Header Ads



புற்றுநோய் இயந்திரம் வாங்க, பள்ளிவாசல்களுடன் இணைந்து முஸ்லிம் விவகார அமைச்சு உதவி

இலங்கையின் தேவையாக கருதப்படுகின்ற மஹரகம வைத்தியசாலைக்கான புற்றுநோய் பெட் ஸ்கேனர் இயந்திரக் கொள்வனவுக்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சு உதவுவதற்கு முனவந்துள்ளது.

தபால் அமைச்சில் இன்று -20-  நடைபெற்ற இதுதொடர்பிலான கலந்துரையாடலொன்றின் போதே தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சில் பணியாற்றும் ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை புற்றுநோயை கண்டறியும் இயந்திரக் கொள்வனவுக்காகவே சேகரிக்கப்படும்  நிதித்திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த உதவிகளை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல்களுக்கும் முஸ்லிம் விவகார அமைச்சு இதுகுறித்து அறிவித்து நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களினதும் பங்களிப்பை மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை பெட் ஸ்கேனர் இந்திரத்தை கொள்வனவு செய்யமுடியுமானவரை உதவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.







1 comment:

Powered by Blogger.