ஒரு வாய்ப்பு வரும் வாசனையை, ராஜபக்ஸ உணர்கிறாரா..?
-மோகன் கே.திக்கு-
ஸ்ரீலங்காவில் கடந்த வருட ஆரம்பத்தில் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வmahinda-Raந்ததிலிருந்து “யகபாலனய” என்கிற வார்த்தை ஸ்ரீலங்காவின் அரசியல் பிரசங்கங்களில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. யகபாலனய என்பது ஒரு சிங்கள வார்த்தை அதன் அர்த்தம் “நல்லாட்சி” என்பதாகும். ஜனவரி 2015 ஜனாதிபதி தேர்தலில், நல்லாட்சி வழங்குவோம் என்கிற வாக்குறுதி வழங்கப்பட்டதின் அடிப்படையில் சிறிசேன அரசாங்கத்துக்கு பதவிக்கு வருவதற்கு வாக்களிக்கப் பட்டது. ஆனால் பாதையில் ஒரு வருடம் கடந்துவிட்ட போதிலும், அந்தக் காலம் எப்போதும் பாராட்டுக்களைப் பெறாத வகையில் வேறு கருத்துள்ள சில சாயல்களையே பெற்றுள்ளது மற்றும் சிலசமயங்களில் கிண்டல்களுக்கும் ஆளானது.
சமீபத்தில் சிறிலங்காவில் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக நாடு தழுவிய மின் தடை ஏற்பட்டபோது, யகபாலனய பிரகாசிக்கிறது என்று வர்ணிக்கப்பட்டதைப்போல. சில நாட்களின் பின் பாராளுமன்றம் அதன் அங்கத்தவர்களுக்கு மிகப் பெரிய ஊதியப் பொதியை வழங்கியபோது, ஊடகங்களில் ஒரு பகுதியினர் “யகபாலனயவின் பணமழை” என்று அதை வர்ணித்தார்கள். அப்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாடு எதிர்நோக்கும் வெளிநாட்டுக் கடன் நெருக்கடி பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் (அதில் சில அவரது ஜனாதிபதிக் காலத்தில் நிகழ்ந்த ஊதாரித்தனமான தயாரிப்புகள் ஆகும்) அது “யகபாலன அரசாங்கத்தின்” வேலை என்று குறிப்பிட்டிருந்தார். யகபாலன என்கிற வார்த்தை விரைவாகவே அரசியல் அகராதியில் ஒரு அரசாங்கத்துக்கு எதிராக அறிமுகப்படுத்தப்படும் ஒரு பதமாக மாறுவதற்கான வாய்ப்புகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கான காரணம் இந்த நேரடி சிங்கள வார்த்தையின் அர்த்தம் திரிபு அடைவது, நடைமுறையில் எதிர்க்கட்சிக்கான இடைவெளி காலியாக விடப்பட்டுள்ளபோது சாதாரண மக்களின் வழியில் அவர்கள் ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது அதற்கான பதிலை வழங்குவதைக் காணும்போதுதான். சுமார் ஐம்பது குழுக்கள் மற்றும் கட்சிகள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் உள்ள ஒரு வானவில் கூட்டணிதான் இப்போது ஸ்ரீலங்காவில் ஆட்சி நடத்துகிறது, முரண்பட்ட கண்ணோட்டத்துக்கான குரல் கொடுப்பதற்கு அங்கு ஒரு எதிர்க்கட்சி இல்லை.
பாரம்பரியமாக ஸ்ரீலங்காவில் இரண்டு பிரதான கட்சிகள் உள்ளன: வலதுசாரி பிரிவான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ,தே.க) மற்றும் இடதை மையமாகக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க). இவை இரண்டும்தான் அரசியல் நிறமாலையின் இரண்டு துருவங்களைப் பிரதிநிதிப் படுத்துபவவை. வேறு சில முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் மற்றும் அதனுடன் சேர்த்து சிறிய இடதுசாரிக் கட்சிகளும் அங்கு உள்ளன. ஆனால் அவை எப்போதும் இறுதி நிலை வீரர்களைப் போன்றவை.
சுதந்திரத்துக்குப் பின்னான வருடங்களில் ஐ,தே.க மற்றும் ஸ்ரீ.ல.சு.க ஆகிய இரண்டும்தான் தங்கள் பாத்திரங்களை தீவிரமான போட்டியாளர்களாக எடுத்திருந்தன, அவர்களில் ஒன்று தமிழர்களின் இனப்பிரச்சினையை ஒரு வகையான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் போதெல்லாம் மற்றது அதை எதிர்ப்பது போன்ற, சமாதானத்துக்கான வாய்ப்புகளை அழிப்பதில் கூட மாறிமாறி சுழற்சி முறையில் வேலை செய்து வந்தன. இந்த இரண்டு பிரதான கட்சிகளின் இத்தகைய பிடிவாதம் காரணமாகத்தான் தமிழர்களின் பிரச்சினை தீர்வு காணமுடியாமல் இவ்வளவு காலமாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
எனினும் இந்த இரண்டு கட்சிகள் தொடர்பான நிலைப்பாடு 2015 ஜனாதிபதி தேர்தலுடன் ஒரு தீவிர மாற்றத்துக்கு உள்ளானது. தங்கள் கரங்களை இணைத்துக் கொள்வதைத் தவிர ஆதிக்கம் செலுத்திவந்த ஜனாதிபதி ராஜபக்ஸவை இடமாற்றுவதற்கு அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. மற்றும் அவர்கள் அதனைச் செய்தார்கள், அதற்கு மேலதிகமாக வெற்றிக்குப் பின்னர் இரண்டு கட்சிகளும் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் ஒன்றிணைந்து சிறிய கட்சிகiயும் அந்தக் கலவையில் கூட்டுச் சேர்த்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தன.
பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான ஐ,தே.க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பெரும்பான்மை ஸ்ரீ.ல.சு.க கட்சியினரும், தங்கள் கருத்து வேற்றுமைகளையும் மற்றும் பாரம்பரிய பகைமையினையும் தணித்துக்கொண்டு ஒன்றாக ஒரு கூட்டணி அரசை உருவாக்கினார்கள். இந்த அரிதான நிகழ்வாக அவர்களை ஒன்றிணைத்திருக்கும் கூட்டுவாழ்க்கை எதனால் ஏற்பட்டது - ஸ்ரீலங்கா பாணியில் - ஒரு ஒற்றை வார்த்தை “யகபாலனய”. ஆனால் கடந்த சில வாரங்களாக அந்த ஒட்டு அதிகாரத்தின் காலம் சிரமத்தை எதிர்நோக்கி வருகிறது. மற்றும் அதற்கான காரணங்களை தேட அதிக தூரம் செல்ல வேண்டியதில்லை.
ஆரம்பிக்க வேண்டுமானால், தற்போதைய அரசாங்கம் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ள அத்தகைய வல்லமை மிக்க பணிகளை சுதந்திரமடைந்த காலத்துக்குப் பின் ஆட்சிக்கு வந்த வேறு எந்த அரசாங்கமும் செய்வதற்கு அழைப்பு விடுக்கவில்லை. தமிழர்களின் மனக்குறைகளை திறமையான அதிகாரப் பரவலாக்கத்தின் மூலமாகத் தீர்ப்பதற்காக ஒரு அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு அது கடமைப்பட்டுள்ளது, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நீதி வழங்குவதற்கான சர்வதேசத்தின் கோரிக்கைகளை அது நிறைவேற்ற வேண்டியுள்ளது, மற்றும் ஆரோக்கியமான ஊழலற்ற பொருளாதாரத்துடன் கூடிய ஊழலற்ற ஆட்சியை நாட்டு மக்களுக்கு வழங்கவேண்டி உள்ளது.
உடனடிக் காலத்தில், அரசாங்கத்தின் பலவீனமாக பொருளாதாரம் இல்லை என்பதை அது நிரூபிக்க வேண்டியதாக உள்ளது. கடந்த வருடம் பண பரிமாற்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இந்தியா மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பனவற்றின் உதவியை நாடியது. இந்த வருடமும் அதையே திரும்பவும் செய்ய வேண்டியதாக இருக்கும். அதற்கு மேலாக, வேலையில்லாப் பிரச்சினைகள் மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகளும் உள்ளன. இரசாயன உரங்களுக்கு வழங்கிவந்த மானியத்தின் பகுதியை திரும்ப பெற மேற்கொண்ட முயற்சி விவசாய சமூகத்தை குழப்பமடைய வைத்துள்ளது. மோசமான ஒரு நேரத்தில் நடைபெற்ற ஒரு சம்பவமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளை திருத்தியமைக்கும் நாட்களில் அரசாங்கம் வரிகளை உயர்த்தியதுடன் கோதுமையின் விலையையும் உயர்த்தியது. திரும்பவும் அது மக்களால் நல்ல முறையில் ஏற்கப்படவில்லை. இப்போது அது குறைந்தபட்ச வேதனத்தினை உயர்த்தப் போவதாகவும் மற்றும் அதைத் தொடர்ந்து அரசாங்க சம்பளங்களையும் கூட உயர்த்தப் போவதாக வாக்குறுதி வழங்கியுள்ளது, இதன் விளைவாக இந்த கடப்பாடுகளை நிறைவேற்ற உரிய வளங்களை கண்டு பிடிக்க வேண்டும்.
