ஹஜ் விவகாரத்தில் இலங்கை முஸ்லிம், ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு
-HAFEEZ-
முஸ்லிம் சமய விவகார அமைச்சையும் பொது மக்களையும் தவறான வழியில் ஒரு சில முஸ்லிம் ஊடகங்கள் கொண்டு செல்வதாக ஒரு சில சிரேஷ்ட ஹஜ் முகவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முஸ்லிம்மக்களையும் முஸ்லிம் சமய விவகார அமைச்சையும் தவறான திசையில் ஊடகங்கள் வழி நடத்துவதாக 20 வருடங்களுக்கும் மேற்பட்ட கால ஹஜ் முகவர்களாக இருந்த பலர் ஊடகங்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.
ஹஜ் விவகாரங்கள் தொடர்பாக ஒரு சில ஊடகங்கள் தினமும் தவறாகவே முஸ்லிம்களை வழி நடத்தவதாகவும் இதனால் பலர் தமது ஹஜ் வாய்ப்புக்களை இழந்த சம்பவங்கள் இடம் பெற்றதாகவும் நீண்ட அனுபவம் கொண்டவரும், ஆரம்பகாலம் முதல் இன்று வரை தொடர்ந்து ஹஜ் விசா வினியோகங்களையும் வழிகாட்டல் சேவைகளையும் வழங்கிய ஹஜ் முகவர் நிறுவனத் தலைவர் ஒருவர் குற்றம் சுமத்தினார். ஊடகங்கள் இதற்குப் பொறுப்புக் கூறவேண்டும் என்றும் அவர் கூறினர்.
மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன் சுமார் ஐந்து இலட்சங்கள் வரை சில முகவர்கள் கட்டணமாக அறவிட்டனர். ஒருவர் தனது பாஸ்போட்டை தயாராக வைத்திருந்த வேளை ஹஜ் குழுவின் இணைத்தலைவர் ஒருவர் மூன்று இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாவிற்கு மேல் யாரும் முகவர்களிடம் பணம் கட்ட வேண்டாம் என்று கூறியிருந்தார். அது பத்திரிகை செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. அது அன்றைய ஒரு தினசரி ஒன்றின் முன் பக்கம் பிரசுரமாகி இருந்தது. பணம் கட்ட தயாராக வந்த ஒருவர் மேற்படி செய்தியை காரியாலயத்திலிருந்த பத்திரிகையில் வாசித்தார். உடனே அவர் பணம் கட்டுவதில் தாமதம் செய்தார்.
பணம் கட்ட வந்த அவர் கூறினார் ஹஜ் கமிட்டி தலைவர் கூறுவது அரசின்அறிக்கையாகும். அரசு கூறும் தொகையை விட ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாயை நான் கொடுத்தால் அது இலஞ்சமாகிவிடும். எனவே தன்னால் ஐந்து இலட்சம் தர முடியாது என்று திரும்பிட்டார். பாவம் இன்று அவரை அவரால் ஹஜ் செய்யக்கிடைக்கவும் இல்லலை 5 இலட்சத்தை விடப் பணம் குறையவும் இல்லை. அவர் சேர்த்துவைத்த பணம் செலவழிந்தும் விட்டதாம். ஆனால் அக்காலத்தில் சகல முகவர்களிடமும் அமைச்சரால் குறிப்பிடப்பட்ட மூன்று இலட்சத்து நாற்பதாயிரத்தை விட அதிக பணம் கொடுத்தே மக்கா சென்றனர். ஆனால் அந்த முகவர்கள் மீது எது வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அது முடியாத காரியம். ஏனெனில் அமைச்சர் வாய்ப் பேச்சிக்காகக் கூறிய விடயத்திற்கு சட்ட அங்கீகாரம் இல்லை. ஊடகங்கள் அதனை பெரிது படத்தி விட்டன. இதனால் அப்பாவிப் பொது மகன் அதனை நம்பி ஏமாந்து போனதுதான் மிச்சம். இதுபோல் இன்னும் எத்தனை பேர் ஏமாந்து போனாhர்கள் என்பது தெரியாது.
இதேபோல் இன்று வரை 2016ம் ஆண்டுக்கான இலங்கை ஹாஜிகளின் எண்ணிக்கை 2240 என்றே வரையறுக்கப்பட்டுள்ளது. இணையச் சேவையில் அவ்வாறே பதிவாகியுள்ளது. ஆனால் இம்முறை 6000 பேரை அழைத்துச் செல்ல முஸ்லிம் சமய விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது தற்போதைக்கு சாத்தியப்படாத விடயம். சவூதி அரேபியாவில் இலங்கை பற்றி எக்கவலையும் இல்லை. பல இலட்ச மக்கள் குவியும் அந்த நாட்டில் 2000 பேர் துச்சமாகும். இதனை நம்பி இன்னும் எத்தனை பேர் ஏமாற்றமடையப் போகின்றனர் என்பது தெரியாது.
அதேபோல் இன்னொரு உதாரணம்- இம்முறை மிகக் குறைந்த செலவில் மக்காவிற்கு ஹாஜிகளை அனுப்பு உள்ளோம் என்ற ஒரு செய்தியும் வெளியாகி வருகிறது. மிகக் குறைந்த செலவு என்பது சர்த்தியப்படாத ஒன்று. காரணம் 2240 கோட்டாக்களை பங்கிடும் போது ஒருவருக்கு 25 அல்லது 30 பேர்தான் ஆகக் கூடியது கிடைக்கும். சிலருக்கு ஐந்து பத்தாகவும் இருக்கலாம். அப்படியான நேரத்தில் போட்டி அதிகரித்து பேரம் பேசுதலும் அதிகரித்து தொகை இன்னும் கூடுமே ஒழிய குறையப் போவத்pல்லை. அதே நேரம் டொலர் மார்கட் உயர்ந்து கொண்டு போகும் போது கடந்த வருடத்தை விட இவ்வருடம் பணமசத் தொகை கூடுமே ஒழிய குறையாது.
இவ்வாறு சில பத்திரிகைகள் தினமும் ஹஜ் விவகாரங்கள் தொடர்பாக பொதுமக்கள் குழப்பமடையும் செய்திகளைப் பிரசுரித்து குழப்ப நிலையைத் தோற்று விக்கின்றன. அதேநேரம் புதிய அமைச்சரின் கீழ் புதிய ஹஜ் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் போதிய அனுபவத்தை பெற்றிராத நிலையில் பலர் இவர்களை திசை திரும்ப முயற்சிக்கின்றனர்.
மேலும் இம்முறை ஹஜ் பயனத்திற்காக எத்தனை பேரை அழைத்துச் செல்லப் போகிறீர்கள் என முஸ்லிம் விவகார அமைச்சின் ஒரு உயர் அதிகாரியிடம் கேட்ட போது அவர் கூறிய பதிலோ இன்னும் 2240 ல் மாற்றமில்லை. ஆனால் அதனை 2600 ஆக்க முயற்சிக்கிறோம் என்றார். அப்போது 6000 பேர் கதை என்ன எனக்கேட்டோம். சில அதிகாரிகள் முடிவுகளை எடுத்த பிறகுதான் அமைச்சருக்கு அறிவிக்கின்றனர். அமைச்சினுள் நடக்கும் எல்லா விடயங்களும் அமைச்சருக்குத் உரிய காலத்தில் தெரியாது. இக்குறைபாடுகள் காரணமாக சிலர் தவறாக வழியில் தகவல்களை வெளியிடுவதும் உண்டு, பிழையான ஊடக கருத்துக்களும் உண்டு என்றார்.
இதுபோல் ஹஜ் முகவர்களையும் பொது மக்களையும் சில பத்திரிகைகள் தவறாகவே வழிநடத்துவதாகவும் முஸ்லிம்களுக்கு மத்தியில் தவறான விமர்சனத்தை அது உருவாக்கும் என மூத்த முகவர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது டொலருக்கான கொள்வனவுத் தொகை கூடி இலங்கை ரூபாவின் பெருமதி குறைந்து கொண்டே போகிறது. எனவே குறைந்த பணச்செலவில் என்பது சாத்தியப்படாத ஒன்று என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் குறிப்பாக முஸ்லிம் பெயர் தாங்கி வரும் ஊடகங்கள் ஹஜ் முகவர்களையும் ஹஜ் செய்ய எதிர் பாhத்துள்ளவர்களை மோதவிட்டு கூத்துப் பார்ப்பதுடன் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சை சங்கடத்திற்கு ஆளாக்கும் நிலைமையையுமே உருவாக்கி வருகின்றன. அவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என அந்த முகவர் கேட்டுக் கொண்டார்.

Post a Comment