Header Ads



வீசா அனுமதியின்றி 10 வருடங்களாக, இலங்கையில் தங்கியிருந்த பௌத்த பிக்கு கைது

இலங்கையில் 10 வருடங்களுக்கு மேலாக வீசா அனுமதியின்றி தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் ராஜாங்கனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜாங்கனை யாய 11 என்ற பிரதேசத்தில் வீடொன்றில் வசித்து வந்த நிலையில், இந்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிக்குவிடம் அடையாள அட்டையோ, கடவுச்சீட்டோ அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணங்களோ இருக்கவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

சிங்களத்தில் சரளமாக உறையாடும் இந்த பிக்குவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் அதிகமான காலம் மத்துகம பிரதேசத்தில் வசித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. தேரரே விசா இல்லாமலா?.....?....?..... ..............???????

    ReplyDelete

Powered by Blogger.