திலக் மாரப்பனவுக்கு எதிராக, UNP க்குள் போர்க்கொடி, உரிய நடவடிக்கை எடுக்க ரணில் உறுதி
சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன பதவி விலக வேண்டுமென ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் சில முக்கியஸ்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்திலும் இந்த விடயம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.சர்ச்சைக்கரிய அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களே இதற்கான காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
சில அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக இணைந்து இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அமைச்சர்களான, காமினி ஜயவிக்ரம பெரேரா, ராஜித சேனாரட்ன, பிரதி அமைச்சர் அஜித் பெரேரா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.

No any adjustment in his matter. Pls remove him from the cabinet
ReplyDeleteஊழல் மோசடிக்கூட்டத்தை சேர்க்ககூடாதென சொல்லிய நல்லாட்சி இப்படிசிலரை சேர்த்துக்கொன்டது அவர்கலுடைய தவரே தவிர சேர்ந்துகொன்டு ஊழல் செய்பவர்கலின் தவரல்ல
ReplyDelete