Header Ads



பீ.ஜே.யின் இலங்கை வருகை, சாபமா..? வரமா..??

-ஸியாத் ஸாலிஹ்-

பல் இன மக்கள் வாழும் எம் நாட்டில் இஸ்லாம் பரவிய வரலாற்றை மறந்த எம் முஸ்லீம் சமூகத்தினர் ஒரு இந்திய மார்க்க அறிஞக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் செய்யும் அளவுக்கு மார்க்க அறிவிலிகளாக உள்ளனர்இ மியன்மார் கொளைகாரன் அசின் விராது இலங்கை வந்தபோது இந்த சோனகர்கள் எங்கிருந்தனர்?

முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வபாத்துக்கு பின் இஸ்லாத்தை அழிக்க ஒரு கூட்டமும் உயிர்ப்பிக்க ஒரு கூட்டமும் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு உருவாகிக்கொண்டே இருக்கின்றனர்.

அன்று அந்த அரேபியர்களும் இந்திய முஸ்லீம்களும் இலங்கைக்கு வியாபாரிகளாக வந்து இஸ்லாம் மார்க்கத்தை இலங்கையில் பரப்பி இருக்காவிட்டால் நாமும் ஒரு புத்தனாகவோ அல்லது ஒரு இந்துவாகவோ இருந்திருப்போம். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் எம்மைப் பாதுகாத்துவிட்டான். 'முஸ்லீம் தாயின் வயிற்றில் பிறக்கவைத்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த தொழுகையை தவிர வேரொன்றுமில்லை' சிறுபான்மையாக வாழும் இலங்கையில் பல இயக்கங்களை சேர்ந்த நாம் ஒற்றுமையாக வாழவேண்டிய கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்

தற்போது சகோதரர் பி ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் இலங்கை வருவது பற்றி பல்வேரு பட்டவர்கள் தர்க்கித்துக்கொண்டே உள்ளனர். அவர் இலங்கை வந்தால் தான் என்ன? அவர் ஒரு காபிரா ? அதை யாராளும் நிரூபிக்க முடியுமா? அவர் சொல்வதுதான் என்ன ? சற்று கேட்டு பார்த்தால் தான் என்ன?

இன்ஷா அவரை அல்லாஹ் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்திருப்பான் ஏனெனில் இந்தியாவின் தமிழ் நாட்டில் இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாத்தின் பக்கம் நுளைய தஃவாப் பணியை மேற்கொண்டு சாதிதுக்காட்டியவர் பி ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள்

இதுபோன்ற பணியை எந்த இயக்கம் இலங்கையில் செய்து காட்டியது? எந்த இயக்கத்துக்கு அவரின் கொள்கைகளில் சந்தேகம் இருக்கின்றதோ அவர்கள்  கேட்டு தெளிவு பெற வேண்டிய சந்தர்ப்பத்தை தட்டிக்களிக்களாமா? அல்லது அவரை ஒரு பொது விவாத்த்துக்கு அழைத்து சர்ச்சைக்குறிய விடயங்களுக்கான ஆதாரங்களை எடுத்து வைக்கச் சொல்ல்லாமே? 

இவற்றை எல்லாம் சிந்திக்காமல் அவர் இலங்கை வரக்கூடாது என்று ஒன்றும் அறியாத இயக்க வாதிகளின் ஷிஷ்யர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் பிடிவாதம் பிடித்த இயக்கத்தலைவர்களை என்னவெண்று அழைப்பது. முதலில் இயக்கங்களின் தலைவர்கள் இதை சிந்திக்கவேண்டும்  எனது செயற்பாடுகள் தலைவர் என்றவகையில் பொறுத்தமானதா? அல்லாஹ்வும் அவனது ரஸூலும் காட்டித்தந்த வழியிலா எனது செயற்பாடுகள் இருக்கின்றது  என்பதனை சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும்

நீங்கள் நான்கு இமாம்களில் ஒருவரைப்பின்பற்றுபவர் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றீர்களே! அவர்களின் விளக்கங்களுக்குள் எவ்வளவு கருத்து வேருபாடுகள் உள்ளன  என்றாலும் அவர்கள் மார்க்க விடயங்களில் ஏனைய இமாம்களின் முன் எவ்வாறு செயற்பட்டார்கள். அவர்கள் ஒருபோதும் ஏனைய இமாம்களை திட்டியதும் இல்லை அவற்றினை பின்பற்ற வேண்டாம் என்று சொல்லவும் இல்லை. அவர்களின் ஹதீஸ்களின் விளக்கங்களின் இறுதியில் எதனை குறிப்பிட்டார்கள் என்பதனை சற்று படியுங்கள் இமாம்கள் இறுதியில் குறிப்பிட்டதெல்லாம்

'நாம் தொகுத்த ஹதீஸ்களில் அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் முறனான ஹதீஸ்கள் இருந்தால் அவற்றை தூக்கி எரிந்துவிடுங்கள்' இமாம்கள் இப்படி இருக்க தற்போதைய முஸ்லீம் சமூகத்தலைவர்கள்  அந்த இமாம்களின் ஒரு நரைமுடிக்கு கூட ஒப்பிட முடியாத அளவுக்கு வழிகேட்டில் உள்ளனர் 

