புர்ஜ் கலிபாவை தோற்கடிக்க வருகிறது, மற்றுமொரு கட்டிடம்
சர்வதேச அளவில் கட்டுமான துறையில் பல்வேறு புதுமைகளை, நவீன தொழில்நுட்பங்களையும் அறிமுகபடுத்துவதில் முன்னிலை வகிக்கும் துபாய் நகரத்தில் கட்டிட கலையில் துபாயில் உலகிலேயே உயரமான( 828 மீட்டர்) கட்டிடமாக புர்ஜ் கலிபா கட்டிடம் திகழ்கிறது. அதனை விட உயரமான கட்டிடம் துபாயில் உருவாக உள்ளது.
துபாய் கீரிக் பகுதியில் சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றளவில் திர்ஹம்ஸ் 3.65 பில்லியன் செலவில் வணிக கட்டிடங்கள், குடியிருப்புக்கள் உள்ளிட்ட பலவேறு வசதிகளோடு தி டவர் என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இக்கட்டிடத்தின் வடிவமைப்பு சுவிஸ் மற்றும் ஸ்பெயின் கட்டிகலையையோட்டி அமையும்.துல்லியமாக எவ்வளவு உயரம் என்பது தெரிவிக்கப்படவில்லை. சர்வதேச அளவில் மற்றுமொரு சாதனையாக இத்திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டிட பணி ஜூன் அல்லது ஜீலை மாதம் துவங்க உள்ளது.
துபாயில் நடைபெற உள்ள துபாய் எக்ஸ்போ2020 கண்காட்சிக்கு முன்னதாகவே இத்திட்டம் நிறைவும் பெறும் என்றும் இத்திட்டம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என இத்திட்டத்தை செயல்படுத்தும் ஈமார் புராபர்டீஸ் நிறுவன சேர்மன் முஹம்மது அல் அப்பார் தெரிவித்தார்.

يتطاولون في البنيان
ReplyDelete