Header Ads



"முஸ்லிம் தலைவர்கள், அல்லாஹ்வுக்காக ஒன்றுபட வேண்டும்"


M.JAWFER JP-

உலகில் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்கள்  ஜாதி, மதம், குலம், நிறம் பாராமல் ஒற்றுபடுவதன் மூலம் ஒடுக்கும் பெரும்பான்மையை வெற்றிகொள்கிறார்கள் இதன் உற்சகட்டம்தான்  நெல்சன் மண்டேலாவை உலகம் அண்ணார்ந்து பார்க்க வைத்தது.ஒடுக்கப்படும் சிறுபான்மை ஒற்றுமையின்றி  சிதறிக்கிடப்பதுதான் ஒடுக்குபவர்களுக்கு சிறந்த பலமாக அமைந்துவிடுகிறது. இவ்வாறானதொரு கட்டத்தை இப்போதைய முஸ்லிம்கள் சந்தித்துள்ளார்கள்.கடந்தகால கசப்பான அனுபவங்களை தற்போதைய சில சுகபோகங்கள் நம் தலைவர்களை மறைத்துக்கொண்டு இருப்பதன் காராணமாக ஓன்று பட மனம் மறுக்கிறது. 

கடந்தகாலங்களைவிடவும் இப்போதுள்ள நிலையில் முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுபட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளதை அவர்களுக்கு பொதுமக்கள் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை.முஸ்லீம்களுக்கன்று ஒரு அரசியல் கட்சி தேவைப்பட்டதன நோக்கம் இந்த உலகில் கலிமா சொன்ன முஸ்லிகளாக அல்லாஹ் ஒருவனை அச்சமின்றி சுதந்திரமாக அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் அடிமை இல்லாமல் வணங்க வழிவகுக்க வேண்டும் இதனை  ஏற்ப்படுத்தும் மூலகாரணத்துகுரியவர்கள் இஹ்லாசான முறையில் இதை வழிநடத்தி இதன் கூலியான மறுமையில் அல்லாஹ்வால் கிடைக்கக்கூடிய சொர்க்கமே போதுமென்ற மனப்பான்மையாகத்தான் முழக்கம் போட்டோம்.

மறுமயில் அல்லாஹ்வின் கூலிதான் நமக்கு கூலி என்று கூறும் நாம் ஏன் சமூதயத்துக்காக அல்லாஹ்வுக்காக பொறுமையோடு விட்டுக்கொடுத்து,(உங்களுக்கிடையில் பிணக்கு ஏற்ப்பட்டால் அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதரின் பக்கமும் திரும்பிவிடுங்கள்) என்று அல்லாஹ் நமக்கு கட்டளை இடுகிறானே இது வெறும் உலமாக்களுக்கு மட்டும் உள்ளது போன்றும், அரசியல்வாதிகளுக்கு விதிவிலக்காகவா உள்ளது முஸ்லிமான எந்த தரத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் அனைவருக்கும் அல்லாஹ் விடும் கட்டளைதான் இது. அப்போ ஏன் அரசியல்வாதிகளுக்கு மட்டும் இதை பின்பற்றி என்ன விலை கொடுத்தாவது மேலான சொர்க்கத்தை அடைவோம் இந்த உலக சுகம் அற்பமாது என்ற உள்ளச்சம் இல்லாமல் போனதன் காரணம் உலக ஆசை மறுமை வாழ்வை முந்திவிட்டது என்பதுதான் அர்த்தம்.

 நான் சரியாக செய்கிறேன் என்று ஒவ்வொருவரும் கூறினால் அப்போ யார் பிழை செய்தது மொத்தத்தில் எல்லோரும் பிழையாகத்தான் இருக்கிறோம் என்று அர்த்தம்.உண்மையாக சொல்லப்போனால் இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளித்தில் இன்னும் தக்வா இறையச்சம் வரவில்லை என்பது மட்டும் உண்மை.புதிய அரசியல் யாப்பு தயாரிக்கும் பணியில் நமக்கு முன்னுள்ள சிறுபான்மை தலைவர்கள் ஒரு கொடியின் கீழ் ஒற்றுமைப்பட்டு தன் சமூதாயத்தின் உரிமையை வென்றெடுக்க வேண்டும் என்ற பேராவலில் இருக்கும்போது அதைவிடவும் நம்முடை கலாச்சாரத்தில் வணக்க வழிபாடுகளில் உணவுப்பழக்கங்களில்,பெண்களின் இஸ்லாமிய பண்பாடு கலாச்சாம்,போன்ற இன்னும் பல நமக்கன்று தனிப்பட்ட விதிமுறைகள் யாப்பில் உள்ளடக்கப்படவேண்டிய அவசியம் இருக்கும்போது ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருவது வேடிக்கையாக இருக்கிறது.

