Header Ads



திருமண வீட்டில் சந்தித்த மைத்திரி + பசில், மைத்திரிக்கு நோபல் பரிசு வழங்க சர்வதேச ஆலோசனை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அண்மையில் சந்தித்து கொண்டுள்ளனர். கடந்த ஒரு வருடங்களின் பின்னரே பசில் ராஜபக்சவும் , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சந்தித்துள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக நியமிப்பதற்கு முன்னர் அலரி மாளிகையில் அப்பம் சாப்பிடும் போதே இதற்கு முன்னர் இருவரும் இறுதியாக சந்தித்துள்ளனர்.

அண்மையில் சந்தித்துக் கொண்ட சந்தர்ப்பத்தில் இருவரும் சிறிது நேரம் உரையாடிய பின்னரே அவ்விடத்தை விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2

மைத்திரிபால சிறிசேனவுக்கு நோபல் பரிசு வழங்குவது தொடர்பாக சர்வதேச ரீதியில் ஆலோசனை இடம்பெற்று வருகின்றதென அமைச்சர் ஜோன் அமரதுங்க தகவல் வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணைந்து கருத்தொருமைப்பட்டு தேசிய அரசு அமைக்கப்பட்டு நாட்டின் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச ரீதியில் எமக்கு இதுவரை காலமும் இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்டுள்ள ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை அடுத்த வருடம் மீண்டும் கிடைக்கவுள்ளது. இவ்வாறாக தடைகள் நீக்கப்பட்டுள்ளமைக்கு நல்லாட்சி தொடர்பில் உலகம் எம்மை புகழ்ந்து பாராட்டுகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நோபல் பரிசு வழங்குவது தொடர்பாக சர்வதேச ரீதியில் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன. 

நாமும், எமது நாட்டு மக்களும் பெருமைப்படக்கூடிய விடயமாகும் ன்றார்.

No comments

Powered by Blogger.