Header Ads



தாய் நாட்டுக்காக விளையாடாதவர்கள், இந்தியாவிற்கு சென்று நன்றாக விளையாடுகின்றார்கள்..!

தாய் நாட்டுக்காக விளையாடாதவர்கள் இந்தியாவிற்கு சென்று நன்றாக விளையாடுகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க நேற்று -07- நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தம் கூறுகையில் விளையாட்டுத்துறையில் ஒழுக்க விதிகள் உருவாக்கப்பட வேண்டும்.

விளையாட்டு வீரர்கள் பணத்தை அடிப்படையாகக் கொண்டு விளம்பரங்களில் தோன்றி அதைக் குடிக்கவும் இதைக் குடிக்கவும் எனக் கோரும் நிலைமை மாற்றப்பட வேண்டும்.

விளையாட்டு வீரர்களின் நிதி விவகாரங்கள் தொடர்பில் கட்டுப்பாடு அவசியமாகின்றது.

குறைந்தபட்சம் விளையாட்டுகளின் அணித் தலைவர்கள் உப தலைவர்களுக்கேனும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.

இலங்கையின் தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்ய முடியாதவர்கள் இந்திய கழக மட்டப் போட்டிகளில் பங்கேற்கின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை அணியின் டுவன்ரி20 அணித்தலைவராக செயற்பட்டு வந்து வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தொடர்பிலேயே அவர் இவ்வாறு மறைமுகாக கூறியுள்ளார்.

உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் போது உபாதை எனக்கூறி போட்டித் தொடரிலிருந்து விலகிக் கொண்ட லசித் மாலிங்க இன்று ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் போட்டித்தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை பிரதிநிதித்துவம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 comments:

  1. who is malinga his not best player if compaire with vass nearly 18 years he have play both matches test and odi sl cricket board has to find another bowlers like vass

    ReplyDelete
  2. தாய் நாட்டிற்காக நேர்மையாக செயற்படாத சுய நலம் கொண்ட அரசியல்வாதிகள், அரச உத்தியோகத்தர்கள், வரி எய்ப்பு செய்வோர், கடத்தல் வியாபாரம் செய்வோர் என பல பேர் எவ்வித பிரச்சினய்களும் இல்லாமல் வசதியாக வாழும் பொது வீரர்கள் எம்மாத்திரம்?

    ReplyDelete
  3. அரசியல் அறிவு மட்டுமல்ல.. சர்வதேச விளையாட்டு, உபாதைகள் பற்றிய அடிப்படை அறிவும் தங்களுக்கு கிடையாது என்பதை நிரூபித்து கருத்தும் தெரிவிக்கும் முட்டாள் அரசியல்வாதிகளில் ஒருவரை அடையாளங் காண்பித்தமைக்கு செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

    லசித் மலிங்க, ஆசியக்கிண்ணமும் உலகக்கிண்ணமும் நடைபெற்றபோது முழுமையாக அல்லாமல் பகுதியளவிலேயே குணமடைந்திருந்தார். ஒருவேளை இறுதிப்போட்டிக்கு இலங்கை முன்னேறியிருந்தால் உபாதையைக்கூடப் பொறுத்துக்கொண்டு விளையாடியிருக்கலாம். தற்போது குணமடைந்த காரணத்தால் இந்தியபிரிமியர் லீக்போட்டியில் விளையாடுகின்றார்.

    ஒரு வீரர் உடற் தகுதியற்றிருக்கும்போது எதிர்காலத் தேவை கருதி ஓய்வெடுப்பதும் அந்த தேவைகள் முடிவடைந்ததும் மீண்டும் விளையாடச் செல்வதும் இயல்பானதே.

    ReplyDelete

Powered by Blogger.