Header Ads



முஸ்லிம்களுக்கு அநீதி செய்து, தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியாது - சம்பந்தன்

முஸ்லிம் மக்களுக்கு அநீதி செய்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில்; தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.   

இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உளப்பூர்வமாகச் செயற்படுவதாக த.தே.கூ. நம்புகிறது. சர்வதேசமும் ஆதரவு தெரிவித்து நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். 

மட்டக்களப்பு, சித்தாண்டிப் பிரதேசத்தில் புனரமைக்கப்பட்ட கால்நடைத் தீவன உற்பத்தித் தொழிற்சாலையை சனிக்கிழமை (09) மாலை திறந்துவைத்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

'கடந்த காலத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் மிகவும் ஒற்றுமையக வாழ்ந்துவந்துள்ளனர். மேலும், எமது மாவட்டத்தில் வாழும் பெரும்பான்மையின மக்களும் சுதந்திரமாக சகல உரிமைகளுடனும் வாழ வேண்டும்' என்றார்.    

 'நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் சமத்துவமாக வாழ வேண்டும். கௌரவமாக சுய மரியாதையுடன் வாழ வேண்டும். நீதியின் அடிப்படையில் ஆட்சி நடைபெற வேண்டும். இவற்றை உறுதி செய்து முழுமையான அடைவைப் பெற வேண்டுமாயின், தமிழ் மக்களும் முஸ்லிம்களும் தங்களுக்கிடையிலுள்ள வேற்றுமைகளை மறந்து ஒற்றுமைப்பட்டு, தங்களுடைய பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்.   தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்புடன் பேசி இணைக்கப்பாட்டுடன் வந்திருந்தோம். 

இந்த விவகாரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில் தயாரிக்கப்பட்ட அரசியல் சீர்திருத்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஆகையால் சகோதர இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை சமத்துவம், சரித்திரப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு தீர்க்க வேண்டும்' என்றார்.   'நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி அனைவரும் சமத்துவமாக வாழ வேண்டுமென்ற கோட்பாட்டுடன் ஒன்றுபட்டு பெறக்கூடியவற்றை முழுமையாக பெற்றுக்கொள்வதற்கு திடசங்கற்பம் பூண வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார். 

2 comments:

  1. சம்பந்தன் ஐயா அவர்களே ஸ்ரீநேசன், யோகேஸ்வரன் போன்ற இன வெறியர்கள் உங்களை சுற்றியிருக்க நீங்கள் மட்டும் நல்லவராக இருந்தால் போதுமா?

    ReplyDelete
  2. Ekwa
    Did you see the number of racists behind Mahinda ?
    Do you think that's all SLFP had and the UNP don't
    have any ? The present govt is honestly committed
    to communal harmony but that doesn't mean there
    are no racists among them . The leadership is
    strong , the journey is ambitious and decisive .
    So , racist remarks don't leak from their mouths.
    I think TNA is fully capable of controlling bad
    mouths . Muslims should try to give TNA an
    opportunity to serve them like we gave My3 and
    Ranil their dues .

    ReplyDelete

Powered by Blogger.