இவர்களின் இயக்கவெறியும் பிடிவாதமும் சுயநலமுமே இவர்களை வழிகேட்டில் கொண்டு சென்றுள்ளது. இதனைத்தான் அவர்களிடம் உள்ள ஷிஷ்யர்களிடமும் கானக்கூடியதாக உள்ளது அவர்கள் தங்களது இயக்கத்தை வளர்க்கும் நோக்குடனே தங்களது நடவடிக்கைகளை மார்க்கத்தின் பெயரில் வழிநடாத்துகின்றனர் அல்லாஹ் ரஸூலின் போதனைகளை மறந்து அதற்காக எவ்வகையான நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர் இதனால் தான் இலங்கை முஸ்லீம்களிட்த்தில் ஒற்றுமை இல்லைஇ ஊருக்கு ஊர் சண்டை செய்து கொள்கின்றனர்

இவைகளையும் தாண்டி அரசியல்வாதிகளும் அதற்கு எதிராக கூச்சலிடுகின்றனர் அவர்களின் உள்வாழ்க்கையைப் பார்த்தால் அவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமே இல்லை. சகோதரர் பீஜே அவர்கள் இலங்கை வந்து அவரது பிரச்சாரங்களின் போது குழப்பங்கள் ஏட்படுமென்றிருந்தால் அதற்கான பொறுப்பை ஏனைய இயக்கவாதிகளின் தலைவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே உங்கள் ஷிஷ்யர்களை அமைதிப்படுத்தி முடியுமென்றால் அவர்களையும் பீஜே அவர்களின் மார்க்க பிரச்சாரங்களின் கலந்து கொண்டு சர்ச்சைக்குறிய விடயங்களுக்கான தெளிவை பெற்றுக்கொள்ளச் செல்லுங்கள் பின்பற்றுவதும் இல்லாததும் அவரவர் விருப்பம் அதற்கான கூழியை அவரவர் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வர்

இவற்றை எல்லாம் குறிப்பிட்ட நானும் ஒரு பீ ஜே வாதியோ இயக்கவாதியோ அல்ல என்பதனை அல்லாஹ்வின் மீது ஆனையாக குறிப்பிடுகின்றேன். யா அல்லாஹ் இலங்கை முஸ்லீம்களிடத்தில் ஓற்றுமையை ஏற்படுத்தி அனைவரையும் பாதுகாத்து மறுமை நாளில் சுவர்க்கத்தை கொடுத்தருள்வாயாக...

32 comments:

  1. If some one is following pure Islam better than Sahaba, he should be able to come by miracle. No need visa or passport controller aproval. Also they can take that Quran to India issue in his house. End of the day they will upload vedios in youtube ya? But one problem, no BBS in India.

    ReplyDelete
    Replies
    1. Affects of Raamaayana constitute your thoughts brother. Islam is not a mythical way of life but a complete code of life that promotes only pragmatic affairs. Hence please come out of your hallucination please..

      Delete
  2. கட்டுரையாளரே.......மேற் கூறப்பட்ட விடயங்கள் யாவும் தவ்ஹீத் என்ற
    பெயரில் இருக்கின்றவர்களயே சாரும்.உதாரணம் வேண்டிய அளவு.உண்டு.முன்னய காலங்களில் விவாதம் என்ற பெயரில் ஒருவரை ஒருவர் திட்டி தீர்த்ததை நாமும் ஊடகங்கள் மூலமாக கண் கூடாக பார்துள்லோம்.இப்பொழுது என்னொமொ இவர்கள் மாத்திரம் தஃவா செய்வது போலும் ஹக்கில் இருப்பது போலவும் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் கூறியது போல் PJ என்னதான் சொல்கிரார் என்பதை கேட்க வேண்டும் எனறாலும் sltj அமைப்பு ஏன் ஸுறா சபையில் சேரவில்லை என்பதயும் நீங்கள் சுட்டி காட்டியிருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. U know why bbs not show against to PJ visit? Because they know very well PJ is a leader of the munafiq and enemies of Islam who destroy the Islam secretely little by litele in the name of Islam spreading the positioning ideas.

