Header Ads



பௌத்த பிக்குகளின் அடாவடித்தனங்களை, கட்டுப்படுத்த வருகிறது புதிய சட்டம்

இலங்கையில் பௌத்த பிக்குள் ஜோதிட எதிர்வு கூறல்களை வெளியிடத் தடை விதிக்கப்பட உள்ளது.

பௌத்த பிக்குகள் ஜோதிட எதிர்வு கூறல்களை வெளியிடவும், அது தொடர்பிலான விளம்பரங்களை செய்யவும் தடை விதிக்கும் வகையிலான சட்டங்களை விரைவில் அறிமுகம் செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

வர்த்தக, வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்ளல், வாகனம் செலுத்துதல் ஆகியன உத்தேச புதிய சட்டத்தில் தடை செய்யப்படவுள்ளது.

புதிய சட்டத்தின் அடிப்படையில் சமூக சேவைகளில் ஈடுபடுதல், சமய மற்றும் கல்வி நடவடிக்கைகளில் மட்டுமே பௌத்த பிக்குகள் ஈடுபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரங்க இடங்களில் பௌத்த பிக்கு ஒருவருக்கு உசிதமாகா வகையில் நடந்து கொள்ளவும் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தவறுகளை இழைக்கும் பௌத்த பிக்குகள், பிக்குகளுக்கான நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றம் இழைக்கும் பௌத்த பிக்குகள், பிக்கு அந்தஸ்தை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

பௌத்த பிக்குகளின் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்றுக் கொள்ளாத பௌத்த பிக்குகளுக்கு 50,000 ரூபா அபராதமும், ஓராண்டு கால சிறைத்தண்டனையும் விதிக்கப்படக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

பௌத்த பிக்குகளுக்கான புதிய சட்டம் உருவாக்கும் உத்தேச யோசனை இன்று -12- நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் சில பௌத்த பிக்குகள் வானொலி தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்து ஜோதிட ஆலோசனைகள் மற்றும் வசிய மாந்திரீகங்களை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சேவைகளை வழங்க பெருந்தொகை பணம் அறவீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

6 comments:

  1. எங்கட லெப்பைமார்களின் நிலையென்ன? சாமிகளைப்போல் நம்மத்தியிலும் இந்தமாதிரி shirk செய்து பிழைக்கும் கூட்டமொன்று இருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் மறந்துவிட்டதோ அல்லது கட்டுரையாசியர் மறந்து விட்டாரோ?

    ReplyDelete
    Replies
    1. சரி சொன்னீங்க அது நம்ம உலமா சப விடாது பிஸ்ணஸ்ல கை வைக்கிரதா சியாரங்கலுக்கு ஒய்ல் பத்தி சந்தனம் பூ பூஜை பொருட்கள் யார் சப்லை

      Delete
  2. Lebba maarkum podunga pls.

    ReplyDelete
  3. கூடிய விரைவில் லெப்பைகளின் பால் பார்த்தல் ராசி பார்த்து இசும் என்னும் தாயத்து கட்டுவது தண்ணீர் ஓதி கொடுப்பது பிள்ளைகளுக்கு ஊதிய பார்ப்பது போன்ற லெப்பைகளின் அட்டகாசம் நிறுத்தப்படும்

    ReplyDelete
  4. இச்சட்டத்தில் அவதானிக்க வேண்டியவைகள்..
    1. பெளத்தத்துக்கு முன்னுரிமை வழங்கிய 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தின் ஓர் நீட்சி. நமக்கு முள்ளைக்காட்டி அவர்களுக்கு பலாப்பழம் வழங்கப்படுகிறது. உரிக்கும் வரைக்கும்தான் அவர்களுக்கு கஷ்டமும் நமக்கு பாதுகாப்பும்.

    2. நாளை பெளத்தம் தவிர்ந்த ஏனைய மதங்களுக்கும் அரசு சட்டமியற்ற முற்படும். இது அரசியலமைப்பில் வழங்கப்படுள்ள மத சுதந்திரம் மற்றும் தனிநபர் சுத்தந்திரத்தை பாதிக்கும். மேலும் ஒவ்வோர் மதத்திலும் ஏராளம் பிரிவுகள். இதில் அரசுடன் சார்ந்துள்ள பிரிவினரின் வழிநடத்தலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப சட்டங்கள் கொண்டுவரப்படும்.

