக்கப்பட்டிருக்கும் நிலையில் மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட இந்திய நாட்டவர் ஒருவர் நுவரெலியாவில் இனங்காணப்பட்டுள்ளார்.

குறித்த நோயாளர் சுற்றுலா விசா மூலம் இந்நாட்டிற்கு வருகை தந்து தச்சு வேலையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தற்போது இவர்  சிகிச்சைக்காக நுவரெலிய பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் செயலாளர் மருத்துவர் நலின் த ஹேரத் தெரிவித்துள்ளது.

குறித்த நோயாளர்களினால் நோய் மீண்டும் நாட்டினுள் ஊடுருவக்கூடும்  என மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் தெரிவித்திருந்தார்.

எனினும் , குறித்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு  நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.