    ReplyDelete
  4. சியாத் ஸாலிஹ், தான் ஒரு அறிவிலி என்பதை இக்கட்டுரையில் மிகத்தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். சுய ஒப்புதலுக்கு நன்றி. அசின் விராது வந்தபோது சோனகர்கள் எங்கிருந்தனர்? என்று வினாஎழுப்புவதில் விடையாகக் கிடைப்பது “நீங்கள் சோனகர் இல்லை என்பதே” . அசின் விராது வந்தபோது சோனகர்கள் எங்கும் போய்விடவில்லை இங்கே தான் இருந்தார்கள் ஆனால் ஒற்றுமையாக ஒன்று பட்டு.
    “சிறுபானமையாக வாழும் இலங்கையில் பல இயக்கங்களை சேர்ந்த நாம் ஒற்றுமையாக வாழ வேண்டிய கட்டாயத்தில்உள்ளோம்” என்பது நல்ல கருத்து இதனை அவை அடக்கம் தெரியாது ஆபாசமாக பேசி அடுத்தவர்களை மேடை போட்டு கொச்சைப்படுத்தும் தறுதலைகள் புரிந்துகொள்ள வேண்டுமே? அன்றியும் நாம் முஸ்லிம்கள் அல்ல; இயக்கவாதிகள் என்பதை தெளிவு படுத்தி, ஒற்றுமையான வாழ்வுக்கு அப்பாற்பட்டவர் என்பதையும் ஒத்துக் கொண்டுள்ளீர்கள்.
    முஸ்லிம்கள் என்றால் தானே நாம் ஒற்றுமைப்பட முடியும் இயக்கவாதிகள் எங்கே ஒற்றுமையாக வாழ்கிறார்கள்?
    குர் ஆணையும் ஹதீதையும் மட்டுமே பின் பற்றுவோம் என்றும் கொக்கரிக்கும் உங்களைப் போன்றவர்கள் எதெற்கெடுத்தாலும் “விவாத மேடை அமைத்து விவாதிக்க” வேண்டும் என்று கூவுவது வாடிக்கையாகி விட்டது விவாத மேடை அமைத்து விவாதித்ததாக குர் ஆன் அல்லது ஹதீதில் ஏதாவது ஆதாரம் காட்டமுடியுமா?
    மேலும் ஒருவருக்கு வக்காலத்து வாங்குவதற்கு முன்னர் அவரது சுயசரிதையை கொஞ்சமாவது தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இந்திய தமிழ்நாட்டு உலமாசபை “மார்கத்தை விட்டு நீங்கிவிட்டார்” என்று ஒதுக்கப்பட்ட ஒருவர்தான் நீங்கள் குறிப்பிடும் சகோ. அவரை குர் ஆனை வெளியிட வருந்தியழைப்பதில் உள்ள சூட்சும் என்ன என்பதே இங்கு கேள்வி. இது உங்களைப் போன்ற சில அறிவிலிகளுக்குப் புரியாமலிப்பது இங்கு புதிர்.
    “இவர்களின் இயக்க வெறியும் பிடிவாதமும் சுயநலமுமே இவர்களை வழிகேட்டில் கொண்டு சென்றுள்ளது இதனைத்தான் அவர்களிடம் உள்ள ஷிஷ்யர்களிடமும் காணக்கூடியதாக உள்ளது. அவர்கள் அவர்களது இயக்கத்தை வளர்க்கும் நோக்குடனே தங்களது நடவடிக்கைகளை மார்கத்தின் பெயரில் வழி நடத்துகின்றனர்” என்று கூறுவது எத்தனை கலப்படமற்ற சுயவிமர்சனம். உங்கள் சகாககளுக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லக் கூடாதா?

    ReplyDelete
    Replies
    1. எந்த உலமா சபை எப்பொலுது நீ்கினார்கள் கப்ர் வணங்கும் இனைவைப்பாலர்கள் இவரை நீக்குவதற்கு 30 வருடங்களுக்கு முன்பே இவர் அவர்களை நீ்க்கிவிடார் அல்லாஹ்வை இனைவைப்பதை விட்டும் மக்களை மீட்டெடுத்த உத்தம பணியை அல்லாஹ் இவர் மூலமாக செய்தான் செய்து கொண்டிருக்கிறான்.

      Delete
  5. சத்தியத்தை சொல்வதற்கு விவாதக்களங்களும் மிகச் சிறந்த வழிமுறைகளாகும்.

    ஆனால் சத்தியத்தை நிலைநாட்ட விவாதத்திற்கு வாருங்கள் என்று மாற்றுக்கருத்துடையோரை அழைத்தால் இவர்களுக்கு வேறு வேலையில்லை, ஆ ஊ என்றால் விவாதம் என்பார்கள் என அங்கலாய்க்கிறார்கள். ஏதோ விவாதம் புரிவது பழிப்பிற்குரிய செயல் போன்று இவர்களது செயல்பாடுகள் அமைந்துள்ளது. இன்னும் சிலர் இஸ்லாத்தில் விவாதத்திற்கு அனுமதியில்லை என்றும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இது போன்றவர்களை காணும் போது உண்மையில் ஆச்சரியமே நம்மை தொற்றிக் கொள்கிறது.

    காரணம் சத்தியத்தை பிரச்சாரம் செய்வதில் ஆக்கபூர்வ விவாதத்திற்கு பெரும் பங்கிருப்பதை இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது.

    அழகிய முறையில் விவாதம் செய்து சத்தியத்தை பரப்புமாறு அல்லாஹ் அறிவுறுத்துகிறான்.

    அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக!

    திருக்குர்ஆன் 16 125

    ReplyDelete
  6. விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர் வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.
    திருக்குர்ஆன் 16 125

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Asin Virathu is a Buddist priest. Is it possible for a Islamic organization to object against his arrival in Sri Lanka that too during the last regime. Also he was invited by BBS. This shows what sense you have in your argument.Thawheet jamath people have no sense . They only argue for sake of argument, this is how wahabis are.

