Header Ads



பாராளுமன்றத்தில் தலையணைச் சண்டை, பொன்சேக்காவும் துடுப்பெடுத்தாடினார்


எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டப்படவுள்ள சிங்கள- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நாடாளுமன்ற மைதானத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

இதன்போது, ஐதேகவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகேயும் தலையணைச் சண்டையில் ஈடுபட்டனர்.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மற்றொரு பகுதியாக நடந்த துடுப்பாட்டப் போட்டியில், அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, துடுப்பெடுத்தாடினார்.


No comments

Powered by Blogger.