Header Ads



"குடும்பவியல் வாழ்வில், பெண்களே கண்கள்"

Zuhair Ali (MBA,PGD,EDM,Ghafoori)

குடும்ப சுமை ஒருபோதும் ஒரு தனி மனிதன் மீது சுமத்தப் படக்கூடாது ஒரு தனி மனிதன் இன்னொரு மனிதனின் உதவியை தேடி நிற்கின்றான் குடும்ப சுமை என்பது ஒரு தாய்க்கு மாத்திரம் உண்டானதல்ல ஆண்கள் பெண்களை நிா்வகிக்கின்றவா்கள் என்பது அவா்களை கட்டுப்படுத்தல் மாத்திரமல்ல !

பொதுவாக பெண்களுக்கு போாில் கலந்து கொள்ளல்,கூட்டு தொழுகையில் கலந்து கொள்ளல் ,ஜனாஸா தொழகையில் கலந்து கொள்ளல் போன்ற இன்னோறன்ன பொது வணக்கங்களில் நன்மை பெற்றுக் கொள்ள சந்தா்ப்பம் கிடைப்பதில்லை.

முஹம்மது ஸல் அவா்களிடம் இது பற்றி கேட்டபோது இதற்கான ஈடு அவா்கள் வீட்டில் செய்யும் பணிவிடை ,சொத்து ,மானம் போன்றவற்றை பாதுகாத்தல் என்பன சமமாக்கின்றன என்றாா்கள்.

இன்றைய கால கட்டம் சமஉாிமை என்ற போில் பல மன நோய்களை உண்டாக்கி வாக்கு வாதம் ,மாியாதை குறைவாக பேசுதல் ,ஆண் செய்வதற்கு ஒப்பாக செய்ய வேண்டும் என்ற ஆணவம் என் பறந்திருக்கின்றன  இஸ்லாமிய குடும்பவியல் வரலாறு நெடுகிலும் பெண்களின் மகத்தான பங்களிப்பு இன்றியமையதவை.

பெண்கள் வீட்டின் கண்கள் அவா்கள் வீட்டு கணக்கியல் ,வருமான ,வீட்டு நிருவாக, பிள்ளைகள் பராமாிப்பு, சமையல் என பல்துறைகளில் பாரம்பாியமானவா்கள்  ஒரு ஆண் இருவது வயதை அடைந்ததிலிருந்து தங்கை கல்யாணம் ,பெற்றோா் பராமரிப்பு ,திருமண நெருக்கடி ,மனைவி, பிள்ளைகள் என தனது வாழ் நாளில் மூன்றில் இரண்டு பகுதியை குடும்ப சுமைகளை சுமந்து உடல் ,உள ரீதியிலான மன உலைச்சல் கவலை துன்பங்களை அனுபவிக்கின்றான் 

சமுதாய எழுச்சியில் பெண்களின் வகிக்கும் பங்கு அளப்பரியது. பெண்களை புறந்தள்ளிய எந்தவொரு சமூகமும் தேசிய சங்கமிப்பை ஏற்படுத்திக் கொண்டதாக சரித்திரமே இல்லை. இதனை உலக வரலாறுகள் நிரூபித்துள்ளன. எனினும் தந்தை வழி சமூக அமைப்பு என்று கூறப்படும் கருத்தியலின் அடிப்படையில் ஆணாதிக்க தன்மை மேலோங்கியுள்ள நிலையில் பெண்களின் கருத்துக்கள் எந்தளவுக்கு உள்வாங்கப்படுகின்றன என்பதும் சமூக மட்டத்தில் அவர்களது தேவைகள் எந்தளவுக்கு பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

நெருக்கடி,பொருளாதார வளர்ச்சி,நவ நாகரிகம்,தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய  உலகம் மனிதனை கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக வளர்க்க வேண்டும் , கலாநிதிப் பட்டம் பெற வேண்டும்mதொழில் சார் கற்கை நெறியினை படிக்க வேண்டும் என்ற மன ரீதியான உளைச்சல் நெருக்கடிக்குள் ஒருவன் தள்ளப் படுகின்றான் இதில் கணவனும் மனைவியும் பனி புரிந்தால்தான் வாழ்க்கை  சக்கரத்தை சுழற்ற முடியும் எனறகிவிட்டது

ஆக பெண்கள் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் ஏன் எனில் அரு ஆண் சமூக அந்தஸ்து பெற வேண்டும்,தலை நிமிர்ந்து வாழ வேண்டும்,என்ற சமூகப் பிராணியாக பறக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இருப்பினும் பொருளாதார மற்றும் அந்தஸ்து போன்ற தேவைகளை போதுமாக்கி அன்றாட சராசரி வாழ்வை கடைபிடிக்க வேண்டும்,ஆண்களுக்கான மன அழுத்தங்களை கொடுக்கதிருக்க பழகிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் அமைதி பெற உங்களில் இருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30 : 21)

ஆக பெண்கள் குடும்பயில் சாா்ந்த எல்லா சுமையிலும் ஒரு பங்குதாரா் என்பது மட்டுமல்லாமல் ஆண்களுக்கு ஒரு வீட்டு நிருவாகியாக இருந்தால் நிச்சயம் ஒரு குடும்பம் மன்னராட்சியாகும்

இவை காலப் போக்கில் மன ரீதியான தாக்கம் அழுத்தம் ஏற்பட்டு குடும்பவியல் கட்டிடத்தை உடைத்து விடும் மாத்திரமன்றி இன்று விவாகரத்து ஏற்பட இதுவும் ஒரு முக்கிய சமூகக் காரணியாக அமைந்து விடும் என்பதும் தெளிவு,ஆக நாம் இஸ்லாம் எங்கே இருக்கின்றது என்பதை தேடித் போகாமல் இஸ்லாமிய சூழலை நம் வீட்டிலிருந்தே உருவாக்கப்படல் வேண்டும் .

நிச்சயமாக பெண் விழா எலும்பிலிருந்து படைக்கப்பட்டாள்.அவள் (உம்) பாதையில் முற்றிலும் நேர்படமாட்டாள். அவளின் கோணல் உள்ள நிலையில் சுகம் பெறுவதாக இருந்தால் சுகம் பெற்றுக்கொள்ளலாம்.நீர் அவளை நேர் படுத்த முயன்றால் அவளை முறித்து விடுவீர்.அவளை முறித்து விடுவதென்பது தலாக் (மணமுறிவு) ஆகும்.அதுவரை நீர் செல்ல வேண்டாம்.என நபி (ஸல்) அவர்கள் ௬றினார்கள். அபூஹுரைரா (ரலி) (முஸ்லிம்)

12 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. Naoodhi billah...guys this jesley is not a muslim .its a fake coming under muslim name.jaffna muslim please remove this idiot comment and search about the account.

    ReplyDelete
  3. ஜஸ்லியா! பேனா இருக்கிறது என்பதற்காக சிறு பிள்ளைத் தனமாகக் கருத்துக்களை வரையக் கூடாது. உங்கள் கருத்துக்களைப் பார்க்கும்போது இறைவன் மீது பலியைச் சுமத்துவதைப்போன்றுள்ளது. நீங்கள் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தால் முதலில் இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ள உரிமைகளைப் படியுங்கள். ஈமானின் வட்டத்திலிருந்து உங்களை வெளியே தள்ளும் வார்த்தைகளை விட்டும் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். அல்லாஹ்விடம் உடனடியாக மன்னிப்புக் கேட்டு மீளுங்கள்.

    ReplyDelete
  4. அன்பர்களே.... நான் ஏற்கனவே கூறியிருந்தேன், "இந்த ஜெஸ்லியோ ஜெஸ்லி என ஒரு "கொமடி" பெயரோடு முஸ்லிம் பெண்ணொருவரின் புகைப்படத்தோடு இங்கு ("எம்மதமும் சம்மதம்", ஆனால் "இஸ்லாமல்ல" என்று )கோழையாக வந்து போவது ஒரு இஸ்லாமிய விரோதியே" என்று.

