சீனாவின் காலடியில் அரசாங்கம், வீழ்ந்ததற்கான காரணம் என்ன..?
(ரொபட் அன்டனி)
உலக பொருளாதாரத்தில் சீனா அசைக்க முடியாத சக்தியாக உருவாகிவருகின்ற யதார்த்தமே அரசாங்கத்தை சீனாவின் காலடியில் விழ வைத்ததுள்ளதென முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகர்த்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் சீனாவுக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேந்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
கொழும்பு துறைமுக நகர்த்திட்டத்தை நிறுத்துவதாகவும் இலங்கை சீனாவின் கொலணியாக மாறியுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியினர் கூறியதை நாங்கள் இன்னும் மறக்கவில்லை.
எமது முன்னைய அரசாங்கம் சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்தபோது எதிர்க்கட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்தது.
ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. சீனாவை கடுமையாக விமர்சித்த ஐக்கிய தேசிய கட்சி இன்று அதன் காலடியில் விழுந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதனை நாம் ஆராயவேண்டும்.
அதாவது உலக பொருளாதாரத்தில் சீனா அசைக்க முடியாத சக்தியாக உருவாகிவருகின்றது என்ற யதார்த்தமே அரசாங்கத்தை சீனாவின் காலடியில் விழ வைத்தது. இதுதான் யதார்த்தமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

That's not the only reason. MR regime had already initiated Port City project and it is not an easy thing for the new govt to cancel such a contract so they have to continue the project. If we are to cancel the contract it would be suicide for Sri Lanka.
ReplyDeleteதென்னாசியாவில் இந்தியாவைப்போலவே நமது நாட்டுக்கு ஆசியாவில் சீனாவும் ஒரு பிராந்திய வல்லரசு.
ReplyDeleteமகிந்தர் சீனாவுடன் தேனிலவு வைத்துக்கொண்ட காரணத்திற்காக மைத்திரியும் ரணிலும் அதனை பகைத்துக்கொண்டிருக்க வேண்டுமென்ற அவசியமில்லையே. மகிந்தரைச் சீனாவும் சீனாவை மகிந்தரும் பயன்படுத்திய விதம் வேறு நல்லாட்சி அரசின் விடயம் வேறு.
இதனைப்புரிந்துகொண்டும் கபடத்தனமாக அப்பாவி மக்களின் தலைமீது மிளகாய் அரைப்பதற்குக் கிளம்பியுள்ளவர்களை நினைத்தால்தான் பாவமாகவுள்ளது.