Header Ads



மைத்திரியின் கோட்டையில், இப்படியும் நடந்தது

பொலன்னறுவை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசத்தால் அங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அதிகம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேற்படி மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் குறிப்பாக பொலன்னறுவை கல்விகாரைக்கு முன்பாக அமைந்துள்ள வளைவில் சுற்றுலாப்பயணிகள் ஓய்வெடுக்கும் இடத்தில் அதிகமாக காணப்படுவதாகவும் சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த குரங்குகளின் அட்டகாசம் காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகளில் ஒருவரான ஏ.எம்.சப்ரி கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து சுற்றுலா சென்ற எங்களுடைய குடும்பம் பொலன்னறுவை கல் விகாரைக்கு முன்பாக அமைந்துள்ள வளைவில் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்கும் இடத்தில் வாகனத்தை நிறுத்தி அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொன்டிருந்த போது அங்கு நடமாடித்திரிந்த குரங்குகள்  எதிர்பாராத விதமாய் வாகனத்தின் யன்னலினூடாக உட்புகுந்து அங்கிருந்த பெறுமதிமிக்க அப்பிள் கையடக்க தொலைபேசி, பணம், சாரதி அனுமதிப் பத்திரம், காப்புறுதி அடங்கிய பையை எடுத்துக்கொன்டு மின்னல் வேகத்தில் அடர்ந்த காட்டினுள் ஓடிவிட்டது.

அதன் பின்னர் அந்தக் குரங்கு திரும்பி வரவில்லை என்பதோடு, இது போன்ற சம்பவம் அடிக்கடி இங்கு வருபவர்களுக்கு நேரிடுவதாகவும் அங்குள்ளவர்கள் கூறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. This is an unending story even in kandy for last many years and no action taken by any politicians. These monkeys used to sneak in to the class rooms of Badi uddin girls college and take all the foods and personal belongings of the children, further it destroys all the home gardens almost most of the kandy surrounding villages. I hope this makes a big negative impact in the countries economy as well.

    ReplyDelete
  2. இவற்றின் சேஷ்டைகளை கண்டு மகிழ்வதற்கென்றே பெறும் எண்ணிக்கையான வெளிநாட்டவர்கள் இலங்கை வருகிறார்கள். குரங்குகளுக்கு மத்தியில் வளர்ந்த எமக்கு அவற்றின் அழகிய சேஷ்டைகள் தொல்லையாக தென்படுவது இயல்புதான்.
    மைத்ரியின் பெயர் இங்கு ஏன் தொடுக்கப்பட்தென விளங்கவில்லை. தங்கள் தனிப்பட்ட சொந்த வெப்பிசாரங்களை கொட்டும் இடமாக ஜப்னாமுஸ்லிமை கட்டுரகட்டுரையாளர்கள் பயன்படுத்த வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.