Header Ads



முஸ்லிம்களின் மீள்­கு­டி­யேற்ற தர­வு­கள் இல்லை. உடனடியாக பிர­தேச செய­ல­கங்­களில் பதிய கோரிக்கை

 -SNM.Suhail-

வடக்கு மாகாண முஸ்­லிம்கள் மீள்­கு­டி­யேற்­றத்­திற்­காக தங்­களை பிர­தேச செய­ல­கங்­களில் பதிந்­து­கொள்ள வேண்டும் என மீள்­கு­டி­யேற்றம், சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு மற்றும் இந்து மத­வி­வ­கார  அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார்.

வடக்கு மாகாண மீள்­கு­டி­யேற்றம் குறித்து நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி மீள்­கு­டி­யேற்றம், சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு மற்றும் இந்து மத­வி­வ­கார  அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­தனை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யது. கொழும்பு 03 இல் உள்ள அமைச்சில் நேற்று வியா­ழக்­கி­ழமை இக் கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது. இதன் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

வடக்கு மாகாண சபை உறுப்­பினர் அஸ்மின் அய்யூப், நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் பொதுச் செய­லாளர் அஷ் ஷெய்க் நஜா முஹம்மத் மற்றும் யாழ்ப்­பாணம், வவு­னியா, மன்னார், முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி ஆகிய மாவட்­டங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­படுத்தும் சிவில் சமூக பிர­தி­நி­திகள் மற்றும் மீள்­கு­டி­யேற்றம், சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு மற்றும் இந்து மத­வி­வ­கார  அமைச்சின் செய­லா­ளரும் இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்­டனர்.

முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் குறித்து கடந்த டிசம்பர் மாதம் ஜனா­தி­பதி தலை­மையில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் போது முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­காக மீள்­கு­டி­யேற்ற அமைச்­சரின் தலை­மையில் விஷேட குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. இக்­கு­ழுவின் மூலம் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை சாத்­தி­யப்­ப­டுத்­து­வ­தற்­கான தர­வு­களை திரட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.  எனினும் இவ்­வி­டயம் குறித்தே நேற்­றைய தினம் மீள்­கு­டி­யேற்ற அமைச்சில் கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது.

இதன்­போது மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் மேலும் தெரி­விக்­கையில், 1990 ஆம் ஆண்டு வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை முன்­னெ­டுப்­ப­தற்­காக நாம் பல்­வே­று­பட்ட முயற்­சி­களை மேற்­கொண்­டு­ வ­ரு­கின்றோம். இன, மத, பேதங்­க­ளுக்கு அப்பால் மனித நேயத்தின் அடிப்­ப­டையில் இவ்­வி­டயம் கையா­ளப்­ப­ட ­வேண்­டிய தேவை இருக்­கின்­றது.

முஸ்லிம் மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு தேவை­யான தர­வு­களும் பதி­வு­களும் எம்­மிடம் இல்லை. இவற்றை பிர­தேச செய­ல­கங்கள் ஊடாக திரட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

அதற்­கான சுற்­று­நி­ரு­பங்கள் அமைச்­சினால் வடக்­கி­லுள்ள அனைத்து பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. இதனை அடிப்­ப­டை­யா­க­கொண்டு நாம் தர­வு­களை சேக­ரிக்க திட்­ட­மிட்­டுள்ளோம் என்றார்.

இதன்­போது வட­மா­காண சபை உறுப்­பினர் அஸ்மின் இவ்­வா­றான பதி­வுகளை முன்­னெ­டுப்­பதில் சிக்­கல்கள் இருக்­கின்­றன. குறிப்­பாக மக்கள் விழிப்­பூட்­டப்­ப­ட­வில்லை என்றார்.

இதற்கு பதி­ல­ளித்த மீள்­கு­டி­யேற்ற அமைச்சர், நாம் அனைத்து பொறுப்­பு­க­ளையும் பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு ஒப்­ப­டைத்­துள்ளோம். அவர்கள் தமது கட­மையை பொறுப்­புடன் மேற்­கொள்­வார்கள் என எதிர்­பார்க்­கின்றோம். இவ்­வி­ட­யத்தில் குறை­பா­டு­களோ தொடர்­பாடல் சிக்­கல்­களே இருப்பின் நீங்கள் இவ்­வி­ட­யத்தில் பிர­தேச செய­ல­கங்­க­ளுடன் இணைந்து பணி­யாற்­றுங்கள்.

மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை மேற்­கொள்­வ­தற்கு ஒத்­து­ழைப்­புகள் தேவைப்­ப­டு­கின்­றன. அதற்கு புதிய குழுக்­களை அமைத்து காலத்தை வீணடிப்­பதை என்னால் அனு­ம­திக்க முடி­யாது.

இவ்­வி­ட­யத்தை புதிய புதிய திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்தி இன்னும் 5 அல்­லது 10 வரு­டங்­களை வீண­டிப்­ப­தற்கு நான் விரும்­ப­வில்லை. நாம் முன்­னெ­டுக்கும் திட்­டத்தில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை எழுத்து மூலம் சுட்­டிக்­காட்டி எம்­மோடு இணைந்து பணி­யாற்­றுங்கள். மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தில் நாம் மிகவும் அக்­க­றை­யு­ட­னேயே இருக்­கிறோம். இத்­திட்­டங்­க­ளுக்கு இடை­யூ­றுகள் விளைவிப்பவர்கள் இருக்கின்றனர்.

தொடர்ச்சியாக வரும் திட்டங்களுக்கு தடைகளை ஏற்படுத்துவதன் மூலம் முஸ்லிம்களின் முன்னேற்றமே தடைப்படுகின்றது என்றும் மீள்குடியேற்ற அமைச்சர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதேவேளை வடக்கு முஸ்லிம்களின் பதிவுகள் குறித்து பிரதேச செயலகம் தோறும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செயற்பட வேண்டும் என்றும் இவ்விடயத்திற்கு பூரண ஒத்துப்பை எதிர்பார்ப்பதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. எத்தனை தடவைகள்தான் மீள்குடியேற்ற தரவுகள் சேகரிப்பட்டாலும் தோன்றிமறையும் தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம் தரவுகள் இல்லை.... தரவுகள் இல்லையென்றே காலத்தை வீணடிப்பது கைவந்த கலையாப்போச்சே... பாவம் அப்பாவி மக்கள் தினமும் கூலித்தொழிலை விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் போட்டோ கோப்பி எடுத்தே கிடைக்கும் பணமும் வீணாப்போச்சு.
    மக்களின் வரிப்பணத்தில் சொகுசாக ஓசியாக வாழும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களை தரவுகள் சேகரிக்கும் விடயத்தில் கடுகடுப்போடு நடந்துகொள்கிறார்கள்.கடினமான நடைமுறைகள் பின்பற்றப் படுகின்றன. ஷோப்பிங் பேங்கோடு 24 மணித்தியால காலக்கெடுவில் பாசிசப்புலிப்பினாமிகளால் பலவந்தமாக விரட்டப்பட்டவர்களிடம்..
    1- பிறப்புச் சான்றிதல் இருக்க வாய்ப்புண்டா?
    2- இறப்புச் சான்றிதல் இருக்க வாய்ப்புண்டா?
    3- காணி உறுதிப்பத்திரம் இருக்குமா?
    3- தாய் தகப்பனின் பிறப்பு இறப்பு சான்றிதல்கள் இருக்குமா?
    4- விவாகப் பதிவு இருக்குமா?
    5- அடையாள அட்டை இருக்குமா?

    இது பாடசாலை செல்லும் சிறுவனுக்கும் கூட புரியும். ஆனால் தமிழ் தலைமைகளுக்கு புரியவைக்க முடியாது. தரவுகள் சேகரிக்கும் போது அரச உத்தியோகத்தர்கள் வேண்டுமென்றே கடினமான நடைமுறைகளை கையால்கிரார்கள்.முஸ்லிம்களை நிராகரிக்க வேண்டுமென்றே சில த..றுதலைகள் கங்கணக் கட்டிக்கொன்றே செயற்படுகிறார்கள்.
    மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்து பாம்பும் குத்திய கதையாப் போச்சு... வடமாகாண முஸ்லிம்களின் கதை.......
    வாக்குப் பிச்சை கேட்டு வீடு தேடிச்சென்றவர்கள்.... ஏன் அவர்களின் வீடு சென்று தரவுகள் சேகரிக்க முடியாமல் போனது?

    ReplyDelete

Powered by Blogger.