Header Ads



கோயில் விபத்தில் மரணமடைந்த குடும்பத்தினருக்கு, அள்ளிவழங்கும் யூஸுப் அலி


கோவில் நிகழ்ட்சி ஒன்றில் கம்ப கட்டு என்ற பெயரில் வெடி வெடிக்கும் திருநாளை கொண்டாடிய நமது இந்து சகோதரர்கள் பலர்கள் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கிறார்கள்

100 அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் பலர்கள் படுகாயமுற்றிருக்கிறார்கள் இந்த சோக நிகழ்வு மலையாள மண்ணை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது அந்த துயரத்தில் நாமும் பங்கு எடுத்து கொள்வோம்

வெடி வெடித்து சிதறியது இந்துக்களின் வழிபாட்டு தலம் என்றாலும் அந்த துயரம் நடந்த மறு நொடியே இஸ்லாமியர்களும் இஸ்லாமிய அமைப்புகளும் போட்டி போட்டு கொண்டு மீட்பு பணியில் இறங்கினர்

நமது தொப்பிள் கொடி உறவுகளான இந்து சகோதரர்கள் பலருக்கும் தேவையான உதவிகளை இஸ்லாமியர்கள் செய்ததின் மூலமும் செய்து வருவதின் மூலம் முஸ்லிம்கள் மதங்களை கடந்து மனிதத்தை நேசிக்ககுடியவர்கள் என்பது மீண்டும் ஒரு முறை உறுதி செய்ய பட்டது

குறிப்பாக கேரள தொழில் அதிபர்களில் குறிப்பிடதக்கவர் யுசுப் அலி இவர் உலகம் முழுவதும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்

அவர் இந்த வெடி விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திர்கு ஒரு இலட்ச ரூபாய் உதவி வழங்கபடும் என்று அறிவித்திருப்பதோடு சுமார் நான்கு கோடி ரூபாய்கள் வரை இந்த விபத்தில் காயமுற்றோர்களுக்கு வழங்க போவதாக அறிவித்துள்ளார்

மேலும் இடிபாடுகளின் சேதங்கள் சீரமைக்க உடனடி உதவியாக ஒன்றரை கோடி ரூபாய கொல்லம் மாவட்ட ஆட்சியர் நிதிக்காக வழங்க தனது கேரள பிரதிநிதிக்கு அறிவுறுத்தியுள்ளார்!

யுசுப் அலியின் மதம் கடந்த இந்த மனித நேயத்தை மலையாள மக்கள் மதங்களை கடந்து நெகிழ்ட்சியுடன் நினைவு கூறுகின்றனர்

செல்வந்தர்கள் இது போன்ற பேரிடர் காலங்களில் சாதி மதம் பார்க்காமல் உதவ முன்வர வேண்டும். இடி பாடுகளை அகற்றுவதிலும் மருத்துவ மனையில் ரத்த தானம் செய்வதிலும் இஸ்லாமியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

4 comments:

  1. Indiyavil.muslim.nalla .ullam.padaiththavarkal.srilankavil.ullamuslimkal.eppadi.seivarkala

    ReplyDelete
  2. Srilankavil ull hindukkal adutthavanukku uthavattiyum paravayilla...sollalum seyalalum adutthavanai imsikkamal iruppana....seiveergala?????

    ReplyDelete
  3. @ Sritharan..Ide vai tan sollum india la bomb vedittal adu muslimgal endrum avargal terrorist endrum. Ide hindu seidal avargal Thesapatralargal endru solluweenga. ponga summa..

    ReplyDelete
  4. ELLAAM POLITIC INDU MANAVRGAL NEED VEEDU ILLATHA MUSLIMGAL KERALAVIL KASTA PADUGRARGAL KALANGIA NEERIL MEEN PIDIKRA BUSINEES

    ReplyDelete

Powered by Blogger.