முஸ்லிம் அரசியல் வாதிகளிடம், நாம் தோற்றுப்போவது ஏன்..?
Zuhair Ali (MBA - PGD,Ghafoori)
இஸ்லாம் தனி மனித,குடும்பவியல் ,அரசியல்,சமூகவியல் என்ற எல்லா விதமன மனித இயல்பிற்கு ஏற்ப ஒரு பண்பாடான ஒழுக்கவியல் சார்ந்த வையகம், முஸ்லிம் உம்மா இன்றைய சூழலில் அரசியல் மற்றும் இஸ்லாம் பற்றிய புரிந்துணர்வை கொண்டிருப்பது அவசியமாகும்.உலகின் அரசியல் நிகழ்வுகள் பற்றிய பார்வையில் இஸ்லாம் ஒரு சிறப்பான கண்ணோட்டத்தை வழங்கியிருப்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இஸ்லாமிய அரசியலை தெளிவாக முழுமையான முறையில் எவர் தனதாக்கி கொள்ளவில்லையோ அவரை ஆதரப்பது கூடாது.
“எவரொருவரை முஸ்லிம்களின் விவகாரங்களுக்கு பொறுப்பாளியாக நியமித்து அதில் அவர் பொடுபோக்காக இருந்து அவர்களின் தேவைகள் மற்றும் ஏழ்மையை போக்க அக்கறை கொள்ளவில்லையெனில் மறுமை நாளில் அல்லாஹ் இவருடைய விஷயத்தில் கவலையற்றவனாகவும் அவருடைய தேவை மற்றும் ஏழ்மையில் அக்கறை கொள்ளவும் மாட்டான்.” (அபூதாவூத் 2948)
இஸ்லாத்தில், பள்ளிவாயல்களில் அரசியலை நுழைக்க வேண்டாம் என்ற வாதங்களை கால காலமாக நாம் விவதிதுக்கொண்டும் கட்சி கட்சியாக பிரிந்து கொண்டும் பிளவு பட்டுக் கொண்டும் இருக்கிறோம் முற்காலத்தில், இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் பெரும் ஆட்சியாளராக விளங்கினார்கள். அவர்களின் புதல்வர் நபி சுலைமான் (அலை) அவர்கள் பேரரசை நிறுவி ஆண்டார்கள். யூஷஉ பின் நூன் (அலை) அவர்களின் தலைமையில் அமாலிக்கர்களை இஸ்ரவேலர்கள் வென்றனர். நபி யூசுஃப் (அலை) அவர்கள், தம் சகோதரர்களின் துரோகத்திற்குப் பின்பு எகிப்தின் ஆட்சியில் அமர்ந்தார்கள்.
இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும்போதே மக்கா, கைபர், பஹ்ரைன் உள்ளிட்ட அரபு தீபகற்பம் முஸ்லிம்களின் கைக்கு வந்துவிட்டது. பலர் காப்புவரி செலுத்தினர். கிழக்கு ரோமானியப் பேரரசர் ஹிரக்ளீயஸ், எகிப்து ஆட்சித் தலைவர் முகவ்கிஸ், அபிசீனிய மன்னர் நஜாஷீ (நீகஸ்) ஆகியோர் நபியவர்களை மதித்து அன்பளிப்புகளை அனுப்பிவைத்தனர்.
நபிகளாரின் மறைவுக்குப் பிறகு கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பாரசீகத்தின் சில பகுதிகள், ஷாமின் (சிரியா) டமாஸ்கஸ், புஸ்ரா ஆகிய நகரங்கள் வெற்றிகொள்ளப்பட்டன. கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் எகிப்து, பாரசீகம், கிழக்க ரோம் (பைஸாந்தியா) ஆகியவை வீழ்ந்தன. பாரசீகப் பேரரசன் குஸ்ரூ (கிஸ்ரா), கிழக்கு ரோமானியப் பேரரசன் சீசர் (கைஸர்) ஆகியோர் அதிகாரத்தை இழந்தனர்.
கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் இஸ்லாமியப் பேரரசு, கிழக்கு மற்றும் மேற்கு எல்லைவரை விரிவடைந்தது. மேற்கு நாடுகள் அதன் கோடிவரை வெற்றிகொள்ளப்பட்டன. தெற்கு ஸ்பெயினில் உள்ள அண்டலூசியா (உந்துலுஸ்), சைப்ரஸ் (கப்ரஸ்) ஆகியவை அவற்றில் அடங்கும்.
இதுவே எளிதான சான்றாக அமைந்து விடுகின்றன ஆக இஸ்லாம் ஒரு போதும் அரசியலை ஒதுக்கவும் இல்லை ஒடுக்கவும் இல்லை இஸ்லாம் மேற்கத்திய அரசியல்வாதி கொண்டுள்ள பல தன்மைகளை கண்டிக்கின்றது. அதேபோல் அரசியலில் ஈடுபடுவதற்கு அவர்கள் அடிப்படையாக கொண்டுள்ள கண்ணோட்டத்தையும் கண்டிக்கின்றது.
இஸ்லாம் ஒரு அரசியல்வாதியை அதனுடைய பிரத்தியேக அடிப்படை மற்றும் மதிப்புகளின் அடிப்படையில் உருவாக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. தன்னலன் மட்டுமே அல்லாமல் இஸ்லாம் தன்சார்பற்ற நிலையை வளர்க்கின்றது, ஒரு குறிக்கோளை அடைய இழிவான யுக்திகளை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக உண்மை நிலையையும் வெளிப்படை நிலையையும் மேற்கொள்ள இஸ்லாம் ஊக்குவிக்கிறது. ஒரு முஸ்லிம் தனக்கு எதை நாடுகிறானோ அதையே தன் சகோதரனுக்கு நாடச் சொல்லி இஸ்லாம் கற்றுத்தருகிறது- மேற்குலகமோ அதிகமாக மற்றவர்களின் நலனை விட தன்னலன் மட்டுமே முக்கியமென கற்றுத்தருகிறது.
