தலிபான்களின் "தாக்குதல் பருவம்' தொடக்கம்
ஆப்கானிஸ்தானில் ஆண்டுதோறும் தங்களது தாக்குதலைத் தீவிரப்படுத்தும் பருவம் செவ்வாய்க்கிழமை (ஏப். 12) தொடங்கியதாக தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்தது.
இதுகுறித்து ஊடகங்களுக்கு தலிபான் பயங்கரவாதிகள் அனுப்பிய மின்னஞ்சலில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதிய உத்வேகத்துடன் எங்களது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் பருவம் செவ்வாய்க்கிழமை காலை 5 மணியிலிருந்து தொடங்குகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த தலைவர் முல்லா ஒமர் நினைவாக, இந்த நடவடிக்கைக்கு "ஒமரி' என்று பெயரிடப்படுகிறது. அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான புனிதப் போரில் ஈடுபடுவது அனைவரது கடமையாகும் என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலிபான் நிறுவனத் தலைவர் முல்லா ஒமர் உயிரிழந்த விவரம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் உட்பூசல் நிலவியதாகக் கூறப்பட்டது.
எனினும், முல்லா அக்தர் மன்சூரின் புதிய தலைமையில் தலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர்.

Post a Comment