"துருக்கி ஜனாதிபதி தண்ணீரில் மூழ்கி, உயிருக்கு போராடுகிறார் என்றால்..?
ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடினிடம் 12 வயதான சிறுமி ஒருவர் அதிரடி கேள்வி கேட்டு அசர வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி கேட்கும் வருடாந்திர நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட பல்வேறு அரசியல் மற்றும் பொதுவான கேள்விகளுக்கு ஜனாதிபதி புடின் அமைதியாக பதிலளித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தொலைப்பேசி மூலமாக 12 வயது சிறுமி ஒருவர் கேட்ட கேள்வி ஜனாதிபதி புடினை அசர வைத்துள்ளார்.
பெயர் வெளியிடப்படாத அந்த சிறுமி ‘சார், துருக்கி ஜனாதிபதியான Recep Tayyip Erdogan என்பவரும், உக்ரைன் ஜனாதிபதியான Petro Poroshenko என்பவரும் இப்போது தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடி வருகின்றனர் என கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.
இந்த இரண்டு ஜனாதிபதிகளில் யாருக்கு நீங்கள் முதலில் கை கொடுத்து காப்பாற்றுவீர்கள்?’ என அந்த சிறுமி கேள்வி கேட்டுள்ளார்.
சிறுமியின் கேள்வியால் ஒரு வினாடி யோசித்த ஜனாதிபதி புடின், பின்னர் ‘நீங்கள் கூறிய இருவருமே தண்ணீரில் மூழ்க வேண்டும் என அவர்களே முடிவு செய்திருந்தால், அவர்களை காப்பாற்றுவது முடியாத காரியம்.
எனினும், இருவரில் யாருக்கு உதவி வேண்டும் என என்னிடம் கையை நீட்டினாலும், அவரை காப்பாற்ற நான் தயாராக இருக்கிறேன்’ என கூலாக பதிலளித்துள்ளார்.
அண்மைக் காலங்களில் துருக்கி மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் ரஷ்யாவிடம் பகைமை ஏற்படுத்தி வரும் நிலையில் சிறுமி இந்த கேள்வி கேட்டுருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment