Header Ads



பரீட்சையா..? பர்தாவா..??


-Mohamed Nizous-

பரீட்சை எழுதுவதற்கு
பர்தாவை கழற்றட்டாம்
அறிவற்றோர் சொல்லுவதை
அங்கீகரிக்க இயலு'மோடி'
மருத்துவப் பரீட்சையிலே
மார்க்ஸ்கள் பெறுவதிலும்
உரிமையை காப்பது
உயர்ந்தது தெரியு'மோடி'

உடலைக் காட்டுவதே
உயர்வு என்று சொல்லும்
மடத்தனத்தை ஏற்றால்
மனிதனிலும் மிருகமே
உடுக்காத காரணத்தால்
உயர்வுறும் என்பதனை
எடுத்துச் சொல்லுகிறோம்
இந்த உண்மை சாகு'மோடி'

ஜனநாயகம் ஆளுகின்ற
ஜாம்பவன்கள் நாட்டினிலே
சனம் நாயல்ல 
சண்டித் தனம் காட்டுதற்கு
தனக்குப் பிடித்த ஆடை
தான் உடுக்க முடியாட்டி
பிணக்கு வந்தாலும்
பின் வாங்க முடியு'மோடி'.

மூடியதைத் திற என்று
மோடியரசு சொன்னதனை
கூடி எதிர்க்காட்டி
வாடி விடும் எம் உரிமை.
ஓடி ஒழியாது
மோடியை எதிர்க்கின்ற
லேடிகள் வெற்றி பெற
கோடிப் பிரார்த்தனைகள்.

2 comments:

Powered by Blogger.