    ReplyDelete
  9. Pj விடயத்தில் அனைவரும் acju உட்பட ஒன்றை நினைவில் வைத்துக் கொ்ளவும் அதாவது இவர் வருவதை எதிர்க்கும் அனைவரும் சுட்டிக்காட்டும் விடயம் இவர் வந்தால் குழப்பம் வரும் என்பதாகும், நான் இவ்வாறு கூறுபவர்களைப்பார்த்து கேற்க விரும்பும் சில கேழ்விகள் இவைதான்
    # pj அவர்கள் ஓர் இடத்துக்கு பயானுக்கு அல்லது அதிதியாகக் களந்து கொண்டு அவராக அல்லது அவரின் சஹாக்களால் எங்கு பிரச்சினை ஏற்படுத்தியிருக்குறார்கள்?
    # எந்த அரசாங்கத்துக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டிரு்கினறார்?
    # இவ்வலவு பயங்கரமாகச் சித்தரி்க்க முனையும் இந்த மணிரைப்பற்றி அவருடைய சொந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
    # இவருடைய ஆக்கங்களில் உங்களுக்கு முரனான கருத்துக்கள் இருப்பதாகக் கூறுவதாயின் அவ்வாரான முரனான கருத்துக்களை நான்கு பெரிய மத்ஹப்களைக் கொண்ட இமாம்களிடத்தில் காணப்படவில்லையா?
    # இலங்கை நாட்டில் அவர் இல்லாமலே பல குழுக்கள் மார்க்க ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சண்டையிடவல்லையா?
    # இலங்கை முஸ்லிம்மகள் மார்க்க ரீதியாக அல்லது அரசியல் ரீதியாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதற்கு ஒரு ஆதாரம் எவராலும் முன் வைக்க முடியுமா?
    # sltj, tntj, இலங்கையிலுல் மற்ற தவ்ஹீத் இயக்கங்ள் என்பன கருத்துக்களை கருத்து்களால் தவிர எந்த அடாவடித்தனத்தையும் பயம் படுத்தி பார்த்துண்டா?
    # கருத்துக்களை அதன் அடிப்படையிலேயே எதிர் கொள்ள தகுதியுள்ளவர்கள் அல்லது அதை ஆதரிப்பவர்கள் இவரின் வருகையை எதிர்க்கலாமா?
    இந்தக் கேழ்விகளை மனதில் வைத்தவர்களாக நியாயமாக சிந்தித்துப் பாருங்கள்,
    Pj 2005ல் இலங்கை வந்த பொழுது யார் குழப்பம் விளைவித்தார்கள் அகுரனையில் இவர்களை பேச விடாமல் யார் கல்லெரிந்து கூச்சலிட்டது,
    பன்றி விடயம் சம்பந்தமாக இவர் கூறாத கருத்துக்களை துண்டுப்பிரசும் அடித்து வெளியிட்டது யார்? இப்பொலுது யார் இவர் இலங்கை வரக்கூடாதென கோசமிடுகறார்களோ அவர்களும் அவர்களால் தூண்டி விடப்பட்ட சில ரவுடிகளும்தான் செய்தார்கள் என்பது நாடறி்ந்த உன்மை,
    அதன் பின் இவரை இலங்கையிலிருந்து நாடு கடத்துவதற்காக ஈடுபட்டவர்கள் அப்பொலுது இருந்த அரசாங்கத்தின் மூலம் பிச்சைப் பிழைப்பு நடாத்திய சில பெயர் தாங்கி ஆலிம்களும் அரசியல் கயவர்களும் பொய்யான தகவல்களை முன் வைத்ததின் மூலம் வெற்றி கண்டார்கள்.
    இவரின் வருகையை எதிர்க்கும் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் நீ்கள் அனைவரும் உங்கள் தொழில் அல்லது வீட்டில் இருந்து கொண்டு இவரின் வருகைக்குப்பின்னாலான கழநிலவரத்தை உற்று நோற்று்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் உதவியால் எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறாது மாரா சில இயக்கங்களின் வழமையான பானியான காடைத்தனத்தின் மூலம் ரவுடிசத்தை அரங்கேற்ற வந்தால் நிலமை மாராக இரு்கும்.
    அன்பரகளே உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிப் பாருங்கள் குழப்பவாதிகள் யார் என்பதை தெளிவாகக் கண்டு கொள்வீர்கள்.

    ReplyDelete
  10. P. J. Is great, not like our lebbas!

    ReplyDelete
  11. தம்பிகளா....இஸ்லாமிய பெயரில் இயக்கங்களை வளர்த்து அவர்களுக்கு சேவை செய்வதற்கும் சந்திகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் சில சீடர்களை வைத்து இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்கும் உங்களுக்கு ஓர் சந்தர்ப்பம் நழுவா விடாதிர்கள் Live From Sugadadasa Stadium " http://www.sltj.lk "

    ReplyDelete
  12. Nizar....& other..you people are still believing the miracle...? and your masterminders didnt tell you that there is no any miracle after Prophet Mohammad (PBUH)....??
    OR may be they want to cheat you kids my telling "miracles" for their earnings...!!!

    ReplyDelete
  13. The Article is saying the true & facts...the Muslims must think this way.....is they have Eiman.....!!

