பனாமா கறுப்புப் பண மோசடி - இலங்கையிலிருந்து முதலாவது ராஜினாமா
மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் மெகாபொலிஸ் அமைச்சின் ஆலோசகர் வித்திய அமரபால பனாமா பேப்பர் விவகாரத்தில் சிக்குண்டுள்ளதை தொடர்ந்து தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
சர்வதேச நிறுவனங்களுடன் அமரபாலவிற்கு தொடர்புள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அவர் விசாரணைகளிற்கு வழிவிட்டு தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அமரபாலவிற்கு ஐடபில்யூ ஹோல்டிங்ஸ் மற்றும் சொவொரின் கப்பிட்டல் கோர்ப்பரேசன் நிறுவனங்களுடன் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment