Header Ads



முஸ்லிம் காங்கிரஸுக்கு, இன்று 28 வருடங்கள் பூர்த்தி

-ஷபீக் ஹுஸைன்-

1980ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்டு இன்றோடு 28 வருடங்கள் பூர்த்தியாகின்றன. அதாவது 1988 பெப்ரவரி 11ஆம் திகதி தேர்தல் ஆணையாளர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை ஓர் அரசியல் கட்சியாக அங்கீகரித்து அதனது தேர்தல் சின்னம் 'மரம்' என்றும் அறிவித்தார். அக்காலத்தில் கட்சியொன்றை பதிவுசெய்வதென்பது சாதாரணவிடயமல்ல. இதன்பொருட்டு பெருந் தலைவரும் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் மிகப்பெரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர் என்பது மறக்கமுடியாத விடயமாகும்.

இந்த நாட்டில் புரையோடிப் போயூள்ள இனப்பிரச்சினையை தீர்வுக்கு கொண்டுவருவதற்கு மாறி மாறி ஆட்சி செய்கின்ற பெரும்பான்மை கட்சிகள் தவறிவிட்டன. மக்கள் மத்தியில் தேசிய ஒற்றுமையையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக வேண்டி சகல சமூகங்களையும் ஒன்றிணைக்கின்ற 'தேசிய ஐக்கிய முன்னணி' என்ற ஸ்தாபனத்தை முஸ்லிம் காங்கிரஸின் இணைந்த அமைப்பாக தலைவர் அஷ்ரஃப் உருவாக்கினார். அதனை ஓர் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையாளர் கடந்த 1999.08.23இல் அங்கீகரித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதன் இணைந்த அமைப்பான தேசிய ஐக்கிய முன்னணியும் இனங்களுக்கிடையிலான ஐக்கிகயத்தை பிரதிபலிப்பதற்காக 'ஐக்கிய தினம்' UNITY DAY 1999 பெப்ரவரி 11ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டது.

எனவே, ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 11இனை இன ஐக்கியத்திற்காக நினைவுபடுத்திக் கொள்வோம்.

No comments

Powered by Blogger.