    ReplyDelete
  14. இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதை நாங்கள் செய்ய வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் எதை நாங்கள் அடக்கி வாசிக்க வேண்டும் என்ற ஒரு சிந்தனை இல்லாதவர்கள் சுயலனதிர்காக விலை போனவர்கள் மார்கத்தை பணம் சம்பாதிக்க பயன் படுத்துவதில் வல்லவர்கள்

    இஸ்ரவேலின் தூதுவர் வரும் பொது இந்த ஆசாத் சாலியும் ஓநாய்களும் எங்கு போனார்கள்

    மியன் மாரில் 1000 கணக்கில் முஸ்லிம்களை கொலைசெய்ய வித்திட்டvan வரும் போதும் இந்த பயந்தான் கோழிகள் எங்கு போனார்கள்

    இஸ்ரவேல் தாயார் செயும் பொருக்களை தங்கள் வாய்க்குள் வாதித்து கொண்டு ஊளை இடுஹின்றார்கள்

    சியாக்கள் தலை விரிதாடுஹிறது அதனை இந்த ஓநாய்கள் கண்டு கொள்ள வில்ல

    கனேதிரே தெளிவான சிர்க் பண்ணிகொண்டு இருக்கும் ஆசாத் சாலி மலர் தட்டை ஏந்திக் கொண்டு இருக்கும் முழுக் குடும்பம் பன்சளில் மண்டி இட்டதை இந்த ஓநாய்கள் கண்டு கொள்ள வில்ல

    ReplyDelete
  15. ALLAH & marumai naal patri anivarum bainthu kollunkal ALLAH vin kopam & thantani varuvsthaku yaarum muaicikia vandam ALLAH veathaai maatru mathathavarukkalku parupuvathakku help pannavitalum athanai thadukkavendam.wsm

    ReplyDelete
  16. சகோதரர் Gee..அவர்களே அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுலையும் ஆரோக்கியத்தையும் வழங்குவானாக.

    அசின் விராது வந்தவேலை இலங்கை முஸ்லீம்கள் அச்சத்திலும் மரணபயத்திலுமே இருந்தனர், இன்று தெவடகஹ முன் ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லீம்கள் அன்று எங்கு போய் இருந்தனர் அவர்களை யார் தூண்டிவிட்டனர் என்றே நான் கேட்டேன்

    அன்று ஒரு சில முஸ்லீம் தலைவர்கள் பொதுபலசேனாவின் ஆலோசகர்களாக இருந்தனர் இன்னும் சில தலைவர்களோ உயிருக்கு பயந்து தமக்கு கீழ் உள்ள அதிகாரங்களை முஸ்லீம்களின் உரிமைகளையும் விட்டுக்கொடுத்தனர் இதுவே உண்மை

    நானும் சகோதரர் பீஜே அவர்களின் சில கருத்துக்களில் முரன்படுகின்றேன் அதற்காக அவரை கொச்சைப்படுத்தி விரட்ட முடியாது அவரை இந்திய உலமா சபை அல்ல சவூதி உலமா சபை மார்க்கத்தில் இருந்து நீங்கிவிட்டார் என்று சொன்னாலும்

    ”அவரது ஈமானை அல்லாஹ் ஒருவனே அறிவான்”

    இலங்கையில் உள்ள முக்கிய இயக்கத்தலைவர்களிடனும் அந்த இயக்கவாதிகளுடனும் நெருங்கிப் பழகிருக்கின்றேன் அதில் கண்ட அனுபவத்தை வைத்தே எமது முஸ்லீம் சமூகத்தின் ஒற்றுமைக்கான தேவை கருதியே இந்த கட்டுரையை எழுதினேன்

    ReplyDelete
  17. சகோதரர் Gee அவர்களே அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுலையும் ஆரோக்கியத்தையும் வழங்குவானாக.

    அசின் விராது வந்தவேலை இலங்கை முஸ்லீம்கள் அச்சத்திலும் மரணபயத்திலுமே இருந்தனர், இன்று தெவடகஹ முன் ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லீம்கள் அன்று எங்கு போய் இருந்தனர் அவர்களை யார் தூண்டிவிட்டனர் என்றே நான் கேட்டேன்

    அன்று ஒரு சில முஸ்லீம் தலைவர்கள் பொதுபலசேனாவின் ஆலோசகர்களாக இருந்தனர் இன்னும் சில தலைவர்களோ உயிருக்கு பயந்து தமக்கு கீழ் உள்ள அதிகாரங்களை முஸ்லீம்களின் உரிமைகளையும் விட்டுக்கொடுத்தனர் இதுவே உண்மை

    நானும் சகோதரர் பீஜே அவர்களின் சில கருத்துக்களில் முரன்படுகின்றேன் அதற்காக அவரை கொச்சைப்படுத்தி விரட்ட முடியாது அவரை இந்திய உலமா சபை அல்ல சவூதி உலமா சபை மார்க்கத்தில் இருந்து நீங்கிவிட்டார் என்று சொன்னாலும்

    ”அவரது ஈமானை அல்லாஹ் ஒருவனே அறிவான்”

