பொலிஸார் முற்றுகை, பாதாள குழு உறுப்பினர் தற்கொலை
கட்டுநாயக்க மற்றும் சீதுவ பகுதிகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வந்த பாதாள குழுவொன்றின் உறுப்பினரைக் கைதுசெய்ய பொலிஸார் முற்பட்ட வேளை அவர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று (21) அதிகாலை 01.00 மணியளவில் கொகருல்ல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குபுக்கெடே - பஹல மெதகம பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் இதன்போது சுமித் தயாரத்ன எனப்படும் போடி சாகர என்பவரே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க மற்றும் சீதுவ பகுதிகளில் இடம்பெற்ற நான்கு கொலைகள், 2006ம் ஆண்டு கம்பஹா பகுதியில் வைத்து சிறைச்சாலை பஸ் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் ஜெய்லர் ஒருவர் பலியானமை போன்ற சில துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் மற்றும் கப்பம் கோரியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் இவருக்கு தொடர்பிருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
நீர்கொழும்பு பகுதியில் பொலிஸாரால் தன்னைப் பற்றி தகவல் சேகரிக்கப்படுவதை அறிந்த அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் சந்தேகநபர் குபுக்கெடே - பஹல மெதகம பிரதேசத்தில் தொடர்பினைப் பேணி வந்த பெண்ணின் வீட்டில் இருப்பதாக பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
இதன்படி நேற்று இரவு அவரைக் கைதுசெய்யும் பொருட்டு வீட்டை சுற்றிவளைத்து பாதுகாப்புத் தரப்பினர் மறைந்திருந்தனர்.
இதன்போது, தன்வசம் இருந்து துப்பாக்கியை பயன்படுத்தி சந்தேகநபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

Post a Comment