Header Ads



பகிரங்க விவாதத்திற்கு வரும்படி அநுரகுமாரவுக்கு விமல் அழைப்பு

நாட்டின் எந்த விடயமாக இருந்தாலும் பகிரங்கமாக விவாதத்திற்கு வருமாறு மக்கள் விடுதலை முன்னணி தற்போதைய தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு ஒளிப்பரப்பான அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி நல்லாட்சி அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கு உச்சளவில் பங்களிப்பு செய்து வருகிறது.

இதனை மறைத்து மக்களை தவறாக வழிநடத்துவதற்காக பொய்யாக அரசாங்கத்தை விமர்சித்து இரட்டை நிலைப்பாட்டை கையாண்டு வருகிறது எனவும் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. ஒரு அரசாங்கம் மேற்கொள்ளும் நல்லாட்சி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை நல்குவதும் அது தவறான விடயங்கள் புரியும்போது அதனை விமர்சித்து வழிக்கு கொண்டுவர முயற்சிப்பதும் ஒருபோதும் இரட்டை நிலைப்பாடு ஆகாது. உண்மையில் அதுதான் ஒரு மிகச்சிறந்த அரசியல்வாதிக்குரிய குணாம்சம் மட்டுமல்ல கடமையும் கூட.

    ஆக அநுரகுமார தனது கடமையை வெகுசரியாகத்தான் செய்துவருகின்றார் என்பதற்கு விமலின் இந்த வயிற்றெரிச்சல் வார்த்தைகளே போதும்.

    மற்றப்படி, விவாதத்திற்கெல்லாம் இறங்கினால் விமலின் மூக்குடைந்து கழுத்துவரையுள்ள குறுந்தாடி குருதி தோய்ந்துவிடும்.

    ReplyDelete

Powered by Blogger.