    இருந்தாலும், ஏனையவர்களாவது தெரியவேண்டும் என்பதற்காக புனித அல்-குர்ஆனில் இருந்தும், ஹதீஸில் இருந்தும் இஸ்லாத்தில் பெண்ணுரிமை பற்றி....


    அல்-குர்ஆனில் பெண்கள் பற்றி சில...

    "கணவர்களுக்கு பெண்களிடத்திலிருக்கும் உரிமையைப் போன்று முறைப்படி அவர்கள் மீது பெண்களுக்கும் உரிமை உண்டு". (அல்குர்ஆன் 2:228)

    "எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்." (அல்குர்ஆன் 24:4)


    "எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு." (அல்குர்ஆன் 24:23)

    "இறை நம்பிக்கை கொண்டவர்களே, பெண்களை(அவர்கள்) மனப்பொருத்தம் இல்லாத நிலையில் நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாக்கிக் கொள்வது உங்களுக்கு கூடாது". (அல் குர்ஆன் 4:19)

    (இறந்து போன) பெற்றோரோ- நெருங்கிய உறவினரோ விட்டுப்போன பொருள்களில் அவை அதிகமாகவோ, கொஞ்சமாகவோ இருந்த போதிலும்ஆண்களுக்கும் பாகமுண்டு, அவ்வாறே பெண்களுக்கும் பாகமுண்டு.-(அல்குர்ஆன் 4:7)

    "நீங்கள் (திருமணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய "மஹர்களை" கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள்.(அல்குர்ஆன் 4:4)

    "மணமுடிக்கும் பெண்ணுக்கு ஒரு பொற்குவியலையே (மஹராக) கொடுத்த போதிலும், அதிலிருந்து எதனையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 4:20)

    ReplyDelete
  5. முஹம்மது நபி அவர்களின் பொன்மொழிகளில் இருந்து சில...

    கல்வி கற்க உரிமை:

    "கல்வியைத் தேடுவது ஆண் பெண் அனைவர் மீதும் கடமையாகும் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா)

    திருமண உரிமை:

    (திருமணத்திற்கு) கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது, கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவளது மௌனமே சம்மதமாகும் என்று கூறினார்கள்.
    (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி, முஸ்லிம், அஹமத்)

    ஹன்ஸா பின்த் ஹித்தாம் ரளியல்லாஹு அன்ஹாஎன்ற பெண்மணியை அவரது தந்தை சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத அப் பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து இதைக் கூறியபோது அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.
    (நூல்: புகாரி, அபுதாவுத், அஹமத்)


    ஒரு இரும்பு மோதிரத்தையாவது மணப்பெண்ணுக்கு மஹராகக் கொடுத்து மணம் முடியுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு ஆணையிட்டார்கள் (ஹதீஸின்சுருக்கம்) அறிவிப்பவர்: ஸஹல் பின் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு,
    ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம் அபுதாவுத் நஸயீ, தாரமி, திர்மிதி

    ஒரு நபித் தோழரிடம் மஹராகக் கொடுக்க எந்த பொருளும் இல்லாததை அறிந்த ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உனக்கு ஏதாவது திருக்குர்ஆன் வசனங்கள் தெரியுமா? எனக் கேட்டார்கள். அந்நபித்தோழர், தனக்கு இன்னன்ன குர்ஆன் வசனங்கள் தெரியுமென விடையளித்தார்கள். உடனே அந்த வசனங்களை மணப்பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பாயாக! அது அப்பெண்ணுக்குரிய மஹராகும்" என்றார்கள்.
    அறிவிப்பவர்: ஸஹல் பின் ஸஅத் (ரலி),
    ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம் அபுதாவுத் நஸயீ, தாரமி, திர்மிதி

    அந்த வகையில் திருமணத்தின் போது இஸ்லாம் ஆண்களுக்கு மஹர் என்னும் பெண்ணுக்குரியபாதுகாப்பு நிதியை பெண்களுக்கு மகிழ்வுடன் கொடுக்கக் கூறுகிறது.

    மஹர் எவ்வளவு என்பதை நிர்ணயிக்கும் உரிமை மணமகளுக்கே இஸ்லாம் கொடுத்துள்ளது. இந்த உரிமையை இஸ்லாம் வழங்க காரணம் திருமண வாழ்க்கையில் அதிக இழப்பும், தியாகமும் பெண்ணுக்கே. மேலும் ஒருவேளை அந்த கணவன் பெண்ணை விட்டு விவாகரத்து பெற்று சென்று விட்டாலும் அப்பொழுது அந்த பெண்ணுக்கு மிக உதவியாக அந்த மஹர் (மண கொடை என்னும் பாதுகாப்பு நிதி) இருக்கும்.

    மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள சில இணையத்தளங்களையும், நேரடியாக அல்-குரானையும் ஹதீஸ்களையும் படியுங்கள்.

    http://www.jaffnamuslim.com/2013/04/blog-post_1389.html
    http://www.tamililquran.com/qurandisp.php?start=24

    http://muslim-penmani.blogspot.com/2012/02/blog-post_1439.html

    http://nervazhii.blogspot.com/2013/07/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. Nice one jamal may allah reward you for your intention.

      Delete
  6. முட்டாள்களுடன் விவாதிக்காமல் இருப்பதும், அறிவுரை கூறாமல் இருப்பதும் அறிவுடைமையாகும் மேலும் மௌனியாய் இருப்பதே அவர்களுக்கான பதிலாகவும் அமையும்.
    ஆண், பெண் என்று இயற்கையே உடற்கூற்று ரீதியில் வேறுபடுத்தி காட்டியிருப்பதை J J போன்ற தற்குறிகள் புரிந்து கொள்ளப் போவதில்லை. நாய் வாலை நேர் செய்ய நாம் ஏன் முயற்சிக்க வேண்டும்? வாசகர்கள் இவ்வாறான மந்த புத்திடையவர்களை புறக்கணித்து விடுவதே சிறப்பு.
    இயற்கை மூலக்கூறுகளின் அடிப்படையில் (chromosome arrangement in DNA )ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்று முதலில் நிறுவட்டும் அதன் பின் இது போன்ற கேள்விகளுக்கு பதில் கொடுக்கலாம்.
    எவ்வாறு அரபு மொழியில் பேசுபவர்கள் எல்லாம் முஸ்லிம்களாய் இருப்பதில்லையோ {குற்றங்களையும், கொலைகளையும் செய்து விட்டு “அல்லாஹு அக்பர்” என்று முத்தாய்ப்பாக சொன்னால் அவர்கள் முஸ்லிம்கள் தான் என்று எண்ணி பரப்புரை செய்வது தவறு ] அது போல் இஸ்லாமியப் பெயரை / அரபுப் பெயரை வைத்துக் கொள்பவர்கள் பலரும் முஸ்லிம்களே அல்ல என்பதே உண்மை.

    ReplyDelete
  7. நண்பர்களே!

    இறைவனைப் பழிசொல்ல யாருக்கும் முடியாது. ஏனெனில் இறைவன் பாரபட்சமற்றவன். எல்லோருக்கும் பொதுவானவன்.

    ஆனால் அத்தகைய பாரபட்சமின்றிய இறைவனிடமிருந்து கிடைத்த பால்-சமத்துவமிக்க உண்மையான மார்க்கத்தை திரிபுபடுத்தி, ஆணாதிக்கவாதிகள் ஏற்படுத்திய பல இடைச்செருகலுடன் இருப்பதனால்தான் இன்று பலரும் நம்மவர்களைப் பார்த்து பரிகசித்து ஏளனம் செய்யுமளவுக்கு பல குழப்பங்களும் திகைப்புகளும்.

    இதைப்புரிந்து கொண்டால் லங்கா கூல் போன்ற பொய் பெயர்களில் எழுதுபவர்களிலிருந்து 'நஊதுபில்லாஹி.. ' ஓதுகின்ற நண்பர் வரை கூலாக யோசிக்கலாம்.