    இலங்கையில் உள்ள முக்கிய இயக்கத்தலைவர்களிடனும் அந்த இயக்கவாதிகளுடனும் நெருங்கிப் பழகிருக்கின்றேன் அதில் கண்ட அனுபவத்தை வைத்தே எமது முஸ்லீம் சமூகத்தின் ஒற்றுமைக்கான தேவை கருதியே இந்த கட்டுரையை எழுதினேன்

    ReplyDelete
  18. Gee என்பவர், தன்னை மட்டுமே அறிவாளியாக எண்ணிக் கொண்டு, வானத்தை நோக்கி உமுளி இருக்கிறார்,,
    1. அசின் விராது வந்த போது;
    முன் பின் என அனைத்தும் அடங்கி நின்றவர்கள்,, இன்று கொக்கரிக்க தெருவுக்கு வந்து விட்டார்கள் ...!!!
    அன்று ஷியாகாரன், அத்வைத காரன் , கவுர் வணங்கி எல்லாம் ஆலிம்கள் என்கின்றவர்கள் வந்த போது வாய்பிழந்து , கண் மூடி நின்றவர்கள் ..,
    இப்போது குறைக்க வருகிறார்கள், விராது வந்த போது ஒற்றுமையாக இருந்ததாம் ...!!! என்ன ஒற்றுமை ?? தம் இனம் முழுக்க அழிக்க சதித் திட்டம் போடுகிரானுகள் என்று, எல்லோரும் ஓடி ஒழிந்து கொண்டதா ..? அல்லது , நம் இனத்தையே அழித்தவன் நம் நாட்டுக்கு வருகிறான் என்று பயந்து ஒடுங்கி நின்றதையா ஒற்றுமை என்கின்றீர் ??
    ஒற்றுமையைக் காட்ட ஒரு ஆர்ப்பாட்டம் மேதும் காட்டாத கூட்டம் ...!!!
    ஷியா காரன் வரும் போதும், கபுறு வணங்கிகள் வரும் போதும் எவ்வாறு இது ஜனநாயக நாடக தென்பட்டதோ , அது ஏன் இப்போது மறைந்து போனது ...!!
    அத்தோடு , தாங்கள் முஸ்லிம்கள் அல்ல இயக்க வாதிகள் என்பதனை இக்குறிப்பிட்ட நபரே மேடை போட்டுக்காட்டி இருக்கின்றார்.., யாரும் வந்தால் வந்து விட்டுப் போவான், கொடி பிடிக்க இவர்கள் யார்..., இவர்கள் பணத்திலா அவர்கள் ஏதும் செய்கிறார்கள் இல்லை எனின்,, இவர்களது இயக்க வெறி அல்லாது வேறு ஏதும் உளதோ ??


    2. இஸ்லாத்தை பொறுத்தவரை; ஒரு நபரை பார்த்து நரக வாதி என்பதற்கு எவருக்கும் அதிகாரமில்லாத போது சில சில்லறைகளுக்கு எங்கிருந்து வந்தது வஹி ..?? அவ்வாறு கூற.!!

    அத்தோடு,
    3. மாற்றுக் கருத்து உள்ளோரோடு மேடை போட்டுப் பேசாமல், வீட்டிலிருந்து கொண்டா பேசுவது,,, ??, கருத்து முரண்பாடு வருகின்ற போது பேசி தீர்த்தல் என்பதே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட வழிமுறை ...!! இவ்வாறு முரண்பட்ட தரப்பினரும், மத்தியஸ்தரும் இருந்து தீர்த்துக் கொண்ட அல்லது விளக்கம் பெற்றுக் கொண்ட சந்தர்பங்கள் நிறையவே உளது மார்கம் தெரியாது விடின், குறைந்தது அவர்களது மார்க்க அறிஞ்சர்க்ளிடத்திலாவது கேட்டு தெரிந்து கொள்ளட்டும் அறிவிலிகள் கூட்டம். (பழமை வாதிகள்) அன்று பென்சில் கொண்டு பேபரில் எழுதிய இக் கூட்டம், மவுஸ் பிடித்து கீபொட்டில் தட்ட எப்படித்தான் உடன் பட்டதோ !!

    இறுதியாக,
    அவருக்கு வக்காலத்து வாங்க வரவில்லை, நீதி நியாயம் என கூற வந்தவர்தான் அவர் (ஸியாத் ஸாலிஹ்), PJ பற்றி Gee புரிந்து கொண்டதைவிடவும் நாங்கள் நிறையவே புரிந்துவைத்துள்ளோம்..., அதனால்தான் நாங்கள் என்றும் PJ வாதியாக இருந்ததில்லை. அவர் கூறும் பல கருத்துக்கு நாங்கள் உடன்பட்டும் இருக்கவில்லை.

    அனால், அவர் தனக்கென வருமானமொன்றை தானாகவே தேடிக்கொண்டிரிக்கிறார்.., இஸ்லாத்தை விற்று பணம் சம்பாதித்து இல்லை .., அரசியல்வாதிக்கு பின்னால் அலைந்து சுயலாபம் தேடவில்லை அப்பெரும் மக்கள் கூட்டத்தை வைத்திருந்தும்..., அரசியல் வாதிகளுக்காக எதையும் மக்களிடம் ஒழித்து, மறைத்து வக்காலத்து வங்ககவில்லை.., அதனால் தனக்கென வருவாயை தேடிக்கொள்ளவில்லை. அதனால் இற்றை வரைக்கும் வாடகை வீட்டிலே...


