"தம்பிலாட தமய் அவ்ருது, அபிட நெவைய்" (நுவரெலியா செல்லும் முஸ்லிம்கள் சிந்திப்பார்களா..?)
-அஷ்ஷைக் ஸப்fரான் பின் ஜஃபர்
நுவரெலியா-
அண்மையில் எமது சொந்த ஊருக்கு சென்றிருந்த வேளை ஏற்பட்ட எமது சமூகத்தினரால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
ஏப்ரல் மாதம் வந்தாலே எல்லோர் நாவுகளும் உச்சரிக்கும் நகரம் தான் சுந்தர நுவரெலியா. அதற்கு இன்னொரு பெயரும் உண்டு (Little England) சிறிய இங்கிலாந்து.ஆனால் வராலாறு காணாத வகையில் வாகன நெரிசலும் எம்மவரின் பிரசன்னமும் *තමිබිලාට තමයි අවුරැදු අපිට නෙවෙයි* தம்பிலாட தமய் அவ்ருது அபிட நெவைய் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் ஒரு புறம்,welcome to Nuwaraeliya என்ற எல்லைய அடைகின்ற போதே நெரிசல் இன்னொருபுறம்.15 நிமிடங்களில் கடக்க வேண்டிய தூரங்கள் பல மணி நேரமாகியும் கடக்க முடியாத நிலை.
அதுபோக கொழும்பு மாவட்டத்துக்குச் சொந்தமான (wp) எம்மவரின் சொகுசு வாகனங்கள் அடுத்த பக்கமாக வாகனங்கள் வருவதற்கு விட்டிருந்த வழியில் தமது வாகனங்களைச் செலுத்தி சிலர் மாட்டியும்,சிலர் வாயடித்து தப்பித்தும்.....போயினர். இந்நிலை பல மணிநேரம் நெரிசலில் காத்திருந்த மாற்று மதத்தவரின் முகம் மாறிய நிலையிலிருந்து தெரிந்து கொண்டேன்,★தம்பிலாட மெச்சர மொன ஹதீசித தன்னே அப்பா,மே பலன்டகோ யன விதிஹ*.எம்மவரின் பண்பாடு இது தான் என்பதைக் காட்டி விட்டனர்.
அத்தோடு (15/04/2016) வெள்ளிக்கிழமை பாதையை மரித்து இடம்பெற்ற ஜும்ஆத்தொழுகை.தொழுதால் சும்மா இருக்க வேண்டியது தானே! அதைவிடுத்து அதன் புகைப்படங்களை சமூகத்தளங்களில் பகிர்ந்து எம்மவர் ஜும்ஆவை பாதையில் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்ற நெஞ்சுரம் வேறு. இதன் விளைவு" நாங்கள் பாதையை மரித்து பிரித் ஓதுகிறோமா??? முஸ்லிம்கள் ஏன் பாதையை மரித்துத் தொழ வேண்டும்?? அவர்களுடைய அனுஷ்டானங்களை பள்ளிவாயலுக்கு உள்ளே அமைத்துக் கொள்ள வேண்டும்".என்ற பெரும்பான்மையினரின் விமர்சனத்துடன்.
கவலைதரும் விடயம் என்னவெனில் அவ்வழியால் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லும் மாற்றுமத சகோதரர்கள் பொறுமையுடன் தொழுகை முடியும் வரை காத்திருந்தனர்.
ஒரு சுற்றுப்பயணம் செல்கின்ற போது பயணத்தில் அல்லாஹ்வுக்குறிய கடமைகளை நிறைவேற்ற வழங்கப்பட்டருக்கின்ற சலுகைகளை பயன்படுத்த தெரியாததன் விளைவே அடியார்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளில் தவறுவிடுவதற்கான அடிப்படைக் காரணமாகும் என நான் கருதுகின்றேன்.
அத்தோடு ஓர் இறை விசுவாசி திட்டங்களுடன் தனது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் அமைத்துக்கொள்ள வேண்டும்.ஏனெனில் அவனது முழு வாழ்வுமே இபாதத்தாக நோக்கப்படுகிறது.சுற்றுப் பயணத்தையும் இஸ்லாம் ஆகுமாக்கியிருக்கிறது.எங்கு செல்ல வேண்டும்??
எப்படிச் செல்ல வேண்டும்???
பிரயாணத்தில் பேண வேண்டிய ஒழுங்குகள்???
தொழுகைகளுக்கான ஒழுங்குகள்....தங்க வேண்டிய இடங்கள் போன்ற அனைத்து விடயங்களையும் ஏலவே திட்டமிட்டிருக்க வேண்டும்.அப்போது தான் அசௌகரியங்கள் தவிர்ந்த பயணமாக, அப்பயணத்தை இபாதத்தாக ஆக்கிக் கொள்ள முடியும்.
அங்கு செல்லும் சகோதரர்கள் ஜும்ஆவுடைய கடமையை நிறைவேற்ற வேண்டுமாயின் அதற்குரிய ஏற்பாடுகளை நேரகாலத்தோடு செய்து கொள்ளுங்கள்.
