பந்தயப் போட்டி, மோட்டார் சைக்கிலொன்று வீதியை விட்டு விலகியதில் 16 பேர் காயம்
நுவரெலியா உடப்புஸ்ஸல்லாவை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிலொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் பந்தயப் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிலொன்றே நேற்று (16) மாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் 07 பெண்களும் ஆண்கள் நால்வரும் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இன்று நடைபெறவுள்ள மோட்டார் பந்தயப் போட்டியின் காரணமாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை மட்டுப்படுத்தும் நோக்கில் மாற்று வழிகள் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா பிராந்தியத்திற்கான உயர் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இன்று (17) காலை 8 மணி தொடக்கமு நுவரெலியாவில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வெலிமடையிலிருந்து வரும் வாகனங்கள் மஹகஸ்தொட்ட சந்தியூடாக வலது பக்கமாக திரும்பு இஹலவெவ வீதியூடாக நுவரெலியா நகருக்குள் பிரவேசிக்க முடியும்.
கண்டியிலிருந்து பயணிக்கு வாகனங்கள் கடை வீதியூடாக வின்சர் சந்தி, பொரஸ்ட் சந்தியூடாக வலது பக்கமாக திரும்பி நகருக்குள் பிரவேசிக்க முடியும்
மேலும் ஹட்டனிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் பிலக்பூல் சந்தியூடாக வலது பக்கமாக திரும்பி மாகஸ்தொட்ட தோட்டத்தினூடாக நகருக்குள் பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment