Header Ads



செல்போன் வெடிக்குது...."" (எச்சரிக்கை)


செங்கல்பட்டைச் சேர்ந்த தனுஷ் என்கிற 9 வயது சிறுவன் சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போனை உபயோகித்துக் கொண்டிருந்த  போது, அது வெடித்ததன் காரணமாக, அவனது பார்வை பறிபோனது. வியாசர்பாடியில் மெத்தை மீது சார்ஜ் போடப்பட்டு  வைத்திருந்த செல்போன் வெடித்து மெத்தை தீப்பற்றி அவ்வீட்டில் இருந்த கணவன் - மனைவி இருவரும் இறந்தனர். 

சமீபத்தில்  அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்திகள் இவை. 

நம் வாழ்வியலில் இரண்டறக் கலந்து விட்ட செல்போன் உயிருக்கும் உலை வைக்குமா என்பதே இந்த அதிர்ச்சிக்குக் காரணம். ஏன் இந்த விபத்துகள் நடந்தன? செல்போனை எவ்வாறு கையாள வேண்டும்?  செல்போன் நிறுவனமொன்றில் துணைத்தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்ற தரனிடம் கேட்டோம்... 

‘‘செல்போனை சார்ஜ் செய்யும்போது அதனுள் மின்சாரம் ஏற்றப்படுவதன் காரணமாக அது சூடாகும். அப்போது செல்போன்  பயன்படுத்துவதை முடிந்த வரை தடுக்கலாம். பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும். நிறைய பேர் இரவு படுக்கும்போது சார்ஜ்  போட்டு விட்டு தூங்கி விட்டார்கள் என்றால், சராசரியாக 8 மணி நேரம் கழித்து தூங்கி எழுந்த பின்புதான் கழற்றுவார்கள்.  பேட்டரி சார்ஜ் ஆன பிறகும் மின் இணைப்பில் இருக்கும்போது, வெளியாகும் மின்சாரத்தை பேட்டரி தாங்காது என்பதோடு, அது  வெடிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பரிந்துரைக்கிற கால அளவுக்குள்தான் சார்ஜ்  போட வேண்டும். 

பெட்ரோல் பங்கில் செல்போன் உபயோகிக்கக்கூடாது எனும் எச்சரிக்கையைப் பார்த்திருப்போம். செல்போனில் இருந்து  வெளிப்படும் அலைவரிசை பெட்ரோலின் ஆவியோடு ஸ்பார்க் ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பதால்தான். முடிந்த  வரை தேவை அடிப்படையில் மட்டும் செல்போனை பயன்படுத்துவதே சிறந்தது. தலையணைக்குப் பக்கத்திலேயே செல்போனை  வைத்துக் கொண்டு படுப்பதும் தவறுதான். சார்ஜ் போட்டு பயன்படுத்தும் எல்லா செல்போன்களும் வெடிப்பதில்லை. இருந்தாலும்  முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வதே சிறந்தது’’ என்கிறார் ஸ்ரீதரன்.

No comments

Powered by Blogger.