    இப்படி இருக்க மேற்காண் நபர், மனதில் ஏதோவைத்துக் கொண்டு வானம் நோக்கி உமிழ்ந்து இருக்கிறார்.

    ReplyDelete
  19. கட்டுரையாளர் சில விடயத்தை தெளிவு படுத்தினார் அனால் சிலதை மறந்துவிட்டார்போலும். 1980 களில் இவரின் பயணம் முஸ்லிம்கள் தொப்பி போடுகிறார்கள் (பித்அத்) என்று ஆரம்பித்து இன்று சூனியத்தை நம்பியவன் காபிர் (சூனியக்காரன்) என்று சொல்லும் வரை பல விசித்திரமான பதுவாக்கள் கொடுத்தது யாரும் மறந்து இருக்க முடியாது.

    கட்டுரையாளர் சொல்லுவது போன்று ஒவ்வொருஇமாமும் தனக்கு முனால் மறைந்த, தன்காலத்தில்வாழுகிற நல்லவர்களை அவர்கள் புகழாரம் சூட்டாமல் இருந்ததில்லை ஆனால் சகோ.pj யின் பேச்சுக்களில் எந்த இமாமையும் போற்றியதாக நான் பார்த்த (கேட்ட)தில்லை.ஆனால் இவரை இமாமாக பின்பற்றும் சில மக்கள் மாத்திரம் புகழுவது கொஞ்சம் ஆச்சரியமாகதான் உள்ளது.

    எல்லா வாசகர்களும் பின்னுடகம் எழுதும் நண்பர்களும் அடிக்கடி சொல்லும் விடயம்தான் “உங்களுக்கு முடிந்தால் விவாத்தத்திக்கு அலைத்து உங்கள் கருத்தை கருத்தால் வெல்லுங்கள் ” என்று. இவர்கள் சகோ.pj யின் விவாதங்களையும் அதில் கலந்து கொள்ளும் நபார்களை பற்றி சரியாக கூர்ந்து கவநித்ததில்லை போலும், எல்லா விவாதங்களிலும் கலந்து கொள்ளும் கீழக்கரை யை சேர்ந்த நபார் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) அரபு மொழியே தேரியாத இந்த நபார் கலந்து கொள்ளும் நோக்கம்தான் என்ன என்று இவரிகளிடம் இருந்து சமீபத்தில்(சூனியகருத்து வேற்றுமையில்) பிரிந்து சென்ற (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) வர்ரிடம் கேட்டால் தெரிந்து விடும் இந்த விவாதங்களின் நோக்கம் என்னவென்று.

    1980 களில் சொன்னது அல்ல இன்று இவர் சொல்லும் தவ்ஹீது. ஏன் 2000 ம்களில் சொன்னது அல்ல இப்போது இவர் சொல்லும் தவ்தீது. காலத்துக்கு காலம் தனது கருத்தில் மாற்றம் சொல்லும் சகோ.pj யை ஏற்கதவர்களை எப்படி காபிர் முஷ்ரிக் என்று பட்டம் சூட்ட முடியும்.

    குர்ஆன் ஹதீஸ் சொல்லுவது தவறால்ல அனால் அதற்கு நான் கொடுக்கும் விளக்கம்மட்டும்தான் சாரி என்று சொல்லுவதே நாம் பிழையாக காண்கிறோம்.
    குர்ஆன் ஹதீஸ்சில் இருந்து "நான் விளங்கியது இதுதான்" என்று பரந்த மனதுடன் தட்போதுல்ல அறிஜர்கள் ,இமாம்கள் சொன்னது போன்று சொன்னால் யாருக்கும் பிரச்சினை வாறது

    சகோ.pj பற்றி குறைகளை நாம் இங்குபேசுவது எனது நோக்கம் அல்ல அவர் செய்த சேவைகள் அளப்பரியது.அவர் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு கொடுக்கும் விளக்கத்தை போன்று யாருக்கும் கொடுக்க முடியாது என்பது எனது உறுதியான முடிவு. எத்தனையோ மக்களை இஸ்லாதின் பக்கம் அழைப்பு விடுத்துள்ளார் .சில பித்அத்தான காரியங்களை சுட்டிக்காட்டிதிருத்தி உள்ளார். ஆனால் முஸ்லிம்களை இயக்க ரீதியாகவும்,எமது வழிகாட்டியாக நாம் நினைக்கும் நல்லவர்களை தூற்றுவதும் ,தரம் குறைவானவார்த்தை பிரயோகம் செய்வதும் இன்று வரை தொடர்ந்து கொண்டு இருப்பதைதான் நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். சகிப்புத்தன்மை,விட்டுகொடுப்பு,வேற்றுமையில் ஒற்றுமைகாண்பது,மற்றைய இயங்கங்களையும் அனுசரித்து போவது போன்ற உயர்ந்த பண்புகள் இவர்களிடம் காணப்படுவதில்லை.

