Header Ads



ரணில் - மகிந்த இடையே அதிகரிக்கும் உறவு..?


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயம் நல்லதொரு விடயம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அகுனுகொலபெலஸ்ஸ விகாரையில் இன்று -10- ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேவேளை வெளிநாடுகளுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவது மிகவும் முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் சீனாவுக்கு விஜயம் செய்ய முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தனது விஜயம் தொடர்பில் தெரியப்படுத்தியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் இடம்பெற்ற சீன விஜயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.