Header Ads



அவதார் படத்தில், மேலும் 4 பாகங்கள் வெளிவரும்


உலகம் முழுவதும் பெரும் வெற்றிபெற்ற அவதார் படத்தில் மேலும் நான்கு பாகங்கள் வெளிவரும் என அப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரன் தெரிவித்திருக்கிறார். ஐந்தாவது பாகம் 2023ல் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் மூன்று பாகங்கள் வெளியாகுமென ஜேம்ஸ் கேமரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், தன்னிடம் இருக்கும் கதை மூன்று பாகங்களுக்குள் அடங்காது என தற்போது கூறியிருக்கிறார்.

உலக அளவில் இதுவரை வெளியான திரைப்படங்களில், அதிக வசூல் செய்த படமாக அவதார் இருக்கிறது. 2009ல் வெளியான இந்தப் படம் தற்போதுவரை 2.7 பில்லியன் டாலர்களை வசூலித்திருக்கிறது.

அவதார் படத்தின் இரண்டாவது பாகம் 2018லும் அதற்கடுத்த பாகங்கள் 2020, 2022, 2023லும் வெளியாகும்.

டிவென்டியத் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவன விழாவிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.

அதோபோல சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற டெட்பூல் திரைப்படத்திற்கும் அடுத்த பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உலகம் முழுவதும் இந்தத் திரைப்படம் 757 மில்லியன் டாலர்களை வசூலித்தது.

1 comment:

  1. When Jaffna muslim started cinima news articles....
    Is this a promotion article or just information...

    ReplyDelete

Powered by Blogger.