Header Ads



ஹிரா கல்வி மறுமலர்ச்சி நிறுவனத்தின் 4 வது கல்விச் சேவை விழா

-Dr. Ramzy-

"இன்ஷா அல்லாஹ். எதிர்வரும் 20.12.2015 இல் 'ஹிரா கல்வி மறுமலர்ச்சி நிறுவனம்" தனது நான்காவது கல்விச் சேவை விழாவை கொண்டாட உள்ளது.

ஹிரா தனது ஐந்து வருட  வரலாற்றில் பல மைல்களை கடந்துள்ளது. முன்பள்ளி சிறார்கள் தொடக்கம் பல்கலை  மாணவர்கள் வரை, ஹிராவின் சக்திக்கு அப்பாலும் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், ஹிப்ழ், தஜ்வீத் மத்ரஸா நடாத்துதல் மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை பாராட்டுவதும் அதன்மூலம் மற்றைய சிரார்களை ஊக்குவிப்பது , முன்பள்ளி, தரம் ஐந்து ஆசிரியர்களை கௌரவிப்பது போன்ற பல சேவைகளை இடர்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து செய்து வருகிறது.

மேலும் ஜனவரி முதல் யாழ் ஒஸ்மானியா, கதீஜா மாணவர்களுக்கும் ஹிரா தன் சேவையை,  பலரது வேண்டுகோளிற்கு இணங்க, விஸ்தரிக்க எண்ணியுள்ளது.

எமது சமூக முன்னேற்றத்தில் நாட்டமும் நமபிக்கையும் உள்ள நல்ல உள்ளங்கள் எமக்கு உறுதுணையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கும் ஹிரா தன் விழாவிற்கு அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

குறிப்பு.
அன்றைய தினம் யாழ் ஒஸ்மானியா ஆசிரியை செல்வி நஸ்பியா அஜீத் இன் புத்தக வெளியீட்டு வைபவமும் நடைபெறும்.”



No comments

Powered by Blogger.