 கடந்த 2009  யுத்தமுடிவுக்கு முன் லண்டனில் BBC வானோலி சேவை பேரியல் அஷ்ரப் அவர்களுக்கும் அன்டன் பாலசிங்கத்துக்கும் ஒரு சந்திப்பை ஏற்ப்படுத்தி பேட்டி கண்டார்கள்.அதில் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த பேரியல் அஷ்ரப்பிடம் தமிழில் பேசுங்கள் நாம் இருவரும் தமிழர்கள்தானே தமிழ் மக்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று அன்டன் பாலசிங்கம் கூறினார்கள், அதற்க்கு பதிலளித்த பேரியல் அஷ்ரப் தமிழில் பேசுவதாக இருந்தால் நாம் நம் நாட்டில் பேசியிருக்கலாம் அனால், நாம் இங்கு பேச வந்தது உலகம் நம்முடைய பிரச்சினை என்னவென்று அறிந்துகொள்ள வேண்டும் அதனால் ஆங்கிலத்தில் பேசுவோம் என்றார்கள். 

இதில் முக்கியமாதொரு கேள்வி BBCயின் நிருபர் பேரியல் அஷ்ரப்பிடம் கேட்கிறார் முஸ்லிம் கட்சிகள் பலவாறாக பிரிந்து கிடக்கிறது இனப்பிரச்சினை தீர்வு சம்மந்தமாக சிருபான்மைக்கட்சிகளை அழைக்கும்போது முஸ்லிம்கள் சார்பாக எந்த கட்சி கலந்து கொள்வார்கள் அதிலும் பிரச்சினை வருமல்லவா? அதற்க்கு பதிலளித்த பேரியல் அஷ்ரப் நாங்கள் பல கட்சிகளாக பிரிந்து கிடந்தாலும் மத ரீதியிலும், வணக்க ரீதியிலும், கடவுள் நம்பிக்கை ரீதியிலும்,நாங்கள்  ஒற்றுபட்டவர்களே,அதனால் நாங்கள் ஏனைய மதக்கட்சிக்காரர்கள்போன்று மாற்றுக்கச்சிகாரர்களை கொலை செய்யவோ, அச்சுறுத்தவோ,காயப்படுத்தவோ துணியமாட்டோம் அந்த பண்பு எங்களிடம் வராது.

அதேவேளை சமூகம் என்று ஓன்று  வந்துவிட்டால் பல கட்சிகளாக பிரிந்திருக்கும் நாங்கள் ஓன்று பட்டுவிடுவோம் என்றுசொல்லி தனது புத்தி சாதுரியத்தால்  நிருபரின் வாயை அடைத்துவிட்டார்கள்
இதிலிருந்து பல படிப்பினைகளை நாம் விளங்கிகொள்ளவேண்டும் இவர் சமுதாயத்துக்கு சேவை செய்தாலும்  செய்யாவிட்டாலும் இவரின் தகுதிவாய்ந்த கருத்தை பாராட்டவேண்டும்.
Iதற்போதைய நிலையில் நம் அரசியல்வாதிகள் இப்போது அரசாங்கம் மேற்கொள்ளும் புதிய அரசியல் யாப்பு சீர் திருத்தத்துக்கு ஒன்றிணைந்த குழுவாக நமது பக்கத்து நியாயங்களையும் தேவைகளையும் முன்வைத்து பெற்றுக்கொள்ள தவறினால் பாரதூரமானதொரு பின்விளைவை நம் எதிர்கால சந்ததிகள் சந்திக்க வேண்டிஏற்ப்படும்.

கடந்த 1956 ஆம் ஆண்டு நிறைவேற்றிய யாப்பில் சிறுபான்மைக்கு நியாயமான சுதந்திரம் வழங்கப்படவில்லை அதன் பின் ஜேஆர் ஜெயவர்தனவால் அதன் பின் வந்த அரசியல்வாதிகளால் 1977-2016 Wவரை சிறுபான்மைக்கு நியாயம் கிடைக்கவில்லை,என்றாலும் தகவல் தொழில் நுட்பம் குறைவான காரணங்களால் அக்காலப்பகுதியில்  பாதிப்புகள்  குறைவாக இருந்தாலும் 1990 க்கு பிந்திய காலப்பகுதியில் அதிகமான பாதிப்புகளை நம் சமூதாயம் அடைந்துள்ளது. இதில் மாறிமாறி வந்த அரசாங்கங்களையும்  குறை கூறமுடியாது.நம்மை போன்று பெரும்பான்மை இன மக்களும் தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் உடனுக்குடன் நாட்டில் நடக்கும் நடக்க இருக்கும் விடயங்களை அறிந்து நியாயமாகவோ அல்லது துவேசமாகவோ எதிர்ப்பை காட்டும் போது பெரும்பான்மையின் வாக்கு வங்கியை நம்பி நிற்கும் அரசாங்கம் தலை சாய்க்க வேண்டிய நிர்க்கதிக்கு தள்ளப்படுகிறது. 

ஆகவே நம் தரப்பில் உள்ள நியாயங்களை மிக மதி நுட்பமாக பெரும்பான்மை இனத்தவர்கள் வெறுக்காத முறையிலும் அரசால் ஏற்றுக்கொள்ளகூடிய  முறையிலும் மெல்லினமாக காய் நகர்த்த வேண்டியுள்ளது இதற்க்கு நம் அரசியல்வாதிகள்,சட்டவல்லுனர்கள்,பேராசிரியர்கள்,சமூக ஆர்வமுள்ள புத்தி ஜீவிகள் அனைவரும் கட்சி பேதம்,உயர்வு தாழ்வு அனைத்தையும் அல்லாஹ்வுக்காக மறந்து ஒன்றுபட வேண்டும்.

No comments

Powered by Blogger.