ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால், முசலியில் இஸ்லாமிய நிலையம்
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் சிறுக்குளம் மீள்குடியேற்றப் பட்ட பிரதேசத்தில் இஸ்லாமிய நிலையத் திறப்பு விழா 22-04-2016 ஜும்ஆத் தொழுகையுடன் நடைபெறவுள்ளதாக என்று ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான் தெரிவித்தார்.
ஜமாஅத்தின் சமூக சேவைத் தொடரின் கீழ் மன்னார் சிலாவத்துரை, அளவக்கை சிறுக்குளம் மீள்குடியேற்றப்பட்ட கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜும்ஆப் பள்ளிவாசல், அல்குர்ஆன் மத்ரஸா, கடைத்தொகுதி, இமாமுக்கான வீடு, நீர் விநியோகம் உள்ளடங்கிய கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் என். பீ, எம். அபூபக்கர் சித்தீக் மதனி பிரதம அதிதியாக கலந்து கொண்டு கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார்.
இந்நிகழ்வில் அஷ;nஷய்க் எம். எஸ். எம். இம்தியாஸ் குத்பா பேருரையையும் அஷ;nஷய்க் எஸ். எம். ஜுனைத் மதனி வரவேற்புரையையும் அஷ;nஷய்க் எம். எச். முயினுதீன் நளீமி நன்றியுரையையும் நிகழ்த்தவுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இக்பால் அலி
Alhamdhulillah! May Allah recognize this meritorious effort and reward all the concerned persons here and the afterlife.
ReplyDeleteMr Inamdeen dont worry all concerned persons are rewarded here.. they are very happy
ReplyDelete