ஹாவெலிய ஜும்ஆ மஸ்ஜித், நானுஓயா, ராகலை, ரேந்தபொல , பொரகஸ், பாதினாவெல, வெலிமடை போன்ற நுவரெலியாவை அண்டிய நகரங்களில் உள்ள பள்ளிவாயல்களில் ஜும்ஆவுடைய கடமையை நிறைவேற்றுவதன் மூலம் ஏனையோருக்கு இடர் இழைப்பதிலிருந்து தவிரந்துகொள்ளலாம்....
සුන්දර පරිසරය සුරකිමු அழகிய கண்கவர் சூழலைப் பாதுகாப்போம் என்ற வாசகத்துக்கு முன்னாேலயே எம்மவர் ஒருசிலர் குப்பைகளை வீசிச் சென்றனர். பண்பாடுகளால் வளர்ந்த அழகிய மார்க்கத்தைச் சுமந்தவர்கள் பண்பாடற்ற நடத்தைகள் மூலம் இஸ்லாதைக் கொச்சைப்படுத்திக் காட்டிவிட்டனர். பல கோடிகள் செலவளித்து உங்கள் கண்கவர் இடமாக மாற்றி அரசாங்கம் தந்தருக்க பொதுச்சொத்துக்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்ற முறையையே பெரும்பலானவர்கள் மறந்துவிட்டனர்.சுருங்கச் சொன்னால் நுவரெலியா தற்பொழுது துர்நாற்றம் வீசுகிறது.
இரவு நேரப் பாட்டுக்கச்சேரிகளில் எம் குமரிகளின் குத்தாட்டம்,மது இது போன்ற இன்னோரன்ன பாவங்களில் எமது சமூகம் பயணம் போனால் திரும்புவது நிச்சயமா என்ன??? இந்நிலையில் நான் மரணித்தால் ஈமானில்லாத நிலையில் மரணிப்பேனே என்ற பயம் எங்கே போனது,ஆடிக்கொண்டிருக்கும் பேது பூமி சுழி வாங்கி விட்டால் தப்புவது எங்ஙனம்???
பல இலட்சங்களை உல்லாசங்களுக்கு வாரி இறைக்கும் செல்வந்தர்கள் ஓர் ஏழைக் குமரியை கரைசேர்த்து விட்டால் அவள் அனுபவிக்கும் சந்தோஷத்தில் எழும் உங்களுக்கான பிரார்த்தனை உங்களை சுவனத்தில் சேர்க்குமல்லவா????
சிந்திப்போம் செயற்படுவோம். இடர்தரும் சமூகமாகவன்றி இடர்நீக்கும் சமூகமாக வாழ்து நெஞ்சில் சுமந்திருக்கும் அழகிய வாழ்க்கை நெறிக்கு சான்று பகர்வோம்.

Nalla aakkam.. ellorum padikkonum
ReplyDeleteசெவிடன் காதில் ஏன் சங்கு ஊதுகிறீர்கள்?
ReplyDeleteNice article. Will our people stop doing such things hereafter??
ReplyDeleteஎது இஸ்லாம் எது இஸ்லாத்தில் இருந்து வேறு பட்டது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் நடந்துகொள்ளும் நம் பெயர் தாங்கி முஸ்லிம்களால்தான் ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் பிரச்சினையாக உள்ளது.பிரயாணத்தை அனுமதித்த இஸ்லாம் இவர்களுக்கு எந்த அடிப்படையில் அனுமதியளித்து இருக்கிறது தற்போதும்,எதிர்கால சந்ததிகளுக்கும் வாழமுடியாத வகையில் பிரச்சினையை ஏற்ப்படுத்தி உல்லாசப்பிரயாணம் செய்ய யாரு சொன்னது.நான் ஒரு கேள்வி கேட்கிறேன் தற்போது சுற்றுப்பிரயாணம் சென்றுள்ள நம்மவர்களின் மனதை தொட்டு சொல்லட்டும்.இவர்களின் குடும்பத்தில் ஏழைக்குமருகள் யாரும் இல்லையா? தாய் வழியில் தகப்பன் வழியில் தூரத்து சொந்தங்கள் வழியில் சொந்தங்கள் இல்லாத ஊரில் நம் கண்ணுக்கு தென்படாத ஏழைக்குமர்கள் இல்லையா? இதுவரை எத்தனை கண்ணிக்குமருகளை கல்யாணம் செய்து கொடுக்க முடியாமல் பெற்றோர்கள் தவிக்கிறார்கள் உள்ளூரை விட்டு விட்டு வெளியூர்களுக்கு சென்று பிச்சை எடுக்கும் காட்சிகளை பார்க்கிறோம் இவ்வாறு சமுதாயத்தில் கண்ணீர் வடிக்கும் அவல நிலையில் சுற்றுப்பிரயாணம் அதுவும் தீன் சம்மந்தமான சுற்றுப்பிரயானமா?இல்லவே இல்லை காதல் பண்ணையும் பூக்கொடுக்கையும் போட்டோக்கள் பிடிக்கையும் புதிதாக காதல் உருவாக்கயும்.கூடி இருந்து சீட்டு விளையாடியும் கூடி இருந்து விலக்கப்பட்ட ஹராமானவைகளை புசிக்கவும் பருகவும் செயற்படும் காட்சிகளை அதிகமாக செய்வதற்கு இவர்கள் வைத்த பெயர் சுற்றுப்பிரயாணம்.இப்போது அதையும் தாண்டி சகோதர சமுதாயத்துக்கு எதிராக சுற்றுப்பிரயாணம்.உண்மையில் அவர்களுடைய பெருநாள் காலமாக இருப்பதால் நாம் கொஞ்சம் ஒதிங்கி அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும்.அவ்வாறன இடப்பாடுகள் இல்லாமல் மற்றைய சமுதாயத்தை ஆத்திரமூட்டக்கூடிய வகையில் நடந்து கொள்வது இஸ்லாம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
ReplyDeleteWell said
ReplyDeleteUnfortunately we have to educate our Muslim trough media, rather than our mosque . Mosque aren't not full filling the poupose it should be doing. It need to change, we need people have knoldge in the mimber.
