மைத்திரிக்கு எண்ணெய் தடவப்பட்டது
புதுவருட சம்பிரதாயங்களின் வண்ணம் தலைக்கு எண்ணெய் தடவும் அரச வைபவம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பயாகல சிறீ புஷ்பாராம விகாரையில் இன்று (16) முற்பகல் இடம்பெற்றது.
மத அனுட்டானங்களின் பின்னர் தலைக்கு எண்ணெய் தடவும் சம்பிரதாயத்தை நிறைவேற்றி இன்று முற்பகல் 10.41 மணிக்கு அமையப்பெற்ற சுபமுகூர்த்தத்தின் போது பெந்தர, வலல்லாவிட்ட கோரளைகளின் தலைமைத் தேரர் திரிபிட்டகாச்சார்ய மலேகொட நந்த நாயக்க தேரர் ஜனாதிபதி அவர்களின் தலைக்கு எண்ணெய் தடவினார்.
தலைக்கு எண்ணெய் தடவும் சம்பிரதாயத்தை நிறைவேற்றும் அடையாள நிகழ்வாக ஜனாதிபதி அவர்களினால் விகாரை வளவில் சிவப்பு சந்தன மரக்கன்று நடப்பட்டது. மலர்ந்த புதுவருடத்திற்கு ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக பெரும் எண்ணிக்கையான பிரதேசவாசிகள் விகாரைக்கு சமூகம் தந்திருந்ததுடன் ஜனாதிபதி அம்மக்களுடன் நட்புறவுடன் உரையாடினார்.

Post a Comment