Header Ads



அரசாங்கத்தில் இருப்பதா, இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் - மகிந்த


ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் இருக்க தான் எந்த விதத்திலும் விரும்பவில்லை என அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகார சபைக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு மில்லியன் ரூபா நிதியை வழங்கும் சுற்றறிக்கையை புத்தாண்டுக்கு முன்னர் திரும்ப பெறவில்லை என்றால், தேசிய அரசாங்கத்தில் இருப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் இருப்பதில் எனக்கு எப்படியும் விருப்பமில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த போதெல்லாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு நடந்த துன்புறுத்தல்களை மறக்கவில்லை.

நாங்கள் தற்போதைய அரசாங்கத்துடன் இணையாமல் போயிருந்தால், கட்சியினர் துன்புறுத்தல்களை அனுபவித்து கொண்டிருப்பார்கள் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.