Header Ads



கொழும்பில் இந்தியப், போர்க் கப்பல்கள்

இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சி அணியைச் சேர்ந்த இரண்டு போர்க்கப்பல்களும், இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பல் ஒன்றும், ஆறு நாள் பயணமாக இன்று -15- கொழும்புத் துறைமுகம் வந்துள்ளன.

இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்களான ஐ.என்எஸ் சுஜாதா, ஐஎன்எஸ் திர் ஆகிய போர்க்கப்பல்களும், இந்தியக் கடலோரக் காவல்படையின் வருண என்ற ரோந்துக் கப்பலுமே இன்று கொழும்பு வந்துள்ளன.

பயிற்சி நோக்கிலான பயணமாகவே இந்தியப் போர்க்கப்பல்கள் சி்றிலங்கா வந்திருக்கின்றன.

இந்தப் போர்க்கப்பல்களுக்கு கொழும்புத் துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்துள்ளனர்.

வரும் 19ஆம் நாள் இந்தக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் போது சிறிலங்கா கடற்படையினருடன் கூட்டு வழிப்பயிற்சியில் ஈடுபடவுள்ளன.


1 comment:

  1. Every one threaten us.. China might be ok other then America and India

    ReplyDelete

Powered by Blogger.