ReplyDeleteVery good article
ReplyDeleteஎன்னத்த..... சொல்றது ? எப்படித்தான் சொன்னாலும் எம்மவர்கள் உணர்ந்து கொள்வது முயல் கொம்புதான். இருந்தாலும் முயற்ச்சியைக் கைவிடாமல் எமது எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தி முயற்ச்சிக்கலாம் (குத்பா மேடைகள் உட்பட )
ReplyDeleteதரமான ஆக்கம். இரு மொழிகளிலும் நல்ல புலமை இருப்பதால் உங்களால் மார்க்கத்துக்கு சிறந்த பணிகள் செய்ய முடியும்.
ReplyDeleteVery good article it should be reach every Muslim
ReplyDeleteeye opening article but our muslim nation in sri lanka would not mind what Movlavi Safran mention in his valuable article they are enjoying APRIL Tamil & Sinhal Festival if missed it will be very painful
ReplyDeletethese expense's can be spend for good deeds or save for journey to Makkah for umra or spend for poor family around their area but no one will think but this type of articles bit change our practice gradually insha Allah
From Saudi Arabia
உணர்ந்து செயல்பட வேண்டும்
ReplyDelete" இலட்சங்களை உல்லாசங்களுக்கு வாரி இறைக்கும் செல்வந்தர்கள் ஓர் ஏழைக் குமரியை கரைசேர்த்து விட்டால் அவள் அனுபவிக்கும் சந்தோஷத்தில் எழும் உங்களுக்கான பிரார்த்தனை உங்களை சுவனத்தில் சேர்க்குமல்லவா" - முத்தான வரிகள். விடுமுறையை அனுபவிப்பதில் தவறொன்றுமில்லை, ஆனால் அளவுக்கு மீறிய வீண் விரயம்...?
ReplyDeleteஇதையேதான் சொல்கிறோம்: நம்மவர்கள் மூளையைவிட மரபணுக்களின் ஆளுகைக்குட்பட்டு நடந்துகொள்பவர்கள் என்று.
ReplyDeleteஎச்சிலைத் துப்புவது எப்படி என்று கூட சொல்லித்தரப்பட்டிருக்கும் சமூகம் என்று பெருமையடிக்கிறோமே.. அதைக்கூடச் செய்யத்தெரியாதவர்களுக்குத்தான் அதுபற்றிச் சொல்லித் தரப்பட்டுள்ளது என்ற கேவலம் அதிலேயே புரியவில்லையா..?
மார்க்க அறிஞர்களே சமூகச்செயற்பாட்டாளர்களே, பழம்பெருமைபேசியதும் மிகைப்புகழ்ச்சி புரிந்து கொண்டிருப்பதும் போதும். அவற்றை விட்டொழித்து இனிவரும் தலைமுறைகளையாவது நடைமுறையில் சுத்தம் பேணவும் நாட்டின் பொதுவான விழுமியங்களைப் பின்பற்றி நடக்கவும் பயிற்றுவியுங்கள்.
PANAM IRUKU PANPADU ILLATHA SL.MUSLIM
ReplyDeleteJM is acting very strangely these days. Outspoken comments are getting censored! "Unity amongst jamaths" also being censored.
ReplyDeleteFurthermore too many unvarified news getting published. Don't dig your own grave.
You have all rights to publish or not publish any comments but the comments u choose to ban makes us wonder if this a Muslim site or not
என்ன சொல்ல வாரீங்க நுவர எலியாவுக்கு உல்லாச பயணம் போகலாமா போகக் கூடாதா ? மார்க்கத்திற்கு எதிராக பள்ளிவாசல்களிலேயே எத்தனையோ அனாச்சாரங்கள் நடக்கிறது அதை நம்ம ஹஜரத் மார்களே முன்னின்று நடாத்துகிறார்கள் அதனால் பள்ளிக்கே போகக் கூடாதா ?
ReplyDelete