    3. மதம் தொடர்பான சட்டங்கள் சட்டங்கள் அம்மதம் தொடர்பான உயர்பீடங்களினால் உருவாக்கப்படவேண்டும். இவ்விதம் உருவாக்கப்படும் சட்டங்கள் நாட்டிலுள்ள ஏனைய மதங்களின் சுதந்திரத்தை பறிக்காமலும் நாட்டின் சட்டம், ஒழுங்கை பாதிக்காமலும் இருப்பதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

    4. முஸ்லிம் குவாசி நீதிமன்றம், இணக்க சபைகள்(conciliation board) வ்மூலம் வழங்கப்படு தீர்ப்புக்களை மீறுவோர்க்கு நேரடியாக தண்டனை வழங்க முடியாது ஏனெனில் அவற்றுக்கு நீதிமன்றின் அந்தஸ்து வழங்கப்படவில்லை. அவ்விதம் மீறுவோர்க்கு நீதவான்/மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு அவற்றாலேயே தண்டனை வழங்கப்படலாம். ஆனால் இங்கு இச்சட்டத்தின் மூலம் பிக்குகள் நீதிமன்றினால் தண்டனை வழங்கப்பட முடியும். எனவே பிக்குகள் நீதிமன்றத்திற்கு நீதிமன்றத்தின் அந்தஸ்து வழங்கப்பட்டு இலங்கை நீதிமன்ற பதவனிக்குள் புகுத்தப்படுகின்றது. அவற்றின் நியாயாதிக்கம் எதிர்காலங்களில் விரிவடையும். (ஞானசார தேரரின் தனியான பிக்குகள் நீதிமன்றம் வேண்டும் கோரிக்கை தோழர்களுக்கு ஞாபகமிருக்கும்)

    5.பெளத்த பிக்குகளின் வழக்குகள் இங்கு விசாரிக்கப்படும். அதேநேரம் பெளத்த பிக்குகள் தொடர்புபடும் பட்சத்தில் வழக்காளி அல்லது எதிராளி சாதாரண பெளத்த குடிமக்களாகவோ அல்லது ஏனைய மதங்களை சேர்ந்த்தவர்களாகவோ இருப்பினும் இந்நீதிமன்றிலேயே விசாரிக்கப்படுவர்.

    எனவே ஈற்றில் இச்சட்டம் பெளத்த பிக்குகளின் அடாவடித்தனங்களை கட்டுப்படுத்துவது எப்படிப்போயினும் கட்டவிழ்த்து விடும். கண்டிப்பாக நம்மை மாடு குத்துவது உறுதி.
    கோயில் மணியடித்தாலும், மசூதி பாங்கொலித்தாலும், சர்ச் மணியடித்தாலும் பெளத்தம் நசுக்கப்ப்டுகிறது என்று வழக்கில் போய் நிற்கும்.
    பிக்குகளை கட்டுப்படுத்தும் நெருப்பென வெளிவரும் இச்சட்டம் விகரைகளுக்கு விளக்காகவும் இன மத பேதமின்றி நம் வீடுகளுக்கு அழிவாகவும் தெரிகிறது.

    ReplyDelete
  5. true really grate your comment....இருள்சூழ்ந்த தாயின் கருவரையில் உலகமே தெரியாமல் வாழ்ந்த ஒருவன் அந்த உலகை பார்த்ததும் பல குரைகலையே சுட்டிக்காட்டி பேசிக்கொன்டிருந்தானாம் அதுவரைக்கும் தாம் எங்கு எப்படி உயிர்வாழ்ந்தோம் எனக்கு உயிர் உனவழித்தது யார் எனும் உன்மையே மறந்துவிட்டதோ அல்லது அங்கு அல்லாஹ் என்னிடம் சொன்னதைதான் நான் இப்போ பிழையென்ரு சொல்கின்ரேன் எனும் உன்மையோ தெரியாது.......யா அல்லாஹ் நான் தெரிந்தோ தெரியாமலோ எனது உள்ளத்தினாலும் உடலினாலும் நாவினாலும் செய்தபாவங்கள் அனைத்தினையும் மன்னிப்பாயாக.....ஆமீன்

    ReplyDelete

Powered by Blogger.