Header Ads



கோவில் திருவிழாவில் தீ விபத்து, 100 பேர் பலி, 300 பேர் காயம்


கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள பராவூர் கோவில் திருவிழாவில் இன்று -10- அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தினால் பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.  300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பராவூர் புன்டிங்கல் தேவி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் கோவில் திருவிழா இந்தாண்டும் வழக்கம் போல் நடைபெற்றது. திருவிழாவி்ன் போது அதிகாலை 3.30 மணியளவில் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் 102 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி விரைந்துள்ளார். தீவிபத்து குறித்து விசாரணைககு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


1 comment:

  1. இதே ஒரு பள்ளிவாயலில் நடந்திருந்தால், "உங்கள் அல்லா பார்த்துக்கொண்டா இருந்தார்?" என்று உடனே comment வந்திருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.