லசித் மாலிங்கவிற்கு எதிராக, ஒழுக்காற்று விசாரணை
இலங்கை கிரிக்கட் அணியின் டுவன்ரி20 போட்டிகளுக்கான தலைவர் லசித் மாலிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் அனுமதியின்றி இந்திய பிரிமியர் லீக் போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கட்டை ஊடகங்களில் கடுமையான விமர்சனம் செய்தததாகவும் மாலிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் காரணிகளின் அடிப்படையில் லசித் மாலிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்திய பிரிமியர் லீக் டுவன்வரி20 போட்டித் தொடரில் லசித் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணியை பிரதிநிதி;த்துவம் செய்கின்றார்.
கடந்த உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் உபாதை காரணமாக இலங்கை அணியின் சார்பில் லசித் மாலிங்க போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பின்னணியில் ஐ.பி.எல் போட்டித் தொடரில் பங்கேற்க லசித் மாலிங்க இந்தியா சென்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு ஒரு உபாதையும் இல்லை.ஐ.பி.எல் பாே்ட்டிக்கா்க தன்னை தயார் படுத்திக் காெ்ண்டார் அவ்வளவு தான்.
ReplyDeleteNOW EVERY ONE CAN UNDERSTAND WHAT IS IPL AIM INDIA THEY WANT SPOIL ALL OTHER COUNTRY CRICKET FUTURE NEXT 2 TO 3 THREE YEARS INDIA IS BEST EVER NOW HOW MANY PLAYERS THEY AGAINST THEIR MOTHER COUNTRY TEAM IS IT BCOZ IPL ANY PALYER REFUSE INDIA INTERNATIONAL MATCH, NO BUT ALL OTHER COUNTRY THEIR LOOSING THEIR BEST PLAYER THIS IS LEGAL MATCH FIXINGS ICC IF NOT STOP IPL CRICKET FUTURE WILL BE ?
ReplyDelete