    கடைசியாக நான் சொன்ன விடயங்கள் பின்பற்றப்படாமல் இந்தியாவை போன்று இலங்கையில் நடக்குமானால் இவரின் வருகை நன்மைகள்இருப்பதை விட தீமைகளே அதிகம்.

    ReplyDelete
  20. PJ யோடு உடன்பாடு இல்லை, ஆனால் அவர் கருத்தை வெளியிட பூரண உரிமை வழங்கப்பட வேண்டும். அதற்கு பூரண ஆதரவு உண்டு.

    ReplyDelete
  21. பீ ஜே வழிகேட்டைப் போதித்தால் அவரையும் நாங்கள் எதிர்போம் என்று ஆரம்பத்தில் அவருடன் இருந்தவர்கள் உறுதியாக இருந்தார்கள் ஆனால் இப்பொழுது அவருடன் இருப்பவர்கள் பீ ஜே வழிகேட்டைப் போதித்தாலும் அதை வஹியாக ஏற்றுக்கொண்டு அவரை பாதுகாக்கும் நிலையைப் பார்த்தால் எதிர்கால நபியாக பிரகடனப் படுத்தினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை

    ReplyDelete
  22. Yaa Clark Moon, It is true the your Imam of Indian Madhab cannot not cross the see like Moosa Alaihissalaam. I am talking about that online miracle like Skype,etc. no need visa passport, simple he can address by sitting in his house. Also you all can upload videos in places Youtube.

    ReplyDelete
  23. aslam mohamed: வாந்தியில் பல வகை உண்டு அதில் நீங்கள் எடுத்தது ஒருவகை,
    1. அசின் விராது வந்த போது: அமைதியாய் இருந்தது அறிவுடைமை அடாவடித்தனம் தான் இஸ்லாம் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கும் உங்களைப் போன்ற அரை குறைகளுக்கு அது புரியாது. அசின் விராதுவை பிபிஎஸ் இங்கு விருந்தாளியாக அழைத்ததே ஒரு குழப்பத்தை உருவாக்கி அதில் குளிர்காயத்தான் என்பது உங்களைப் போன்ற அறிவிலிகளுக்கு புரியப் போவதில்லை. அது சரி "யாரும் வந்தால் வந்து விட்டுப் போகட்டும் கொடி பிடிக்க இவர்கள் யார்" நல்ல கேள்வி "யார் என்ன எழுதினால் என்னவென்று" கவுந்தடிச்சுப் படுக்க வேண்டியது தானே. உங்களுக்கென்ன குடைச்சல்?
    2. நீங்கள் கூறுவதைப் பார்த்தல் தஸ்லிமா நஸ்ரினையும், சல்மான் ருஷ்டியையும் கூட உங்கள் பக்கம் சேர்த்துக் கொள்வீர்கள் போலுள்ளது. சகோ. இஸ்லாமிய எல்லையை மீறும்போது இவ்வாறான தீர்ப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
    3. விவாதத்தில் இரண்டு வகை உண்டு ஒன்று (wrangling) மற்றையது (argument) நீங்கள் அழைப்பது முதலாவது வகை. இதனை இஸ்லாம் ஊக்குவிக்கவுமில்லை வரவேற்கவுமில்லை.
    இறுதியாக.
    "அதனால்தான் இற்றைவரைக்கும் வாடகை வீட்டிலே..." என்று முத்தாய்ப்பாக உங்கள் முட்டாள் தனத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தீர்களே? அடடாவோ ! இதுதான் நீங்கள் பீ ஜே பற்றி தெரிந்து வைத்துள்ள லட்சனம். ஐயகோ, அவரே, தான் எவ்வாறு வீடுகட்டினேன் என்று விலாவாரியாக அறிக்கை விட்டுள்ளார். கொஞ்சமாவது அவரது ஆக்கங்களைப் படித்துப் பாருங்கள் அதன் பின் வாந்தி எடுக்க வாருங்கள்.

    ReplyDelete
  24. Khalidh Rishad: மிக்க நன்றி எத்தனை அழகான குர்ஆணிய வசனங்கள் " விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக!" என்று கூறுகிறது , இப்போது உங்கள் மனதைத்தொட்டு சொல்லுங்கள் பார்ப்போம், SLTJ உள்ளவர்கள் மேற்கூறிய குர்ஆன் வசனத்திற்கேற்ப வாதிட்ட சந்தர்ப்பங்களை? மேடை ஏறினாலே என்ன பேசுகின்றோம் என்று பேசத்தெரியாமல் போனதால்தானே அடுத்த மதத்தவர்கள் இவர்களைக் கூண்டில் ஏற்றினார்கள். மேடையில் பேசும் நாகரிகம் தெரியாமல் ஆபாசத்தை கட்டவிழ்த்து விட்டனர். பெருநாள் தொழுகை நடாத்த இடம் தேடியதில் தந்தையை மகன் நிந்தனை செய்தது ஒரு வைரலாக வலைத்தளங்களில் பரவியதே அது எதனால்? முடிந்தால் கூறுங்கள். இப்போதும் கூட எத்தனை அழகிய முறையில் பீ ஜே யில் அடிவருடிகள் பின்னூட்டம் எழுதுகின்றனர் என்று பாருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.