இங்குதான் மகிந்த ராஜபக்ஸ பல நிறக் கலவையான ஆதரவாளர்களுடன் ( மாறாக தங்களை கூட்டு எதிர்க்கட்சி என அழைக்கிறார்கள்) சேர்ந்து தனது வாய்ப்பு வரப் போகிறது என்று உணர்கிறார். பொருளாதாரத்தின் மீதுள்ள பொதுமக்களின் அதிருப்தியுடன் அவர் விளையாட முடியும் என்றால் அவரால் சில முன்னேற்றங்களை அடைய முடியும் மற்றும் அவர்மீதும் மற்றும் அவரது குடும்பத்தின் மீதும் குவிந்துள்ள ஊழல் வழக்குகளின் விளைவுகளையாவது சமாளிப்பது சாத்தியமாகும். முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் சிறிய ஒரு தொகையினராக இருந்தாலும்கூட, அது இன்னமும் தாய்க் கட்சியில் ஒரு பிரிவினை வடிவத்தை ஏற்படுத்துகிறது.
எல்லா இடங்களிலும் உள்ள அரசியல்வாதிகளைப் போலவே மார்ச் 17ல் கொழும்பில் நடைபெற்ற ஒரு பேரணியில் ராஜபக்ஸ சொன்னது (பல மாதங்களுக்குப் பின் அவரது முதலாவது கூட்டத்தில்) தனக்கு எதிராக நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகள் - இன்னும் பதிலை எதிர்பார்த்துள்ளவை – யாவும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று. மேலும் அரசாங்கத்தால் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் திறமை குறைவாக இருந்தால் அதைச் சமாளிப்பதற்கு தன்னை அனுமதிக்கும்படி அவர் அரசாங்கத்துக்கு சவால் விடுத்தார். மற்றும் இறுதியாக தான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு முழு அளவிலான உர மானியத்தை மீண்டும் வழங்குவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.
வரும் மாதங்களிலும் இந்த தந்திரத்தை அவர் தொடரும் சாத்தியம் உள்ளது. அரசாங்கத்தை அதன் பொருளாதார செயல்திறனை துருப்புச் சீட்டாக வைத்து அவர் விளையாடுவாரானால், இப்போது அவரைப் பயமுறுத்தும், கடந்த காலத்தில் அவர் ஜனாதிபதியாக இருந்தபோது அவர் செய்த பிரச்சினைகளில் இருந்து வெளியேறுவதை அவரால் ஓரளவு சமாளிக்க முடியும்.
அதே சீட்டை வைத்து சிறிசேன அரசாங்கத்தின் வெற்றியை கணித்தால், அதன் அதிகம் பேசப்பட்ட திட்டங்களான நாட்டிற்கு புதிய அரசியலமைப்பு கட்டமைப்பை வழங்குவது, நீண்டகால பிரச்சினையான நியாயமான தீர்வை தமிழர்களுடன் கையாள்வது போன்றவற்றை தீர்த்து வைப்பதுடன்;, பொருளாதார பிரச்சினைகளான – வெளிநாட்டு கடன் நெருக்கடி முதல் பொருள்களின் விலை உயர்வு வரையான– குறுகிய காலப் பிரச்சினைகளை வெற்றி காண்பதில்தான் அந்த வெற்றி தங்கியுள்ளது. இந்த ஒழுங்கு தவறாகுமானால், நீண்டகாலமாக தாமதித்து வரும் வாய்ப்பான ஸ்ரீலங்காவின் அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பை மீள்வடிவமைக்கும் திட்டத்தை ஸ்ரீலங்கா மீண்டும் தவறவிடும். எப்போதும் பொருளாதாரம்தான் முட்டாள்தனமாக உள்ளது.
(மோகன் கே. திக்கு, கொழும்பை தளமாகக் கொண்ட ஒரு வெளிநாட்டு நிருபராக இருந்து வருகிறார். அவர் “ஸ்ரீலங்கா: தன்னையே தேடும் ஒரு நிலம்” என்கிற புத்தகத்தின் ஆசிரியர்கூட. அவரது அடுத்த புத்தகமான, “வீழ்ச்சிக்குப் பின்: வெற்றி மற்றும் போரில் ஸ்ரீலங்கா” என்பது, ஒக்ஸ்போட் பல்கலைக்கழக அச்சகத்தால் இம்மாதம் வெளியாக உள்ளது.) தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Enda tamilarukku mattuma pirachinai ulladhu...muslikgalukku ...the writer and translater both indian busterds.no need to publish these articles.
ReplyDelete