சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த, சில சக்திகள் தீவிரமாகச் செயற்படுகின்றன - மாவை
இந்த நாட்டில் வாழும் சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதில் சில அரசியற் சக்திகள் தீவிரமாகச் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா, ‘த சண்டே லீடர்’ வாரஇதழுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை எனவும், ஆனால் இவர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியற் தீர்வொன்றை விரும்புவதாகவும், இந்த நாட்டில் வாழும் மக்கள் போன்று தாமும் சம உரிமையைப் பெற்று வாழவேண்டும் எனவும் தமிழ் மக்கள் விரும்புவதாக சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment