Header Ads



'கசகசா சாப்பிட்டால், சிறைத் தண்டனை

''கசகசா சேர்க்கப்பட்ட கேக் சாப்பிட்டால் சிறைத் தண்டனை விதிக்கப்படும்,'' என, மலேஷிய மூத்த அதிகாரி அப்துல்லா இஷாக் கூறியுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான, மலேஷியாவில், போதைப்பொருள் புலனாய்வு துறை தலைவர் அப்துல்லா இஷாக், கோலாலம்பூரில் நேற்று கூறியதாவது,

மலேஷியாவில், கசகசா சேர்க்கப்பட்ட கேக் சாப்பிடுவது குற்றம். இதற்கு, சிறைத் தண்டனை விதிக்க, சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

கசகசா சேர்க்கப்பட்ட கேக் சாப்பிட்டது தெரியவந்தால், அந்த நபரின் சிறுநீர் சோதிக்கப்படும்.

போதைப்பொருள் இருப்பதாக, சோதனை முடிவில் தெரிய வந்தால், அந்த நபர், போதை பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார். இந்த குற்றத்துக்கு, இரண்டு ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மலேஷியாவில் போதைப் பொருளாக கருதப்படும், கசகசா, இந்தியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

மலேஷியாவில், விற்பனையை அதிகரிப்பதற்காக, கேக்கில் கசகசா சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. கசகசாவை அதிகளவில் சாப்பிட்டால், போதைப்பொருள் சாப்பிட்டதற்கு நிகரான உணர்வுகள் உண்டாகும் எனக் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.