‘‘ஒரு சமுதாயத்தார்மீது (உங்களுக்கு)ள்ள பகை (அவர்களுக்கு) நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டிவிட வேண்டாம். (எல்லாரிடமும்) நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிகவும் உகந்ததாகும்’’ (5:8) என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான். இன்று அமேரிக்கா,இஸ்ரேலர்களின் நீணட கால திட்டங்கள் அடிப்படையில் ஒரு பொம்மையாக நமக்கே தெரியாமல் இயங்கிக் கொண்டு இருக்கிறோம் என்பது வெள்ளிடை ,நாம் அரிசயல் பேசக்கூடாது என்றும் அந்நிய மொழி படிக்கக் கூடாது என்றும் வரையறை ஆக்கிக் கொண்டுள்ளோம்.
அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த விழையும் நபர்களிடம் இஸ்லாமிய கொள்கை பற்றிய அடிப்படையான புரிதல் அவர்களின் மனதில் பலவீனமாக இருந்தால், அவர்கள் அரசியல் அமைப்பிலிருந்து திசைமாறவும் சிலசமயங்களில் முற்றிலும் அரசியலை விட்டுச்செல்வதும் எளிதாக இருக்கும். ஆகையால் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்கள் இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் தங்களை பக்குவப்படுத்தி கொள்ள விடாமுயற்சி செய்யவேண்டும்.
இலங்கை வரலாறு நெடுகிலும் பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்றிந்தலும் நம் முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் நாம் தோற்று பொய் விடுகிறோம் என்று சொல்லலாம் இஸ்லாமிய எழுச்சி,வசந்தம்,சிந்தனை தூர நோக்கு என்று பேசிக்கொண்டலும் எம்மிடத்தில் எந்த நீண்ட கால நிகல்ட்சி நிரல் இல்லா சமூகமாக இயங்கிக் கொண்டி இருக்கிறோம்,அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது என்பது போல நாம் காலம் சென்ற பின் சிந்திக்கும் சமூகமாக மாறி விடக்கூடாது .
சகோதர மொழி பேசுகின்ற சமூகம் அதிலும் பெரும்பான்மையாக வாழ்கின்ற மக்களுக்கென பிரதானமாக இரண்டு,மூன்று கட்சிகள்தான் இருக்கின்றன என்றாலும் இறுதியில் ஒரு முடிவுக்குள் சுருண்டு விடுவார்கள் ஆனால சிறுபான்மையாக வாழ்கின்ற நாம் நமக்குள் பல கட்சிகள் ,கோட்பாடுகள் இருந்து செறிந்து பல பிரிவினை வாதத்தை தோற்று விக்கவே செய்கின்றன.
சாமானியரும் நெருங்கும் தூரத்தில் ஆட்சியாளர் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தேவையும் வறுமையும் இல்லாமையும் உள்ளவர்கள் அணுக முடியாதவாறு தமது வாயிற்கதவை ஓர் ஆட்சியாளர் அடைத்துக்கொள்வாராயின், அவருடைய தேவையின்போதும் இல்லாமையின்போதும் வறுமையின்போதும் (தன்னை) அணுக முடியாதவாறு அல்லாஹ் வானத்தின் வாயில்களை அடைக்காமல் இருக்கமாட்டான்.
நாம் இன்னும் அவர்களுக்கு பின்னல் கோசம் எழுப்பிக்கொண்டும்,கூச்சலிட்டுக் கொண்டும் அடி மட்ட தொண்டர்களாக இல்லாமல் ஒரு இலட்சியப் பாதையை நோக்கிய பயணமாக ஆக்கிக்கொண்டு நாம அரசியல் தலைவர்களிடம் பல நல்ல கோரிக்கைகளையும் முன் வைக்க வேண்டும் ஒரு தலைவர் இஸ்லாமிய ஒழுக்கவியல் பண்பாடு தெரிந்த ,அரசியல் இராஜ தந்திரமுள்ள தூர நோக்குடன் சிந்தின்க்கின்ர தலைவர் வேண்டும் என்றும்.
‘‘என் இறைவா! என்னைத் திருப்தியான முறையில் நுழையச்செய்வாயாக! என்னைத் திருப்தியான முறையில் வெளியேறச்செய்வாயாக! உன்னிடமிருந்து எனக்கு உதவும் ஒரு சக்தியை வழங்கிடுவாயாக! (17:80)
வெறும் குறுகிய மனப்பக்குவத்துடன் சுயநல அரசியல் செய்தால் நம் முஸ்லிம் சமூகம் மற்றுமல்ல தலைவர்களும் குட்டிச் சுவருக்குள் அடை பட்டுவிடுவோம் தூர நோக்குடன் எதிர் கால சந்ததியினர் நலன் கருதி ஒரு நல்ல முஸ்லிம்களின் அரசியல் சூழலை உண்டாக்கும் கடப்பாடு தலைவர்களுக்கு மாத்திரமல்ல நமக்குத்தான் பலம் இருக்கிறது !

The above article fail to mention the very important role that need to play by ACJU , other Islamic organisation and the mosque trustees of Sri Lankan in the affaires of Muslim . We know our politicians and there interest. We try to restructure our society by ordinary people who love our ummah and those who perform regular prayers, give zaka, fear non but Allah
ReplyDelete