    ReplyDelete
  8. Jesslya Jessly people like you who asks for equal rights! Allah has made everyone equal but according to gender he has uplifted women in some cases and men in some cases. Because creator knows what a women can do and can't do.
    People who chant about feminism should why in Olympic they have men's 100m and women's 100m seprately ? If the women and men are equal they shouldn't divide them in any sports! So these people who bark about women's rights and they should get equal rights won't talk if you ask them these questions! They are all selfish parasites.

    ReplyDelete
  9. @ Zuhair Ali didn't you notice ur initials ( qualifications) are longer than ur name ??? So doesn't ur brai not matured enough. Muslims has this disease of " patram and patbavi" moham. Eppathan thirundaporangalo

    ReplyDelete
  10. Jesslya Jesly ! Allah created Adam from clay Hawwa (as) from the rib borne of Adam. Tell me which is more greater ? Rib borne or mud???? So don't see it as allah has defeating the women. Infact Islam uplift the women. No hadees say that the heaven is feet of a man rather it says it's under the feet id women (mum) according to the nature of women they cannot hold leadership. It does not mean Allan has degraded them. You need to stop reading about Tamil ilakkiyams and stories and start reading about hadeeths about women and their status and how men should respect them and treat them. May be ur 11 siblings didn't know how to treat you and you had a bad childhood as a girl in your house and society.
    Abu Huraira reported: The Messenger of Allah, peace and blessings be upon him, said, “I enjoin you to treat women well, for the woman was created from a rib and the most curved part of the rib is its uppermost part. If you try to straighten it you will break it, but if you leave it as it is it will remain curved. So be good to women.”

    Source: Sahih Bukhari 3153, Sahih Muslim 1468
    Abu Hurayra stated, “The Messenger of Allah, may Allah bless him and grant him peace, said, ‘The most perfect of believers in belief is the best of them in character. The best of you are those who are the best to their women.'”

    Anas narrated: “The Messenger of Allah (peace be upon him) was once traveling (in a caravan and women were riding the camels) and a boy named Anjashah was chanting for the camels. The Messenger of Allah said: “O Anjashah, drive the camels slowly as they are carrying “Qawareer” (Crystals).( he describe women as crystals and should treat them like crystals)


    ReplyDelete
  11. இந்த ஜெஸ்லியா இந்த உலகிலேயே இல்லாத ஒன்றை அதிலும் மாற்று மதத்தவர்கள் கூட சொல்லாத ஒன்றை இவர்குறிப்பிடுகின்றார் அதாவது பால் சமத்துவம் (sex-equality) இவர்குறிப்பிடுவது பால்நிலை சமத்துவம் (Gender- Balance) ஆக இருக்க வேண்டும் சகோதர்களே அவரை மன்னித்து விடுங்கள் அவருக்கு பல விடயங்களில் அறிவூ இல்லாமலே அறிவூ உள்ளதாக காட்டிக் கொள்ளும் ஓர் உள்நோக்கம் உள்ளது இவரைப்பற்று 2013ம் ஆண்டு முதல் (அதாவது கமல்காசனின் சர்ச்சைக்குரிய படம் வந்தது முதல் தெரியூம் ) இவர் இஸ்லாமிய பெயரால் பதிவிடும் ஓர் இஸ்லாமிய விரோதி என்று பாவம் இது ஓர் மனநோய் அல்லது இதை ஓர் இஸ்லாத்தின் வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மனநோய் என்றும் குறிப்பிடலாம் இந்த ஜெஸ்லியாவிற்கு முடியூமானால் வரட்டும் (நேரில் அல்லது வலையத்தளத்தின் ஊடாக) பால் சமத்துவம் உண்டு எனக் காட்டட்டும் இன்ஸா அல்லாh நான் தயார் உயிரியல் மற்றும் மரபுரிமை ரீதியில் இல்லை என்று நிறுபிக்க

    ReplyDelete

Powered by Blogger.