Header Ads



அக்கரைப்பற்று மன்பஉல்கைறாத் மகளிர் கல்லூரி, புதிய மாணவர் அனுமதி நேர்முகபரீட்சை

-எஸ்.ரி.ஜமால்டீன்-

அக்கரைப்பற்று மன்பஉல்கைறாத் இஸ்லாமிய கற்கைகளுக்கான மகளிர் கல்லூரிக்கு புதியமாணவிகளை சேர்த்துக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான நேர்முக பரீட்சை இம்மாதம் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூhயில் நடை பெறவுள்ளது.

இக்கல்லூரியின் தேர்வு பரீட்சைக்கு பங்குபற்றுவதற்கான அழைப்புக்கடிதங்கள் கிடைத்தவர்கள் பிறப்பு சான்றிதழ், கடந்தவருடம் (2015) க.பொ.த. (சா.த) பரீட்சை பெறுபேறு ,தேசிய அடையாள அட்டை , புலமை பரிசில் சான்றிதழ்கள் என்பவற்றுடன் சமூகமளிக்குமாறு கேட்கப்படுகின்றனர்.இதன் போது ஆவணங்களின் மூலப்பிரதிகளை நேர்முகப்பரீட்சையின் போது கையளிக்க வேண்டும். சிறந்த உடல்,உளஆரோக்கியம் உள்ளவராகவும் இருக்கவேண்டும். 

தகமையிருந்தும் தவறுதலாக நேர்முக பரீட்சைக்கு அழைப்பு கடிதம் கிடைக்காதவர்களும் நேர்முக பரீட்சையில் பங்கு பற்றலாம் மேலும் தகமையிருந்தும் விண்ணப்பிக்க தவறிய மாணவிகளும் நேர்முக பரீட்சையில் பங்கு பற்ற முடியும் நேர்முக பரீட்சையுடன் எழுத்து பரீட்சை ஒன்றையும் நடத்த நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 067-2279 590 , 067 2277 617 ,       071 8225 201 ஆகிய தொலை பேசிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்

No comments

Powered by Blogger.