Header Ads



நாட்டின் 60 வீதமான பௌத்த பிக்குகளுக்கு நீரிழிவு நோய் - தயாசிறி ஜயசேகர

நாட்டின் 60 வீதமான பௌத்த பிக்குகளுக்கு நீரிழிவு நோய் காணப்படுகின்றது என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
உடவலவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர்,

பௌத்த பிக்குகளில் 60 வீதமானவர்கள் நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றாத நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றா நோய்கள் அதிகரிப்பதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

மேலும், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் இவ்வாறான நோய்களை தடுக்க முடியும். அனைவருக்கும் விளையாட்டு என்றத் திட்டம் விகாரைகளுக்கும் வியாபிக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

1 comment:

  1. This is becourse they used eat biriyani, watlaappam like us

    ReplyDelete

Powered by Blogger.